Tamil Live News Updates: நிலவின் மேற்பரப்பு வெப்பநிலை - லேண்டர் அனுப்பிய தகவல்
Aug 27, 2023, 07:15 PM IST
Tamil Live News Updates: இன்றைய (27.08.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.
பனியன் நிறுவனத்தில் தீ
திருப்பூர் வஞ்சி பாளையம் பகுதியில் உள்ள பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பல கோடி மதிப்புள்ள இயந்திரங்கள், ஆடைகள் எரிந்து சேதம்
பட்டியல் இன மாணவர் மீது தாக்குதல் - 4 பேர் கைது
கரூர் உப்பிடமங்கலத்தில் பட்டியல் இன மாணவர் மற்றும் அவரது பாட்டியை தாக்கிய 4 மாணவர்கள் கைது
3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழை
அடுத்த 3 மணி நேரத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, திருவண்ணாமலை, திண்டுக்கல், தேனி ஆகிய 8 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
மதுரை ரயில் தீ விபத்து - நாளையும் விசாரணை
மதுரை அருகே ரயில் தீவிபத்தில் சிக்கியது தொடர்பாக ரயில் வேஎ பாதுகாப்பு ஆணையர் சௌத்ரி நாளையும் விசாரிப்பார் என தெற்கு ரயில்வே அறிவிப்பு
தடகள வீரருக்கு முதல்வர் வாழ்த்து
உலக தடக சாம்பியன் ஷிப் தொடர் ஓட்ட பிரிவில் இறுதி சுற்றுக்கு முன்னேறிய தமிழ்நாட்டை சேர்ந்த வீரர் ராஜேஷ் ரமேஷுக்கு முதல்வர் வாழ்த்து
நல்லாசிரியர் விருது - முதல்வர் வாழ்த்து
தமிழ்நாட்டில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வாகியுள்ள மதுரை, அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி, வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மாலதி ஆகிய இருவருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்! என முதலமைச்சர் சமூகவலைத்தள பதிவு
ரஜினி அரசியல் குறித்து சத்யநாராயணராவ் பேட்டி
சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் ரஜினிக்கு மட்டுமே மக்கள் கொடுத்தது. இனிமேல் அந்த பட்டம் என்பது யாருக்கும் கிடையாது. நடிகர் ரஜினி காந்த் அரசியலுக்கு வரும் வாய்ப்பு இல்லை - ரஜினி சகோதரர் சத்யநாராயணராவ் திருச்சியில் பேட்டி
நிலவின் மேற்பரப்பு வெப்பநிலை - லேண்டர் அனுப்பிய தகவல்
நிலவின் மேற்பரப்பு வெப்பநிலையை ஆய்வு செய்தது குறித்த தகவலை லேண்டர் அனுப்பி உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ரோவரில் உள்ள ChaSTE எனும் ஆய்வு கருவி நிலவின் மேற்பப்பு வெப்பநிலையை ஆய்வு செய்துள்ளது
ரயில் தீ விபத்து - சு.வெ.குற்றச்சாட்டு
மதுரை ரயில் தீ விபத்து ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியத்தால் நடந்துள்ளது; 10 நாட்களாக அவர்கள் பயணித்த நிலையி, ஒரு ரயில்வே நிலையத்தில் கூட உரிய சோதனை நடத்தப்படவில்லை என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் பேட்டி
ஓணம் பண்டிகை - வண்டலூர் பூங்கா இயங்கும் என அறிவிப்பு
ஓணம் பண்டிகையான வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி அன்று சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா இயங்கும் என பூங்கா நிர்வாகம் அறிவிப்பு
13 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
மோடியை எதிர்த்து போட்டி; நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரத்தில் மோடி போட்டியிட்டால் நான் அவரை எதிர்த்துப் போட்டியிடுவேன். தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் சீமான் பேச்சு.
மீன் வரத்து அதிகரிப்பு!
மீன் வரத்து அதிகரிப்பு காரணமாக காசிமேடு மார்கெட்டில் மீன்களின் விலை குறைந்தது. ரூ.1400க்கு விற்பனையான வஞ்சிரம் மீன் இன்று ரூ. 600க்கே கிடைத்ததால் அதிகம் பேர் வாங்கிச் சென்றனர். பாறை, கடம்பா, இறால் ஆகியவற்றின் விலையும் குறைந்தே விற்பனையாகின.
மக்களவை தேர்தலில் கூட்டணி கட்சியை உறுதி செய்த முதல்வர் ஸ்டாலின்!
மக்களவை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி தொடரும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி செய்துள்ளார். கடந்த சில நாட்களாக திமுக-இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டதாக தகவல் வெளியான நிலையில், கூட்டணியை உறுதி செய்துள்ளார்.
கோவையில் இளைஞர் சடலமாக கண்டெடுப்பு!
கோவை தடாகம் பகுதியில் ஆறுமுக கவுண்டனூரை சேர்ந்த சுக சூர்யா என்ற இளைஞர் சடலமாக கண்டெடுப்பு. அவர் உடலின் கழுத்து, கைகளில் சிறுத்தை தாக்கியதற்கான தடயங்கள் இருப்பது தெரியவந்துள்ளதால், சிறுத்தை தாக்கி உயிரிழந்தாரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நிவாரணம் அறிவித்த முதல்வர்!
சென்னை நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு நிவாரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
சதுரகிரி கோயிலுக்கு செல்ல 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி. நாளை 28-ந்தேதி பிரதோஷம் வருவதை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்கள் தாணிப்பாறை கேட்டில் இருந்து மலையேறி சென்று தரிசிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது. காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பயணிகள் மலையேறிச் செல்ல அனுமதிக்கப்படுவர்.
பிரதமர் மோடி கொடுத்த இலக்கு
இந்தியாவின் விண்வெளி திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி கொடுத்த இலக்கை செயல்படுத்த நாங்கள் தயாராக உள்ளோம் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்,
இன்றைய தங்கம் விலை
இன்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே நீடிக்கிறது. அதன்படி சென்னையில் இன்று (ஆக 27) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ. 43,840க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ. 5,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கோவை விழிப்புணர்வு மராத்தான் போட்டி
கோவை பெண்கள் பாதுகாப்பு மற்றும் சம உரிமைகள் குறித்த விழிப்புணர்வு மராத்தான் போட்டி இன்று காலை நடந்தது. பிரமாண்டமாக நடந்த மராத்தான் போட்டியில் பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என சுமார் 5000 பேர் பங்கேற்னர்.
384வது சென்னை தினம்
384வது சென்னை தினத்தையொட்டி சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் 'Ride with Madras memories' என்ற தலைப்பில் குதிரை பூட்டிய சாரட் வண்டி பயணத்தை சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழ்நாட்டில் இருந்து 2 ஆசிரியர்கள் தேர்வு!
மதுரை அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மாலதி ஆகிய இருவரும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ளனர் . செப்டம்பர் 5ம் தேதி டெல்லியில் நடக்கும் நிகழ்ச்சியில் விருது வழங்கப்பட உள்ளது.
104வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள 104வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
மதுரையில் மீண்டும் தீ விபத்து!
மதுரையில் நேற்று தீ விபத்துக்கு உள்ளான ரயிலில், நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் மீண்டும் சிறிய அளவில் தீபற்றி எரிந்ததால் பரபரப்பு. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து தீயை அணைத்தனர்.
இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!
2023 பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த பெண்களுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதின. ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் குவித்த நிலையில், மழையால் ஆட்டம் பாதித்தது. அதன்பின் மாற்றியமைக்கப்பட்ட 42 ரன் என்ற இலக்கை இந்திய அணி 3.3 ஓவர்களில் எட்டி, 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது.
மதுரை ரயில் விபத்து.. 9 பேரின் உடல்கள் சென்னை விமான நிலையம் கொண்டுவரப்பட்டது!
மதுரை ரயில் விபத்தில் உயிரிழந்த 9 பேரின் உடல்கள் மதுரையில் இருந்து 3 ஆம்புலன்ஸ்கள் மூலம் சென்னை விமான நிலையம் கொண்டுவரப்பட்டது. விமானம் மூலம் லக்னோ கெண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நடைபயிற்சி மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின்!
திருவாரூர் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள தெருக்களில் நடைபயிற்சி மேற்கொண்டு, பொதுமக்களுடன் உரையாடி மகிழ்ந்தார்.
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!
திருவோண பண்டிகையை ஒட்டி சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,தர்மபுரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி 2 பேர் பலி
திருவள்ளூர், செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி பார்க்க வந்த 2 மாணவர்கள் நீரில் மூழ்கி பலி. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரியில் சேர இருந்த நிலையில் 2 பேர் உயிரிழப்பு.
முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்
புழல் ஏரியில் நீர்இருப்பு 1909 மில்லியன் கனஅடியாக உள்ளது; நீர்வரத்து 166 கனஅடியாக அதிகரிப்பு; சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றம்
சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 116 மில்லியன் கனஅடியாக உள்ளது; நீர்வரத்து இன்று 71 கனஅடியாக அதிகரிப்பு; வினாடிக்கு 20 கனஅடி நீர் திறப்பு
கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 343 மில்லியன் கனஅடியாக உள்ளது; சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 9 கனஅடி நீர் வெளியேற்றம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. பட்டினம்பாக்கம், காமராஜர் சாலை, அண்ணாசாலை, ஆழ்வார்பேட்டை, வடபழனி, தி,நகரில் மழை. ஓட்டேரி, பெரம்பூர், திருவிக நகர் உள்ளிட்ட வடசென்னை பகுதிகளிலும் அதிகாலை கனமழை.
தெலங்கானாவில் பேரணியில் அமித்ஷா
தெலங்கானாவில் பேரணியில் இன்று அமித்ஷா கலந்துகொள்கிறார்
சென்னை அண்ணா சாலை பகுதிகளில் இன்று போக்குவரத்து மாற்றம்
சென்னை ராயப்பேட்டை ஜீ.பி. சாலையின் இருபுறமும் அனைத்து வகையான வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றது. இந்த சாலையில் இருபுறமும் 4 சக்கர வாகனங்களின் உதிரி பாகங்கள் கடை அமைந்துள்ளது. இதனால் நாள்தோறும் அதிகப்படியான மக்கள் இந்த சாலைக்கு வருகை புரிகின்றனர். எனவே அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே அண்ணாசாலை - ஜீ.பி. சாலையில் இன்று முதல் கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
10 மாவட்டங்களில் கனமழை
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 10 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை
தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 27) பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் 463ஆவது நாளாக அதே விலையிலேயே விற்கப்படுகிறது. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் இன்று முதல் முக்கிய ரயில் சேவைகள் ரத்து!
சென்னையில் ஓரிரு நாட்களில் பறக்கும் ரயில் பணிகள் துவங்க இருக்கும் நிலையில் இன்று முதல் அடுத்த 7 மாதத்திற்கு முக்கிய ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.