தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பெண்களை மையப்படுத்திய கதைகள்.. ஜீ 5 அளிக்கும் முக்கியத்துவம் என்ன? - ஜீ5 தலைமை அதிகாரி மனிஷ் கல்ரா எக்ஸ்க்ளூசிவ் பேட்டி!

பெண்களை மையப்படுத்திய கதைகள்.. ஜீ 5 அளிக்கும் முக்கியத்துவம் என்ன? - ஜீ5 தலைமை அதிகாரி மனிஷ் கல்ரா எக்ஸ்க்ளூசிவ் பேட்டி!

Nov 08, 2024, 03:55 PM IST

google News
பெண்களை மையப்படுத்திய கதைகளுக்கும், பெண் படைப்பாளிகளுக்கும் ஜீ 5 ஓடிடி தளம் அளிக்கும் முக்கியத்துவம் என்ன? - ஜீ5 தலைமை அதிகாரி மனிஷ் கல்ரா எக்ஸ்க்ளூசிவ் பேட்டி!
பெண்களை மையப்படுத்திய கதைகளுக்கும், பெண் படைப்பாளிகளுக்கும் ஜீ 5 ஓடிடி தளம் அளிக்கும் முக்கியத்துவம் என்ன? - ஜீ5 தலைமை அதிகாரி மனிஷ் கல்ரா எக்ஸ்க்ளூசிவ் பேட்டி!

பெண்களை மையப்படுத்திய கதைகளுக்கும், பெண் படைப்பாளிகளுக்கும் ஜீ 5 ஓடிடி தளம் அளிக்கும் முக்கியத்துவம் என்ன? - ஜீ5 தலைமை அதிகாரி மனிஷ் கல்ரா எக்ஸ்க்ளூசிவ் பேட்டி!

ஓடிடியின் வளர்ச்சிக்கு பிறகு, பிரபலமான நடிகர்களுக்கான வாய்ப்புகள் இரு மடங்கு அதிகமான போதும், படைப்பில் வித்தியாசத்தன்மை, திரைக்கதையில் புதிய உத்திகள், உண்மைக்கு நெருக்கமான கதை களங்களை தேடுதல் உள்ளிட்டவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு படைப்பாளர்கள் தள்ளப்பட்டனர். இது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் படைப்பாற்றல் மிகுந்த இயக்குநர்கள், திறமையான நடிகர்கள் அடையாளப்படுவதற்கு ஓடிடி தளங்கள் உதவிக்கரம் நீட்டின.

இப்படி திரைத்துறையில் மிக முக்கிய மாற்றத்தை ஏற்படுத்திய ஓடிடி தளங்களிடம் மக்கள் எதிர்பார்ப்பது என்ன? தற்போதைய வெப் சீரிஸ் தயாரிப்பில் படைப்பாளர்கள், நடிகர்கள் உள்ளிட்டவர்களிடம் ஓடிடி தளங்கள் எதிர்பார்ப்பது என்ன? எந்த மாதிரியான கதைகளுக்கு நல்ல ரீச் கிடைக்கிறது உள்ளிட்டவை குறித்து ஜீ 5 ஓடிடி தலைமை வணிக அதிகாரி மனிஷ் கல்ரா உடன் ஹிந்துஸ்தான் தமிழ் சார்பாக பிரத்யேகமாக உரையாடினேன். அந்த உரையாடலில் இருந்து கிடைத்த தகவல்கள் இங்கே!

தி கிரேட் இந்தியன் கிச்சன் போஸ்டர்

கேள்வி: பெண்களை மையமாக கொண்ட கதைக்களங்களுக்கு ஜீ 5 அளிக்கும் பங்கு என்ன?

பெண்களை மையமாகக்கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்கள் ஜீ 5 ஓடிடி தளத்திற்கு இன்றியமையாத ஒன்றாகும். காரணம், இது பார்வையாளர்களை கவரும் வகையில் பல்வேறு தரப்பட்ட பெண்களின் அனுபவங்களை வழங்குகிறது.

பெண்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகள், சவால்கள் உள்ளடக்கிய உண்மைக்கதைகளை உருவாக்குவது எங்களின் கடமையாகும். லவ் சித்தாரா, அயலி, தி கிரேட் இந்தியன் கிச்சன், கோலமாவு கோகிலா உள்ளிட்டவை பெண்களை மையப்படுத்தி நாங்கள் தேர்ந்தெடுத்த கதைகள் ஆகும்.

பெண் படைப்பாளிகளுடன் பணியாற்ற விருப்பம்

குறிப்பாக பெண் படைப்பாளிகளுடன் இணைந்து பணியாற்றுவதை நாங்கள் மிகவும் விரும்புகிறோம். நாங்கள் அவர்களுக்கு, களத்தை உருவாக்கிக்கொடுத்து அவர்களிடம் இருந்து நுணுக்கமான கதைகள் வெளியே வருவதற்கு உதவியாக இருக்கிறோம்.

மனிஷ் கல்ரா

குறிப்பாக இந்திய மகளிர் தினத்தை முன்னிட்டு "தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்" தயாரிப்பாளர் குனீத் முங்காவைக்கொண்டு #நோ நாரி (பெண்) நோஸ்டோரி என்ற பெயரில் விழிப்புணர்வு பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. இது சோசியல் மீடியாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

கேமராவுக்கு முன்பும் சரி, பின்பும் சரி, இது போன்ற முன்னெடுப்புகளை முன்னெடுப்பதன் வாயிலாக, நமது கதை சொல்லல் முறையிலும் ஒரு வடிவத்தைக் கொண்டு வர முயற்சி செய்கிறோம். இதில், பெண்களுக்கான அதிகாரம் கிடைப்பது மட்டுமல்லாமல், எங்களின் இருக்கும் கதைகளின் தரத்தையும் மேம்படுத்துகிறது. 

ஜீ 5 வளர்ந்து வரும் மற்றும் பிரபலமான இயக்குநர்களிடம் எந்த மாதிரியான கதைகளை எதிர்பார்க்கிறது?

ஜீ 5 வளர்ந்து வரும் மற்றும் வெற்றிப்பெற்ற இயக்குநர்களிடம் இருந்து தனித்துவம் மற்றும் உண்மைக்கு நெருக்கமான, அதே நேரத்தில், நம் நாட்டில் பரந்து பட்டு கிடக்கும் வேறுபட்ட பார்வையாளர்களை ஈர்க்கும் விதமான கதைகளை எதிர்பார்க்கிறது.

வெப் சீரிஸ் தயாரிப்பை பொருத்தவரை, கதை சொல்லலில் தேர்ந்த திறமை, படைப்பாற்றல் மற்றும் தயாரிப்பு தொடர்பான விவகாரங்களை கையாள்வது உள்ளிட்டவற்றை படைப்பாளர்கள் வலுபடுத்த வேண்டும். கதை சொல்லலில் புதிய உத்தி, புதிய கதைக்களம் மற்றும் பார்வையாளர்களை எமோஷனலாக என்கேஜாக வைத்திருக்கும் விஷயங்களை ஜீ 5 அவர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறது. இறுதியாக நல்ல கன்டென்டை கொடுப்பதே ஜீ 5 யின் அடிப்படையான நோக்கம் என்றாலும், ஜீ 5 க்கு மீண்டும் வரும் அளவிலான என்கேஜிங்கான கதைகளையே நாங்கள் எதிர்பார்க்கிறோம்.” என்று பேசினார். 

 

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை