தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Zee Tamil: அதல பாதாளத்துக்கு தள்ளப்பட்ட பாரதி கண்ணம்மா 2.. மாஸ் காட்டிய ஜீ தமிழ் - ரேட்டிங் நிலவரம் இதோ!

Zee Tamil: அதல பாதாளத்துக்கு தள்ளப்பட்ட பாரதி கண்ணம்மா 2.. மாஸ் காட்டிய ஜீ தமிழ் - ரேட்டிங் நிலவரம் இதோ!

Aarthi V HT Tamil

May 06, 2023, 01:05 PM IST

google News
ஜீ தமிழ் ரேட்டிங் நிலவரம் பற்றி பார்க்கலாம்.
ஜீ தமிழ் ரேட்டிங் நிலவரம் பற்றி பார்க்கலாம்.

ஜீ தமிழ் ரேட்டிங் நிலவரம் பற்றி பார்க்கலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒவ்வொரு வாரமும் எந்த அளவிற்கு ரேட்டிங்கை பெற்று வருகிறது என்பது குறித்த விவரங்களை ஒவ்வொரு வாரமும் பார்க் நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த வாரத்திற்கான ரேட்டிங் விவரங்கள் வெளியிடப்பட்டன. இந்த ரேட்டிங் நிலவரப்படி டிரெயின் டைமில் நான்கு சீரியல்களை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள்.

ஏழு மணி அளவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஆஹா கல்யாணம் சீரியலை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது ஜீ தமிழின் அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்.

இரண்டாவதாக 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலை பின்னுக்கு தள்ளி உள்ளது.

அதேபோல் 10 மணிக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா 2 சீரியலை பின்னுக்கு தள்ளியுள்ளது.

இந்த சீரியல்களை தொடர்ந்து நான்காவது 10.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ரஜினி சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தென்றல் வந்து என்னை தொடும் என்ற சீரியலை பின்னுக்கு தள்ளியுள்ளது.

ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாக தொடங்கிய பாரதி கண்ணம்மா சீசன் 2 சீரியல் முதலில் டிஆர்பியில் 6 புள்ளிகளுடன் ஓபனிங்கை தொடங்கிய இந்த சீரியல் தற்போது 2.54 என்ற ரேட்டிங்குடன் அதல பாதாளத்திற்கு தள்ளப்பட்டு இருப்பதை ரசிகர்கள் கண்டபடி கலாய்த்து வருகின்றனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை