தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Irfan Meet Vijay: ‘அவர பார்த்த அந்த நொடி, அப்படியே ஷாக் ஆயிட்டேன்.. அவருக்காக டைரி’ - விஜயை சந்தித்தது குறித்து இர்ஃபான்

Irfan Meet Vijay: ‘அவர பார்த்த அந்த நொடி, அப்படியே ஷாக் ஆயிட்டேன்.. அவருக்காக டைரி’ - விஜயை சந்தித்தது குறித்து இர்ஃபான்

Oct 16, 2023, 05:28 PM IST

google News
காஷ்மீரில் விஜயை சந்தித்த அனுபவம் குறித்து பிரபல யூடியூபர் இர்ஃபான் பேசி இருக்கிறார்.
காஷ்மீரில் விஜயை சந்தித்த அனுபவம் குறித்து பிரபல யூடியூபர் இர்ஃபான் பேசி இருக்கிறார்.

காஷ்மீரில் விஜயை சந்தித்த அனுபவம் குறித்து பிரபல யூடியூபர் இர்ஃபான் பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது, “பொதுவாக எனக்கு டைரி எழுதும் பழக்கம் கிடையாது. ஆனால், விஜய் சாரை சந்தித்த அன்றைய தினம் முழுவதிலும் நடந்த ஒவ்வொரு விஷயத்தையும் நான் எழுதினேன். 

அது அழகான நேரம் என்றுதான் சொல்ல வேண்டும். காஷ்மீர் சென்ற போது, விஜய் சார் படப்பிடிப்பில் இருப்பார். அவரை தொந்தரவு செய்யக்கூடாது என்பது தெரிந்தாலும், அவரை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்து கொண்டே இருந்தது. அங்குள்ள ஒரு வீட்டில் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. நானும் விஜயின் மேனஜர் ஜெகதீஸூம் அவரை சந்திக்க சென்றோம். விஜய் சார் ஷூட் முடித்து கேரவனுக்கு வந்து கொண்டிருந்தார். 

அவர் அருகில் வந்தார். அவரை பார்த்த உடன் அப்படியே நான் ஷாக்காகி நின்று விட்டேன். நான் மிகவும் எமோஷன் ஆகி விட்டேன். அவரும் என்னை இமிடேட் செய்வது போல, ஆ... என்று சொன்னார். 

உடனே அவரிடம் சார் என்னைத் தெரியுமா? என்று கேட்டேன். அவர் தெரியும் என்று சொன்னார். நாம் திரைப்படங்களில் பார்த்து ரசித்த ஒருவர், நம்மையும் பார்த்து இருக்கிறார் என்று சொன்ன போது, அது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. அதன் பின்னர் நான், விஜய் சார் உள்ளிடோர் அப்படியே கேரவனுக்கு நடந்து சென்றோம். 

அவர் அவ்வளவு டயர்டாக இருந்தார். அவருடன் போட்டோ எடுக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. ஆனால் அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நான் கேட்கவில்லை. அதன் பின்னர் சாப்பிட்டு விட்டு, ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றோம். விஜய் சார் நடித்ததை நான் நேரில் பார்த்தேன் பார்த்தேன். 

அப்படி இருந்தது. என்னால் நம்பவே முடியவில்லை. லோகேஷ் அவரே வந்து என்னிடம் பேசினார். அவருக்கு நான், மாநகரம் திரைப்படத்தில் இருந்து ஃபேனாக இருக்கிறேன். இதனிடையே விஜய் சார் என்னை நோக்கி வந்தார். அவரை பார்க்கும் போது எனக்கு ஏதோ பேராசிரியரை பார்ப்பது போல இருந்தது. அவ்வளவு பயம். அப்படியே வந்து என் மீது கையை போட்டு போட்டோ எடுங்க என்று சொன்னார். போட்டோ எடுத்தேன். என்னை கட்டிப்பிடித்து. ஆல் தி பெஸ்ட் என்று சொன்னார்.” என்று பேசினார். 

நன்றி: இர்ஃபான்!

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி