தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Youtuber Irfan: சட்டென எல்லாம் மாறியது..! இப்படியொரு சந்தோஷம் - ஹேப்பி மோடில் யூடியூப்பர் இர்பான்

Youtuber Irfan: சட்டென எல்லாம் மாறியது..! இப்படியொரு சந்தோஷம் - ஹேப்பி மோடில் யூடியூப்பர் இர்பான்

Jul 24, 2024, 02:58 PM IST

google News
ஹேப்பி மோடில் இருக்கும் யூடியூப்பர் இர்பான் தந்தையாகி இருப்பது குறித்த மகிழ்ச்சியை சட்டென எல்லாம் மாறியது என இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
ஹேப்பி மோடில் இருக்கும் யூடியூப்பர் இர்பான் தந்தையாகி இருப்பது குறித்த மகிழ்ச்சியை சட்டென எல்லாம் மாறியது என இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

ஹேப்பி மோடில் இருக்கும் யூடியூப்பர் இர்பான் தந்தையாகி இருப்பது குறித்த மகிழ்ச்சியை சட்டென எல்லாம் மாறியது என இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

யூடியூப்பில் ஃபுட் ரீவிவராக இருப்பவர் இர்பான். கடந்த ஆண்டில் இவர் ஆலியா என்ற பெண்ணை திருமணம் செய்தார். இதையடுத்து இர்பான் தற்போது தந்தையாகியுள்ளார்.

இர்பான் - ஆலியா தம்பதிகளுக்கு இன்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது தாயும், சேயும் நலமாக இருக்கிறார்கள்.

இப்படி ஒரு சந்தோசம் கெடச்சுருக்கு

தந்தையாகி இருப்பது குறித்து தகவலை இர்பான் தனது இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார். அத்துடன் குழந்தையின் கைவிரல் தனது கைகளை பற்றியவாறு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, "சட்டென எல்லாம் மாறிவிட்டது! என் இளவரசி இங்கே இருக்கிறாள், என் பெண் குழந்தை!

என்ன நல்லது பண்ணி இருக்கேன்னு தெரியல. எனக்கு இப்படி ஒரு சந்தோசம் கெடச்சுருக்கு. இதுக்கு, இப்படியொரு அதிசயத்தை நிகழ்த்தியதுக்காக மனைவிக்கு எப்படி கைமாறு செய்யப்போகிறேனோ.

எங்கள் குடும்பம் வளர்ந்துள்ளது! அல்ஹம்துலில்லாஹ்!" என்று உணர்ச்சி பொங்க பதிவிட்டுள்ளார்.

சர்ச்சையில் சிக்கிய இர்பான்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆலியா கர்ப்பாகி இருப்பதை யூடியூப் விடியோ மூலம் தொரிவித்திருந்தார் இர்பான். அதைத்தொடர்ந்து சில வாரங்கள் கழித்து தனது பிறக்கு போகும் குழந்தையின் பாலினம் குறித்து குடும்பத்தினர் முன்னிலையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்து அறிவித்தார். அதையும் விடியோவாக பகிர்ந்து லைக்குகளை குவித்தார்.

குழந்தை பாலினம் குறித்து இர்பான் வெளியிட்ட விடியோ சர்ச்சைக்குள்ளானது. இந்தியாவில் வயிற்றில் வளரும் சிசுவின் பாலினத்தை கண்டறிவடி சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாக இருந்து வருகிறது. எனவே இந்த விவகாரம் தொடர்பாக அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருத்துகளும், வாதங்களும் முன் வைக்கப்பட்டன.

பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் குறித்து கண்டறியவும், அதை அறிவிக்கவும், நமது நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சட்டத்தை மீறி, தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்த யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்க, சுகாதாரத்துறை பரிந்துரை செய்தது.

விளக்கம் கேட்டு நோட்டீஸ்

முன்னதாக, அவர் வெளியிட்ட விடியோவில், தனக்கு பெண் குழந்தை தான் வேண்டும் என சொல்கிறார். அவரது மனைவி ஆலியா தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்று சொல்கிறார். இருவருக்கும் இடையே பலூன் சுடும் போட்டி நடத்தப்பட்டது. அதில் இர்பான் தான் வெற்றி பெற்றார். இறுதியாக ஸ்கேன் முடிவுகளின் படி தங்களுக்கு பெண் குழந்தை தான் பிறக்க உள்ளது என்பதை இர்பான் அறிவித்தார்.

இந்த விடியோ, பாலினம் அறிவிப்பு தொடர்பாக இர்பானிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதோடு, காவல்துறையும் நடவடிக்கை எடுக்கலாம் என்று தகவல்கள் வெளியானது. இர்பானிடம் விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழுவை சுகாதாரத்துறை அமைத்தது. இர்பான் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதை இந்தக்குழு பரிந்துரையாக அளிக்கும் எனவும் தகவல்கள் வெளியானது.

விடியோவை நீக்கிய இர்பான்

இந்த பாலின அறிவிப்பு விடியோ சர்ச்சைக்குள்ளாகி, சட்ட நடவடிக்கை வரை செல்வதாக தகவல்கள் உலா வந்த நிலையில் இர்பான் மன்னிப்பு கோரினார். தன்னை தொடர்பு கொண்ட அதிகாரிகளிடம், நான் விடியோ வெளியிட்டது தவறுதான். அற்காக நான் ஒரு மன்னிப்பு கடிதம் வெளியிட தயாராக இருக்கிறேன்.

மன்னிப்பு விடியோவும் வெளியிடுகிறேன் என்று தெரிவித்தார். ஆனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர் மீதான நடவடிக்கை தொடரும் என தெரிவித்தனர். பின்னர் சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் இர்பான் வீட்டில் வைத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் சர்ச்சைக்குரிய அந்த விடியோவை தனது யூடியூப் சேனலில் இருந்து இர்பான் நீக்கினார். இதையடுத்து தற்போது அவர் விடியோவில் கூறியது போல் பெண் குழந்தை போல் பிறந்திருக்கும் நிலையில், அதை முறையாக அறிவித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி