தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actor Yash: ரூ. 150 கோடி சம்பளமாக பெறும் கேஜிஎஃப் யாஷ்! எந்த படத்துக்காக தெரியுமா?

Actor Yash: ரூ. 150 கோடி சம்பளமாக பெறும் கேஜிஎஃப் யாஷ்! எந்த படத்துக்காக தெரியுமா?

Oct 26, 2023, 04:59 PM IST

google News
கேஜிஎஃப் சீரிஸ் படங்களில் அதிரடி ஆக்‌ஷனில் மிரட்டிய நடிகர் யாஷ் வில்லனாக நடிப்பதற்காக ரூ. 150 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேஜிஎஃப் சீரிஸ் படங்களில் அதிரடி ஆக்‌ஷனில் மிரட்டிய நடிகர் யாஷ் வில்லனாக நடிப்பதற்காக ரூ. 150 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேஜிஎஃப் சீரிஸ் படங்களில் அதிரடி ஆக்‌ஷனில் மிரட்டிய நடிகர் யாஷ் வில்லனாக நடிப்பதற்காக ரூ. 150 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர யாஷ். இவர் கேஜிஎஃப் படம் மூலம் உலக அளவில் பேமஸ் ஆனார். அந்தப் படத்தில் அலட்டிக்கொள்ளாத வகையில் நடிப்பிலும், ஆக்‌ஷனிலும் மிரட்டினார்.

இதையடுத்து யாஷ் பாலிவுட் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கும் ராமாயணம் படத்தில் ராவணனாக நடிக்கவுள்ளார். ராமாயண கதை 3 பாகங்களாக உருவாக்கப்பட இருப்பதாக கூறப்படும் நிலையில், படத்தில் ரன்பீர் கபூர், ராமராகவும், சாய் பல்லவி சீதையா நடிக்கவுள்ளனர்.

இதையடுத்து படத்தில் முக்கிய கதாபாத்திரமாக ராவணனாக கன்னட நடிகர் யாஷ் நடிக்க இருக்கிறார். படத்தில் ராவணனாக நடிக்க நடிகர் யாஷ் சம்பளமாக ரூ.150 கோடி கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பளத்தை தருவதற்கு படக்குழுவினரும் சம்மதம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் யாஷ் கால்ஷீட் எத்தனை நாள்கள் தேவைப்படுகிது என்பதை பொறுத்து அவரது சம்பளத்திலும் மாற்றம் இருக்கும் எனவும் விவரமறிந்தவர்கள் மூலம் தெரியவந்துள்ளது.

படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்குகிறது. ஆனால் யாஷ், ஜூலை மாதம் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறாராம். யாஷ் தொடர்பான காட்சிகள் இலங்கையில் படமாக்கப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி