Vijay Politics: மாணவர்களுக்கு விஜய் வழங்கும் ஊக்கத்தொகை;அடையாள அட்டை கொடுக்கும் பணி தீவிரம்!
Jun 11, 2023, 02:59 PM IST
பாராளுமன்ற தேர்தலின் போது தன்னுடைய கட்சியை அறிமுகப்படுத்துவார் என்றும் 2026 ஆம் ஆண்டு நடக்க விருக்கும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் களம் காண இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
நடிகர் விஜய் தன்னுடைய படங்கள் ரிலீஸ் ஆகுவதற்கு முன்னர் அந்தப்படம் தொடர்பான நிகழ்ச்சிகளில் அவர் பேசும் அரசியல் சார்ந்த விஷயங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது. படங்களிலும் அரசியல் சார்ந்த வசனங்கள் அனல் பறந்தது. இதன் மூலம் அவர் விரைவில் அரசியலுக்கு வரவிருக்கிறார் என்ற தகவல்கள் கோலிவுட் வட்டாரத்தில் பரபரக்கத்தொடங்கின.
அதற்கு ஏற்றார் போல நடிகர் விஜயும் தன்னுடைய ரசிகர்கள் மூலம் அம்பேத்கர் பிறந்தநாளன்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கச் செய்தல், உலக பட்டினி தினத்தில் 234 தொகுதிகளிலும் ‘தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம்’ திட்டம் மூலம் ஏழைகளுக்கு மக்கள் இயக்க நிர்வாகிகள் மூலம் மதிய உணவு வழங்க வைத்தல், ரத்ததானம் செய்ய வைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து அரசியல் பிரவேசத்திற்கான காய்களை நகர்த்தி வருகிறார்.
அந்த வரிசையில் 10 மற்றும் 12 வகுப்பில் சாதனை படைத்த மாணவர்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஊக்கத்தொகை அளிப்பட இருப்பதாக கூறி விஜய் தரப்பில் இருந்து சமீபத்தில் அறிக்கை வெளியிடப்பட்டது. தொகுதி வாரியாக முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. நடிகர் விஜய் கல்வி விருது வழங்கும் விழாவில் 6 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு நடிகர் விஜய் ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழை வழங்க உள்ளார்.
இந்த நிலையில் விருது பெறும் மாணவ, மாணவிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டு இருக்கிறது. தகவல்களின் படி நடிகர் விஜய் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது தன்னுடைய கட்சியை அறிமுகப்படுத்துவார் என்றும் 2026 ஆம் ஆண்டு நடக்க விருக்கும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் களம் காண இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
டாபிக்ஸ்