தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karungali Malai: தனுஷ் முதல் லோகேஷ் வரை.. கட்டம் போட்டு காக்கும் கருங்காலி மாலை.. அப்படி என்ன ஸ்பெஷல் அதில்!

Karungali Malai: தனுஷ் முதல் லோகேஷ் வரை.. கட்டம் போட்டு காக்கும் கருங்காலி மாலை.. அப்படி என்ன ஸ்பெஷல் அதில்!

Jul 21, 2023, 05:30 AM IST

google News
கருங்காலி மாலையின் பயன்கள் என்னென்ன என்பதையும் அவற்றின் சக்தி எப்படியானது என்பதை பற்றியுm இங்கு பார்க்கலாம்
கருங்காலி மாலையின் பயன்கள் என்னென்ன என்பதையும் அவற்றின் சக்தி எப்படியானது என்பதை பற்றியுm இங்கு பார்க்கலாம்

கருங்காலி மாலையின் பயன்கள் என்னென்ன என்பதையும் அவற்றின் சக்தி எப்படியானது என்பதை பற்றியுm இங்கு பார்க்கலாம்

ஆன்மீகத்தில் பல மரங்களை மிகவும் முக்கியமான மரங்களாக பார்க்கிறார்கள். அந்த வகையில் மிகவும் முக்கியமானதொரு மரமாக இருப்பது கருங்காலி மரம். கருங்காலி மரமானது பிரபஞ்சத்தில் இருக்கக்கூடிய பாசிட்டிவான எனர்ஜியை கிரகித்துக் கொண்டு வைத்திருக்கிறது.  

ஆகையால் அந்த மரத்தின் பாகங்களை நாம் எந்த வடிவத்தில் பயன்படுத்தினாலும் அது நமக்கு ஒரு பாசிட்டிவான எனர்ஜியை கொடுக்கும். இதனால்தான் நிறைய திரை பிரபலங்கள், பிரபலங்கள், ஆன்மீகவாதிகள் உள்ளிட்டோர் கருங்காலி மரத்தை வெவ்வேறு வடிவங்களில் தங்களுடன் வைத்துக் கொள்கிறார்கள். 

கருங்காலி மரத்தின் பாகங்களை பலர் பல்வேறு வடிவங்களில் உபயோகப்படுத்துகிறார்கள். ஆனால் பெரும்பான்மையானோர் அதனை மாலை வடிவில் பயன்படுத்துகிறார்கள்

குறிப்பாக இப்போது ட்ரெண்டிங்கில் இருக்கக்கூடிய தனுஷ் லோகேஷ் கனகராஜ், சூரி உள்ளிட்ட பல திறை பிரபலங்கள் இந்த மாலையை அணிவித்துக் கொள்கின்றனர். காரணம், ஒன்று இது ஸ்டைலாகவும் இருக்கும் இன்னொன்று இது நமக்கு தேவையான பாசிட்டிவான எனர்ஜியையும்  கொடுக்கும்

இதை அணிவதால் அவர்களுடைய மனமானது மிகவும் சாந்தமாக இருக்கும். அது அதிகமான மன அழுத்தம் கொடுக்கக்கூடிய சூழ்நிலையாக இருந்தாலும் சரி அல்லது வேறு விதமான சூழ்நிலையாக இருந்தாலும் சரி அது நம் மனதை கொஞ்சம் சாந்தமாக வைக்க உதவும். 

 கருங்காலி மாலை அணிந்திருக்கும் ஒருவரிடம் எதிர்மறையான எண்ணத்தோடு அணுகும் பொழுது அந்த எண்ணத்தில் இருந்து சம்பந்தப்பட்டவரை பாதுகாக்கும்.

அதே போல சம்பந்தப்பட்டவருக்கு யாராவது ஒருவர் செய்வினை வைத்தாலும் கூட இந்த கருங்காலி மாலை ஆனது அவர்களை அதிலிருந்து காப்பாற்றும். இந்த கருங்காலி மாலைக்கு குறிப்பிட்ட ராசியோ,மதமோ,ஆண் பெண் என்ற இன வேறுபாடோ என எதுவும் கிடையாது. யார் வேண்டுமானாலும் இந்த கருங்காலி மாலையை அணிந்து கொள்ளலாம். ஆனால் ஒரே ஒரு கண்டிஷன் இருக்கிறது அது என்னவென்றால் கருங்காலி மாலையை இரவில் படுக்கும் பொழுது கழட்டி வைத்து படுக்க வேண்டும். மீண்டும் காலையில் குளித்துவிட்டு அந்த கருங்காலி மாலையை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி