ஷரத், அமன், சரண்.. இறுதிப்போட்டிக்கான அரியாசனம் போர்.. நாற்காலி யாருக்கு? - உச்சக்கட்ட பதற்றத்தில் ‘சரிகமப’
Oct 05, 2024, 06:36 PM IST
Saregamapa Tamil: ‘சரிகமப’ நிகழ்ச்சியில் இறுதி போட்டிக்கான போரில் அரியாசனம் யார் கைக்கு செல்ல இருக்கிறது என்பதை இங்கே பார்க்கலாம்!
பைனலுக்கு முன்னேற போகும் அடுத்தடுத்த போட்டியாளர்கள் யார்? சரிகமப-ல் இந்த வாரம் காத்திருக்கும் சர்ப்ரைஸ் சம்பவம்.!!
தேர்வான 3 பேர்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி சரிகமப. விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நான்காவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது.
இதுவரை கடந்த மூன்று வாரங்களில் 3 பேர் பைனலிஸ்ட் போட்டியாளர்களாக இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இதனை தொடர்ந்து இந்த வாரம் விலேஜ் போல்க் ( Village Folk ) ரவுண்ட் நடைப்பெற உள்ளது.
கிராமத்தை மையமாக கொண்ட பாடல்கள்
இந்த ரவுண்டில் போட்டியாளர்கள் கிராமத்தை மையமாக கொண்ட பாடல்களை தேர்வு செய்து பாடி அசத்த உள்ளனர். நிகழ்ச்சியின் இறுதியில் ஷரத், அமன், சரண் என மூன்று போட்டியாளர்களில் இறுதி சுற்றுக்கு முன்னேற போவது யார் என நடுவர்கள் அறிவிக்க உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
இதுவரை வாரத்திற்கு ஒரு போட்டியாளர் பைனலுக்கு அனுப்பப்பட்டு வந்த நிலையில் இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் பைனலுக்கு செல்ல இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதுவும் யாரும் எதிர்பாராத சர்ப்ரைஸாக ஐந்தாவது போட்டியாளர் தேர்வு இருக்கும் என சொல்லப்படுகிறது.
பைனலிஸ்ட் போட்டியாளராக இறுதி சுற்றுக்கு முன்னேற போகும் அந்த போட்டியாளர்கள் யார் யார்? என்பதை அறிந்து கொள்ள சரிகமப நிகழ்ச்சியை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
அர்ச்சனா தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீனிவாஸ், விஜய் ஸ்ரீ பிரகாஷ், கார்த்திக் மற்றும் சைந்தவி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வீரா. விறுவிறுப்பாக காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலின் சண்டே ஸ்பெஷல் எபிசோட் அக்டோபர் 6ஆம் தேதி மதியம் 2:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இந்த சண்டே ஸ்பெஷல் எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்தும் பார்க்கலாம்
ஊர் மானத்தை காப்பாற்ற நடக்கும் மல்யுத்த போட்டி
அதாவது, ராஜாவின் தங்கை ப்ரியாவை கல்யாணத்துக்காக ராமசந்திரன் குடும்பம் மொத்தமும் சொந்த ஊருக்கு வந்திருக்க, ராஜாவின் குடும்பம் மாறன் வீராவை ஆரத்தி எடுத்து அமோக வரவேற்பு கொடுத்து உபசரிக்கின்றனர்.
அடுத்து ப்ரியா அண்ணன்களை அழைத்து கொண்டு ஊரை சுற்றி காட்ட கிளம்புகிறாள். அடுத்து இரண்டு ஊருக்கும் இடையே இருக்கும் பிரச்னை, மல்யுத்த போட்டி ஆகியவை பற்றி தெரிய வருகிறது. இந்த மல்யுத்த போட்டியில் ராஜாவின் ஊர் ஜெயித்து மானத்தை காப்பாற்றிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
இந்த சமயத்தில் போட்டி நடக்கும் இடத்தில வீரா விளையாட்டாக மாறனை பிடித்து உள்ளே தள்ளி விட மாறன் மல்யுத்த போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. முதலில் மாறன் சரமாரியாக அடிவாங்க ராமசந்திரன் இவனால் ஊர் மானமே போய்டும் போல.அவன் ஜெயித்தா தான் வீட்டுக்கு வரணும் என்று சொல்லி விட மாறன் முழுவீச்சில் விளையாடி கோப்பையை கை பற்றுகிறான்.
பிரியா - சந்தோஷ் இடையிலான காதல்
அதை தொடர்ந்து பிரியாவுக்கும் பிரச்னையில் இருக்கும் ஊர் தலைவர் பையன் சந்தோஷுக்கும் இடையேயான காதல் விஷயம் மாறன், வீராவுக்கு தெரிய வர வீரா இருவரையும் சேர்த்து வைப்பதாக வாக்கு கொடுக்கிறாள்.
அதன் பிறகு நடந்தது என்ன? மாறன் வீரா கொடுத்த வாக்கு என்னாவது? ஊர் பிரச்னை முடிவுக்கு வந்ததா? இல்லையா? என்ற கோணத்தில் வீரா சண்டே ஸ்பெஷல் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது. எனவே வரும் ஞாயிறு மதியம் 2:30 மணிக்கு வீரா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
வீரா சீரியல்
கடந்த பிப்ரவரி 2024 முதல் வீரா சீரியல் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பிரதான கதாபாத்திரமான வீராமாறன் ஆக நடிகை வைஷ்ணவி அருள்மொழி, மாறன் ஆக அருண் கிரிஸர் நடித்து வருகிறார்கள்.
இந்த சீரியலுக்கு முதலில் சிவமுருகன் டெக்ஸ்டைல் என்று பெயர் வைத்திருந்தனர். ஆனால் வீரா என்ற பெயர் மாற்றப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. ஜீ தமிழில் அதிகம் பேரால் பார்க்கப்படும் சீரியல்களில் ஒன்றாக வீராவும் இருந்து வருகிறது. இந்த சீரியல் ஜீ5 ஓடிடி தளத்திலும் ஸ்டிரீமிங் ஆகி வருகிறது.
ஜீ தமிழ் பிற சீரியல்கள்
ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் பிற சீரியல்களில் ரசிகர்களை கவர்ந்த சீரியலாக கார்த்திகை தீபம், நினைத்தேன் வந்தாய் ஆகிய சீரியல்கள் இருக்கின்றன.
இதில் கார்த்திகை தீபம் சீரியம் ப்ரைம் டைமான இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது. அதேபோல் மாலை நேரத்தில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியலாக நினைத்தேன் வந்தாய் இருக்கிறது. இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
டாபிக்ஸ்