தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Goat Movie: வெங்கட்பிரபு இயக்கத்தில் தி கோட் படத்தில் நடிச்சது எப்படி இருந்தது?-நடிகர் மோகன் பதில்

Goat Movie: வெங்கட்பிரபு இயக்கத்தில் தி கோட் படத்தில் நடிச்சது எப்படி இருந்தது?-நடிகர் மோகன் பதில்

Manigandan K T HT Tamil

Sep 05, 2024, 04:33 PM IST

google News
Mohan: ஒரு சினிமாவுக்கு இயக்குநரும், தயாரிப்பாளருமே முக்கியம். இயக்குநர் அனைத்துத் துறைகளையும் கன்ட்ரோலில் வைக்க வேண்டும். தயாரிப்பாளர் இருந்ததால் தான் எல்லாமே. எனவே இவர்கள் இருவரைத் தான் நான் முக்கியமான தூண்களாக கருதுகிறேன்.
Mohan: ஒரு சினிமாவுக்கு இயக்குநரும், தயாரிப்பாளருமே முக்கியம். இயக்குநர் அனைத்துத் துறைகளையும் கன்ட்ரோலில் வைக்க வேண்டும். தயாரிப்பாளர் இருந்ததால் தான் எல்லாமே. எனவே இவர்கள் இருவரைத் தான் நான் முக்கியமான தூண்களாக கருதுகிறேன்.

Mohan: ஒரு சினிமாவுக்கு இயக்குநரும், தயாரிப்பாளருமே முக்கியம். இயக்குநர் அனைத்துத் துறைகளையும் கன்ட்ரோலில் வைக்க வேண்டும். தயாரிப்பாளர் இருந்ததால் தான் எல்லாமே. எனவே இவர்கள் இருவரைத் தான் நான் முக்கியமான தூண்களாக கருதுகிறேன்.

The GOAT: கோட் படத்தில் நடிச்சது எப்படி இருந்தது என நடிகர் மோகன் கலாட்டா பிளஸ் யூ-டியூப் சேனலுக்கு நடிகர் மோகன் சில மாதங்களுக்கு முன் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அந்தப் பேட்டியில் அவர் கூறியிருப்பதை பார்ப்போம்: கோட் படத்தில் நடித்தது எப்படி இருந்தது என்ற கேள்விக்கு எனக்கு அந்த செட்டில் எல்லோரையும் தெரியும். பெரிய ப்ரொடக்ஷன்ஸ் தான் என்றாலும் எனக்கு அனைவருடனும் பழகுவதற்கு இனிமையாக இருந்தது. வெங்கட்பிரபுவை எனக்கு நீண்ட காலமாகவே தெரியும். தளபதி விஜய் மிகவும் அமைதியானவர். எனக்கு செட்டில் மிகவும் நன்றாக இருந்தது. எனக்கு கதை பிடித்திருந்ததால் தான் நடித்தேன். இதற்கு முன் சில படங்களில் நடிக்க வெங்கட் பிரபு கேட்டிருந்தார். ஆனால், என்னால் அந்தப் படங்களில் நடிக்க முடியவில்லை.

'எனக்கு நிறைய பேர் கதை சொல்லியிருக்கிறார்கள்'

எனக்கு நிறைய பேர் கதை சொல்லியிருக்கிறார்கள். ஆனால், எனக்கு கதை பிடித்தால் மட்டுமே அந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வேன். சில சமயங்களில் நான் நினைப்பது தவறாகக் கூட போயிருக்கிறது.

ஒரு சினிமாவுக்கு இயக்குநரும், தயாரிப்பாளருமே முக்கியம். இயக்குநர் அனைத்துத் துறைகளையும் கன்ட்ரோலில் வைக்க வேண்டும். தயாரிப்பாளர் இருந்ததால் தான் எல்லாமே. எனவே இவர்கள் இருவரைத் தான் நான் முக்கியமான தூண்களாக கருதுகிறேன்.

வாழ்க்கை என்பது வேறு, சினிமா என்பது வேறு. நான் சினிமாவை தொழிலாக மட்டுமே பார்க்கிறேன். சினிமா இல்லையென்றாலும் லைஃப் இருக்கும்.

‘என்னை நடிக்க வெச்சதே இவர் தான்’

பாலு மகேந்திராதான் என்னை சினிமாவில் நடிக்க வைத்தவர். அவர் தான் எனக்குள் இருக்கும் திறமையை கண்டுபிடித்தவர். நான் இப்படி தான் சினிமாவுக்குள் வந்தேன். முதல் படம் கோகிலா. நான் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். கடவுளை நம்புவேன். கடவுளின் அருளால் தான் எனக்கு எல்லாம் கிடைத்தது.

இதய கோயில், மெளன ராகம் ஆகிய படங்களில் நடித்ததற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இதய கோயில் படத்தில் பணிபுரிந்த போது மணிரத்னம் சிறப்பாக இயக்கினார். சிந்து பைரவி படத்தில் நடிக்க பாலச்சந்தர் சார் கூப்பிட்டார். ஆனால், என்னால் நடிக்க முடியாமல் போனது.

அஞ்சலி படத்தில் நடிக்க முடியாமல் போனதற்கு காரணம் சில கருத்து வேறுபாடு தான் வேறொன்றும் இல்லை. மைக் மோகன் பத்திரிகை நண்பர்கள் கொடுத்த பட்டம். என்னுடைய படங்களில் பாடல்கள் நன்றாக இருக்கும். இளையராஜா சார் எல்லா படங்களுக்கு சிறப்பாக இசையமைத்துக் கொடுத்தார். பாட்டு நல்லா இருக்கும். அதனால், மைக் மோகன் என பட்டம் கொடுத்துவிட்டார்கள் என்றார் மோகன்.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'தி கோட்'. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்தத்திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் ரசிகர்களுக்கும், படக்குழுவுக்கும் அதிர்ச்சி தரும் வகையில், கோட் படத்தை சமூக விரோதிகள் சிலர், சட்டத்திற்கு புறம்பாக எடுத்து, ஆன்லைனில் லீக் செய்திருக்கின்றனர். அந்த லிங்க் தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை