தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  சிறப்பு பட்டிமன்றம் முதல் புத்தம் புதிய திரைப்படம் வரை.. ஜீ தமிழின் தீபாவளி ஸ்பெஷல் என்னென்ன? முழு விவரம் இதோ

சிறப்பு பட்டிமன்றம் முதல் புத்தம் புதிய திரைப்படம் வரை.. ஜீ தமிழின் தீபாவளி ஸ்பெஷல் என்னென்ன? முழு விவரம் இதோ

Aarthi Balaji HT Tamil

Oct 29, 2024, 07:50 PM IST

google News
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தீபாவளி நாளில் காலை சிறப்பு பட்டிமன்றம் தொடங்கி மாலை வரை என்னனென்ன ஸ்பெஷல் என்பது குறித்து பார்க்கலாம்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தீபாவளி நாளில் காலை சிறப்பு பட்டிமன்றம் தொடங்கி மாலை வரை என்னனென்ன ஸ்பெஷல் என்பது குறித்து பார்க்கலாம்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தீபாவளி நாளில் காலை சிறப்பு பட்டிமன்றம் தொடங்கி மாலை வரை என்னனென்ன ஸ்பெஷல் என்பது குறித்து பார்க்கலாம்.

தமிழ் சின்னத்திரையின் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று ஜீ தமிழ். சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என அனைத்திலும் மற்ற சேனல்களுக்கு ஃடப் கொடுத்து மக்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது.

இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களும், ரியாலிட்டி ஷோக்களும் நாளுக்கு நாள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அதே நேரத்தில் பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகை தினங்களில் வித்தியாசமான நிகழ்ச்சிகள், சிந்திக்க வைக்கும் சிறப்பு பட்டிமன்றம், புத்தம் புதிய திரைப்படங்கள் மூலமாக மக்களை மகிழ்விக்க தவறுவதில்லை.

சரவெடி கொண்டாட்டம்

அந்த வகையில் இந்த தீவாளியையும் ஜீ தமிழுடன் இணைந்து சரவெடி கொண்டாட்டமாக செலிபிரேட் செய்ய தயாராகுங்கள். காலையில் சிறப்பு பட்டிமன்றத்துடன் தொடங்கி மாலை வரை என்னனென்ன ஸ்பெஷல் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

காலை 8 மணிக்கு சொல்வேந்தர் கலைமாமணி சுகி சிவம் தலைமையில் டாக்டர் ஸ்யாமளா, பழனி, உமா பாரதி, சாந்தமணி, பர்வீன் சுல்தான் மற்றும் மோகன சுந்தரம் ஆகியோர் பங்கேற்கும் "வாழ்க்கையை கொண்டாட்டமாக மாற்றுவது தாயா? தந்தையா?" என்ற தலைப்பில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாக உள்ளது.

ரகு தாத்தா

அதை தொடர்ந்து 9: 30 மணிக்கு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சுமன் குமார் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான " ரகு தாத்தா " என்ற திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. தொடர்ந்து மதியம் 12:30 மணிக்கு சரிகமப சீசன் 4 போட்டியாளர்கள் ஒன்றிணையும் "சரிகமப வெற்றி கொண்டாட்டம்" என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

அன்னபூரணி

மேலும் மதியம் 3 மணிக்கு நயன்தாரா நடிப்பில் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற " அன்னபூரணி " திரைப்படம் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்தளிக்க உள்ளது.

டிமான்டி காலனி 2

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸான புதிய திரைப்படம் ' டிமான்ட்டி காலனி 2 '. இதில் நடிகர் அருள்நிதி, நடிகை பிரியா பவானி சங்கர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார்கள்.

இவர்களுடன் அருண் பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கிறார்கள். ஹரீஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை டி. குமரேஷ் கவனிக்க, கலை இயக்கத்தை ரவி பாண்டி மேற்கொண்டு உள்ளார்கள்.

ஹாரர் திரில்லர் ஜானரிலான இந்த திரைப்படத்தை ஒயிட் லைட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஞானமுத்து பட்டறை ஆகியப் பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர் & இயக்குநர் அஜய் ஞானமுத்து மற்றும் விஜய் சுப்பிரமணியன் ஆகியோர் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள்.

" இந்திய தொலைக்காட்சியில் முதல் முறையாக நம்பாது ஜீ தமிழில் தீபாவளி சிறப்பு திரைப்படமாக ஒளிபரப்பாக உள்ளது.

எனவே காலை முதல் மாலை வரை என ஜீ தமிழின் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் இந்த தீபாவளியை உங்கள் குடும்பத்துடன் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியுடனும் கொண்டாட தயாராகுங்கள்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை