"சாய்ராவுக்கு ரொம்ப டார்ச்சர் கொடுத்தோம்.. ஆனா அவங்க போல்ட்".. உண்மையை ஒப்புக் கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி
Nov 20, 2024, 07:09 AM IST
ஏ. ஆர். ரஹ்மான் மனைவி சாய்ராவிற்கு நாங்கள் மிகுந்த தொந்தரவு கொடுத்தோம் என ஏ. ஆர். ரஹைனா பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
இசையமைப்பாளர் ஏர.ஆர். ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு தான் ரஹ்மானிடம் இருந்து விவாகரத்து பெற்றதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை சாய்ரா பானுவின் வழக்கறிஞர் வெளியிட்ட நிலையில், இதனை ஏ.ஆர். ரஹ்மானும் உறுதி செய்துள்ளார்.
இந்த நிலையில், இவர்கள் இருவரின் பிரிவுக்கு என்ன காரணம் என பலரும் விவாதித்து வரும் வேலையில், ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷின் சகோதரியுமான ஏ.ஆர்.ரஹைனா விகடன் தளத்திற்கு அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. இந்தப் பேட்டியில், பல விஷயங்கள் குறித்து பேசும் ரஹைனா, ஏ.ஆர். ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு குறித்தும் பேசியுள்ளார்.
ரொம்ப பயங்கரமான போல்ட் லேடி
அந்தப் பேட்டியில்,"எனக்கு அவங்கள பிடிக்கும். ஒரு விதத்துல அவங்க ரொம்ப பயங்கரமான போல்ட் லேடி. அவங்களுக்கு எங்க வீட்டு சைடுல இருந்து ரொம்ப விமர்சனம் கொடுப்பாங்க. இல்ல கொடுத்தோம். ஆனா, அவங்க அதை எல்லாம் அப்படியே தூள் பண்ணிட்டு போயிடுவாங்க.
ரசனையான பெண்
அவங்களுக்கு ட்ரெஸ்ஸிங் சென்ஸ் ரொம்ப நல்லா இருக்கும். அதுனால் ரஹ்மானோட எல்லா ட்ரெஸையும் அவங்க தான் செலக்ட் பண்ணுவாங்க. ரொம்ப யுனிக்கான, பியூட்டி ஃபுல்லான டேஸ்ட் அவங்களுக்கு. அது கம்மி விலையா இருந்தாலும் சரி.. ஜாஸ்தி விலையா இருந்தாலும் சரி.. ரொம்ப அழகா செலக்ட் பண்ணுவாங்க. அவ்ளோ அழகான டேஸ்ட் அவங்களுக்கு.
இதெல்லாம் அவங்க குவாலிட்டி
வீட்டை ரொம்ப ஸ்வீட் அன்டு ஸ்பேனாக வச்சிப்பாங்க. இதெல்லாம் அவங்களோட குவாலிட்டி. அதே மாதிரி அவங்க அதிகமா நகை போட விரும்ப மாட்டாங்க. பணம் இருக்குன்னு பந்தா பண்ண மாட்டாங்க. அவங்க ரொம்ப சிம்பிள். கம்மியான நகை தான் யூஸ் பண்ணுவாங்க. ஆனா, நல்லா ஃபேஷனா ட்ரெஸ் போடுவாங்க. ட்ரெஸ்க்கு ரொம்ப அதிகமா செலவு பண்ணுவாங்க. எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் திருமணம்
இவர்களது திருமணம் மறைந்த ஏ.ஆர்.ரஹ்மானின் அம்மாவின் ஏற்பாட்டின் கீழ் கடந்த 1995ம் ஆண்டு நடைபெற்றது. இந்தத்தம்பதிக்கு கதீஜா மற்றும் ரஹீமா என்ற 2 மகள்களும் அமீன் என்ற மகனும் உள்ளனர்.
விரக்தி அடைந்த சாய்ரா
முன்னதாக பேட்டி ஒன்றில் தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், “ அப்போது எனக்கு 29 வயது. நான் என்னுடைய அம்மாவிடம் சென்று எனக்கு பெண் பார்க்கும்படி கூறினேன். கல்யாணமான புதிதில் சாய்ரா வெளியே செல்ல முடியாததை எண்ணி அவர் மிகவும் விரக்தி அடைந்தாள். இதனையடுத்து நான் எல்லோரையும் போல நாம் ஷாப்பிங் மற்றும் இன்ன பிற இடங்களுக்கு செல்ல முடியாது என்று கூறினேன்” என்று பேசினார்.
ஏ.ஆர். ரஹ்மான் இந்தியாவில் இருந்கு ஆஸ்கார் விருது வென்ற முதல் இசையமைப்பாளர் என்ற பெருமையைப் பெற்றார். அதுவும் முதல் முறையே 2 ஆஸ்கார் விருதுகளைப் பெற்று பெரும் சாதனையைப் படைத்தார். இதையடுத்து அவருக்கு உலகம் முழவதும் பெரும் ரசிகர்கள் படையே இருக்கின்றனர். இந்நிலையில், 29 ஆண்டு கால திருமண வாழ்வை அவர் முடிவுக்கு கொண்டுவர உள்ளதாக வெளிவந்த தகவல் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.