VJ Manimegalai: நீ அவ்ளோ பெரிய ஆளா.. அப்படி ஒரு வேலையே எனக்கு வேண்டாம் - அக்னி நட்சத்திரமாக மணிமேகலை மாற என்ன காரணம்?
Sep 15, 2024, 07:31 AM IST
VJ Manimegalai: நான் என் வேலைக்கு 100% நியாயம் சேர்க்கும் நபர். அப்படி இருக்கும் போது நான் எதனால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தொகுப்பாளினி மணிமேகலை கேள்வி எழுப்பி உள்ளார்.
VJ Manimegalai: குக் வித் கோமாளி 5 ஆவது சீசன் தொகுத்து வழங்கி வந்த மணிமேகலை நேற்று( செப் 14 ) நிகழ்ச்சியில் இருந்து விலகி செல்வதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்து இருந்தார்.
100% முயற்சி
மிகுந்த நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் நான் எப்பொழுதும் எனது 100% முயற்சிகளையும் கடின உழைப்பையும் குக் வித் கோமாளிக்கு கொடுத்திருக்கிறேன். 2019 ஆம் ஆண்டு, நவம்பரில் இருந்து குக் வித் கோமாளி என்னும் ஸ்ட்ரெஸ் பஸ்டர் நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது இருந்தே என் உழைப்பைத் தந்திருக்கிறேன்.
சுயமரியாதை முக்கியம்
ஆனால், சுய மரியாதையைவிட முக்கியமானது எதுவுமில்லை! என் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் நான் அதைக் கண்டிப்பாகப் பின்பற்றுகிறேன். புகழ், பணம், தொழில், வாய்ப்புகள் அல்லது எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. சுய மரியாதை என்று வரும்போது எல்லாமே இரண்டாம் பட்சம்தான். அதனால் நான் குக் வித் கோமாளி சீசன் 5ல் இருந்து விலகுகிறேன்.
இந்த சீசனில் மற்றொரு பெண் தொகுப்பாளர் ஆதிக்கம் செலுத்தினார். குறிப்பாக தொகுப்பாளராக இருக்கும் ஒருவர் இந்த குக் வித் கோமாளி சீசன் 5ன் படி, நிகழ்ச்சியின் சமையல்காரராக செயல்பட வேண்டும். ஆனால், அவர் அதை அடிக்கடி மறந்து விடுகிறார். வேண்டுமென்றே என்னை வேலையைச் செய்யவிடாமல் தடுத்து, எனது ஆங்கரிங் என்னும் நெறியாள்கையில் குறுக்கிடுகிறார்.
நமது உரிமைகளைக்கேட்பதும், கவலையை எழுப்புவதும்கூட இந்த குக் வித் கோமாளி சீசன் 5ல் குற்றமாகிவிடும். ஆனால், என் மனது எப்போதும் எது சரியானதோ அதற்காக குரல் எழுப்பும். நான் யாரைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. பல எதிர்மறை மற்றும் சிலரின் ஆதிக்கம் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியின் அசல் தன்மையை மறைக்கிறது. இது நான் முன்பு வேலை செய்து மகிழ்ந்த அதே குக் வித் கோமாளி நிகழ்ச்சி அல்ல. எனவே, நான் இனி அதன் பகுதியாக தொடரமாட்டேன் " எனக் குறிப்பிட்டார்.
மணிமேகலை வீடியோ
மேலும் இந்த விவாகரம் தொடர்பாக தனது யூடியூப் சேனல் மூலமாக பெரிய விளக்கத்தை கொடுத்து இருக்கிறார். அவர் கூறுகையில், “ இந்த விஷயத்தை பற்றி என்னிடம் நிறைய பேர் கேட்ட காரணத்தினால் தான் சொல்கிறேன். ஆமாம்.. இனிமேல் நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டேன். என் சுயமரியாதையை விட்டு நான் வேலை செய்ய வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை.
இரண்டு, மூன்று ஷோ
குக்காக இருக்கும் தொகுப்பாளினி தான் அதற்கு காரணம். எனக்கு கொடுத்த வேலையை அவர் செய்யவிடவில்லை. அதை பற்றி நான் யூனிட் நபர்களிடம் சொன்னேன். அதற்கு அவர்கள் என்னை தான் மன்னிப்பு கேட்க சொன்னார்கள். அந்த தொகுப்பாளினி பெரிய ஆள்.. நிறைய அனுபவம் இருக்கிறது அதனால் என்னை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொன்னார்கள். நான் என் வேலைக்கு 100% நியாயம் சேர்க்கும் நபர். அப்படி இருக்கும் போது நான் எதனால் கேட்க வேண்டும். அவரை பார்த்தால் எனக்கு பெரிய ஆள் போல் தெரியவும் இல்லை. மன்னிப்பு கேட்டால் அடுத்து இரண்டு, மூன்று ஷோ கொடுப்பாதாக சொன்னார்கள். நான் நினைத்தால் சரி என சொல்லி இருக்கலாம். ஆனால் சுயமரியாதை என்பது முக்கியம் . இது போன்ற ஒரு தயாரிப்பு நிறுவனத்திடம் நான் வேலை பார்க்க கூடாது என நினைக்கிறேன். ஒரு பக்கம் மட்டுமே தான் பேசுவார்கள்“ என்றார்.
நன்றி: Hussain Manimegalai
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்