தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vishal : விஜய் பிரதர் நன்றி.. உங்கள் ஆதரவு இல்லாமல் கட்டிடம் முழுமையடையாது.. விஜய்-க்கு நன்றி தெரிவித்த விஷால்!

Vishal : விஜய் பிரதர் நன்றி.. உங்கள் ஆதரவு இல்லாமல் கட்டிடம் முழுமையடையாது.. விஜய்-க்கு நன்றி தெரிவித்த விஷால்!

Divya Sekar HT Tamil

Mar 13, 2024, 08:00 AM IST

google News
Vishal thanks to Vijay : நடிகர் விஷால் தனது எக்ஸ் தளத்தில் என்னுடைய விருப்பத்திற்குரிய நடிகரான தளபதி விஜய் பிரதர் நடிகர் சங்க கட்டிட வேலைகளுக்காக ஒரு கோடி ரூபாய் கொடுத்துள்ளார் அவருக்கு நன்றியும் பாராட்டும் என தெரிவித்துள்ளார்.
Vishal thanks to Vijay : நடிகர் விஷால் தனது எக்ஸ் தளத்தில் என்னுடைய விருப்பத்திற்குரிய நடிகரான தளபதி விஜய் பிரதர் நடிகர் சங்க கட்டிட வேலைகளுக்காக ஒரு கோடி ரூபாய் கொடுத்துள்ளார் அவருக்கு நன்றியும் பாராட்டும் என தெரிவித்துள்ளார்.

Vishal thanks to Vijay : நடிகர் விஷால் தனது எக்ஸ் தளத்தில் என்னுடைய விருப்பத்திற்குரிய நடிகரான தளபதி விஜய் பிரதர் நடிகர் சங்க கட்டிட வேலைகளுக்காக ஒரு கோடி ரூபாய் கொடுத்துள்ளார் அவருக்கு நன்றியும் பாராட்டும் என தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கம் 1952ஆம் ஆண்டு முதல் சென்னையில் இயங்கி வருகிறது. இதன் தற்போதைய தலைவராக நாசர் செயல்பட்டுவருகிறார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக விஷாலும், பொருளாளராக கார்த்தி சிவகுமாரும் பொறுப்பு வகித்து வருகின்றனர். மேலும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர்களாக பூச்சி முருகனும், கருணாஸும் பதவி வகித்து வருகின்றனர்.

இந்தச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களாக குஷ்பூ, கோவை சரளா, ராஜேஷ், அஜய் ரத்னம், பசுபதி, சிபிராஜ், லதா சேதுபதி, விக்னேஷ், சோனியா, பிரசன்னா, நந்தா, ரமணா, தளபதி தினேஷ், சரவணன், பிரேம் குமார், ஸ்ரீமன், ரத்தின சபாபதி, ரத்தினப்பா, எம்.ஏ. பிரகாஷ், வி.கே.வாசுதேவன், ஆர். ஹேமச்சந்திரன், எஸ்.எம்.காளிமுத்து ஆகிய சினிமா மற்றும் நாடகக் கலைஞர்கள் உள்ளனர்.

தமிழ்நாட்டில் தமிழ்த்திரைப்படத்துறையில் பணியாற்றும் பணியாற்றத் துடிக்கும் நடிகர், நடிகைகள், இந்தச் சங்கத்தின் உறுப்பினர்களாக இருப்பர். குறிப்பாக, திரைப்படத்துறையில் நடிகர்களுக்கும் திரைப்படத்துறை தயாரிப்பாளர்களுக்கும் இடையே ஏற்படும் பிரச்னைகள், ஃபெப்சி தொழிலாளர்களுக்கும் நடிகர்களுக்கும் ஏற்படும் பிரச்னைகள், விநியோகஸ்தர்கள் மற்றும் நடிகர்களுக்கு இடையே பட ரிலீஸின்போது ஏற்படும் தகராறுகள் போன்ற பலவற்றை தென்னிந்திய நடிகர் சங்கம் தலையிட்டு, நடிகர் மற்றும் நடிகைகளின் பாதுகாப்பினை உறுதி செய்திருக்கிறது.

இந்தச் சங்கத்தில் இதுவரை மூன்றாயிரத்துக்கும் அதிகமான திரைத்துறை நடிகர்கள் மற்றும் நாடக நடிகர்கள் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றனர். தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது.

நடிகர் சங்கத்தலைவராக 2000ஆம் ஆண்டு விஜயகாந்த் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது தலைமையிலான நிர்வாகக்குழு, மலேசியா மற்றும் சிங்கப்பூருக்கு நடிகர் மற்றும் நடிகைகளை அழைத்துச்சென்று, அதன்மூலம் வருவாய் ஈட்டி ரூ. 2 கோடிக்கும் அதிகமான தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கடனை அடைத்தது.

விஜயகாந்த் 2006ஆம் ஆண்டு அரசியல் பிரவேசம் செய்தபின், சரத் குமார் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்து எடுக்கப்பட்டு, 2015ஆம் ஆண்டு வரை நீடித்தார். பின், பழைய கட்டடத்தை இடித்துவிட்டு, புதுகட்டடம் கட்ட சரத்குமார் முனைந்தபோது, அதில் இருக்கும் குளறுபடிகள் குறித்து நாசர் தலைமையிலான அணி கேள்வி எழுப்பியது.

அதன்பின், அடுத்து நடந்த தேர்தலில் தென்னிந்திய நடிகர் சங்கத் கட்டடத்தைக் கட்டுவோம் என்னும் உறுதிமொழியோடு, தேர்தலில் வென்றார், நாசர். அப்போது இருந்து தற்போது தொடங்கிய அந்த கட்டடப்பணி, இன்னும் நிறைவடையவில்லை.

இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினரான,நடிகர் விஜய் அந்த கட்டடப் பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய், நிதியுதவி அளித்துள்ளார். இந்த தகவலை தென்னிந்திய நடிகர் சங்கம் உறுதிப்படுத்தியது.

இந்நிலையில் நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் விஜய்க்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில், “Thank you என்ற இரண்டு வார்த்தைகள் மட்டுமே, ஆனால் ஒருவர் தன்னுடைய இதயபூர்வமாக உதவி செய்யும்போது அந்த வார்த்தைகள் வெளிப்படுத்தும் அர்த்தங்கள் அதிகம். என்னுடைய விருப்பத்திற்குரிய நடிகரான தளபதி விஜய் பிரதர் நடிகர் சங்க கட்டிட வேலைகளுக்காக ஒரு கோடி ரூபாய் கொடுத்துள்ளார். இதற்கு நன்றி. காட் பிளஸ் யூ விஜய்.

ஆம், உங்கள் ஆதரவு மற்றும் ஈடுபாடு இல்லாமல் கட்டிடம் முழுமையடையாது என்பதை நாங்கள் எப்போதும் அறிவோம். இப்பொழுதெல்லாம் அதை சீக்கிரம் நடக்கும்படி எங்களை தூண்டிவிட்டீர்கள் பிரதர் #NandriNanba உங்கள் பாணியில்” என்று விஷால் தெரிவித்துள்ளார்.

 

விஜய் நிதியுதவி குறித்து விஷால் உருக்கம்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை