Rajinikanth Fan: ஜப்பானில் வலம் வரும் நம்ம ஊரு ஆட்டோ.. கலக்கும் தீவிர ரஜினி ரசிகர்!
May 05, 2023, 04:22 PM IST
Rajinikanth Fan in Japan: 'பாட்ஷா' படம் பாணியில் இருக்கும் ஆட்டோ ஜப்பான் தெருக்களில் வலம் வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமானநடிகர் ரஜினிகாந்துக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருப்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். குறிப்பாக ஜப்பானில் அதிகளவு ரசிகர்கள் உருவாகி இருக்கிறார்கள். இதற்கு காரணம் 1998-இல் டப்பிங் செய்யப்பட்டு ஜப்பானில் ரிலீஸ் செய்யப்பட்ட 'முத்து' திரைப்படம்தான். இந்தப் படம் வெளியானபோது புதிய சாதனையை நிகழ்த்தியது.
ஜப்பானில் அதிகம் வசூல் செய்யப்பட்ட இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்றது. ‘முத்து’ தமிழ் ‘டைட்டானிக்’ எனவும் அப்போது வர்ணிக்கப்பட்டது. ஜப்பானில் மட்டும் இந்தப்படம் ரூ.23.50 கோடியை வசூலித்தது. இந்தப் படத்தின் மூலம் ஜப்பானில் நடிகர் ரஜினிக்கு அதிக அளவில் ரசிகர் பட்டாளம் உருவாகியது. அதிலும், ஹிரோயோஷி டெகெடா என்ற இளைஞர் ரஜினியின் 'பாட்ஷா' படம் பார்ததில் இருந்து அவரது தீவிர ரசிகனாகவே மாறி இருக்கிறார்.
அதோடு மட்டுமல்லாமல் 'பாட்ஷா' படம் பாணியில் ஆட்டோவில் ஜப்பான் தெருக்களில் வலம் வருகிறார். அந்த ஆட்டோவில், மஞ்சள் பெயின்ட் அடித்து ‘பாட்ஷா’ படத்தில் ரஜினி ஓட்டிய ஆட்டோ நம்பரான TN 02Z 4995 என்கிற நம்பரையே ஸ்டிக்கராக ஒட்டி, ஆட்டோ முன் பக்கம் ஓம் என்ற வாசகம், திருஷ்டிக்கண், மயில் படம், முருகன் படம், ரஜினி போட்டோ என அப்படியே ஒரிஜினல் நம்ம ஊரு ஆட்டோவாகவே மாற்றி இருக்கிறார்.
இது தவிர மசாலா வாலா என்றொரு ஹோட்டலும் அவர் நடத்தி வருகிறார். அதை அடையாளப்படுத்தும் விதமாக தனது ஆட்டோவில் மசாலாக்காரன் என்ற வாசகத்தையும் இடம்பெறச் செய்திருக்கிறார். இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டிருக்கும் இந்த புகைப்படத்துக்கு பலரும் பலவிதமான கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்