தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rip Captain Vijayakanth: விஜயகாந்த் இறுதிச்சடங்கில் விஜய்க்கு பறந்து வந்த செருப்பு!

RIP Captain Vijayakanth: விஜயகாந்த் இறுதிச்சடங்கில் விஜய்க்கு பறந்து வந்த செருப்பு!

Aarthi V HT Tamil

Dec 29, 2023, 01:27 PM IST

google News
விஜய் நேற்று மாலை விஜயகாந்துக்கு இறுதி அஞ்சலி செலுத்திய நிலையில், அடையாளம் தெரியாதவர்கள் சிலர் செருப்பு வீசியதாக சொல்லப்படுகிறது.
விஜய் நேற்று மாலை விஜயகாந்துக்கு இறுதி அஞ்சலி செலுத்திய நிலையில், அடையாளம் தெரியாதவர்கள் சிலர் செருப்பு வீசியதாக சொல்லப்படுகிறது.

விஜய் நேற்று மாலை விஜயகாந்துக்கு இறுதி அஞ்சலி செலுத்திய நிலையில், அடையாளம் தெரியாதவர்கள் சிலர் செருப்பு வீசியதாக சொல்லப்படுகிறது.

நடிகர் விஜய் நேற்று விஜயகாந்தின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார். அப்போது ரசிகர்கள், ஊடகவியலாளர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அடையாளம் தெரியாத ஒருவர் அவர் மீது செருப்பை வீசினார். 

ஒளிப்பதிவாளர்கள் மற்றும் நிருபர்கள் நிறைந்த கூட்டம் வழியாக, விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு, அவரது குடும்பத்தினரால் சூழப்பட்டபடி, விஜய் கலக்கத்துடன் காணப்பட்டார். 

விஜயகாந்த் குடும்பத்தினருடன் பேசியதும், அவரது கண்ணாடி சவப்பெட்டியைத் தொட்டதும் அவர் உணர்ச்சிவசப்பட்டார். விஜயகாந்தை கடைசியாக ஒரு முறை பார்த்துவிட்டு மீண்டும் கூட்டத்திற்குள் செல்ல சில விநாடிகள் எடுத்துக் கொண்டார். போலீசாரும், அவரது பாதுகாவலர்களும் விஜய்யை பாதுகாப்பாக வைக்க எவ்வளவோ முயன்றும், கூட்டத்தில் இருந்த சிலர் அதை பொருட்படுத்தாமல் அவரை தொட்டனர். அவர் காருக்குள் நுழைய முயன்றபோது, அவர் மீது செருப்பு வீசப்பட்டது. அவரது பாதுகாவலர் அதைப் பிடித்து வந்த வழி பார்த்து திருப்பி எறிந்தார்.

விஜய்க்கு நேர்ந்த கொடுமையை பார்த்து அவரது ரசிகர்களும், பொது மக்களும் வருத்தம் அடைந்துள்ளனர். அவரால் முறையாக அஞ்சலி செலுத்தக் கூட முடியவில்லை. ரசிகர்களின் அன்பை புரிந்து கொள்ள முடியும், ஆனால் இது சரியான நேரம் அல்ல நண்பர்களே, பிரபலங்கள் கொடுக்க வேண்டிய விலை" என்று ட்வீட் செய்துள்ளனர் சிலர்.

உடல் நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று காலை 6.10 மணிக்கு காலமானார். நடிகர் விஜய் இரவு 10.30 மணியளவில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார்.

செந்தூரபாண்டி படத்தில் நடிகர் விஜய்யின் தம்பியாக விஜயகாந்த் நடித்திருந்தார், விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் 17 படங்களில் விஜயகாந்த் ஹீரோவாக நடித்திருந்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி