Vijay: பூத் கமிட்டி விவரங்களில் குளறுபடி - விஜய் மக்கள் இயக்க நிர்வாகியை வார்ன் செய்த விஜய்
Oct 28, 2023, 02:41 PM IST
விஜய் மக்கள் இயக்க நிர்வாகியின் செயல்பாட்டை நடிகர் விஜய் கண்டித்துள்ள சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 185 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளில் விஜய் மக்கள் இயக்கம் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இது தொடர்பாக பூத் கமிட்டி அமைக்கும் நிர்வாகிகளை தொடர்புகொண்டு, நடிகர் விஜய் அலைபேசி மூலம் பேசி ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில் பூத் கமிட்டி விவரங்கள் வெளியிடுவதில் இருக்கும் குளறுபடியின் காரணமாக, தாம்பரம் தொகுதியின் மாவட்டத்தலைவர் மின்னல் குமாரை அலைபேசியில் அழைத்துப்பேசிய விஜய், அவரது குளறுபடியான பணிகளைச் சுட்டிக்காட்டி எச்சரித்துள்ளார்.
அதேபோல், சிறப்பான முறையில் செயலாற்றும் நிர்வாகிகளைப் பாராட்டும் விஜய், குளறுபடியில் செயல்படும் நிர்வாகிகளைக் கண்டித்தும் பல்வேறு அறிவுரைகளையும் வழங்கி வருகிறார்.
முன்னதாக, நடிகர் விஜய் வெங்கட்பிரபு இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத தனது 68ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அதனை செய்துகொண்டே தனது மக்கள் இயக்கத்தையும் நிர்வகித்துக்கொண்டு, ஒரு அரசியல் கட்சியினை உருவாக்கும் வகையில் ஒவ்வொரு தொகுதிகளிலும் தனது மக்கள் இயக்கத்தினரின் செயல்பாடுகளை, சீர்திருத்தி வருகிறார். இதன்மூலம் விஜய்க்கு அரசியலில் நுழையும் ஆசை உள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. மேலும், இன்னும் பத்து வருடங்களில் விஜய், அரசியல் கட்சியைத் தொடங்க வாய்ப்புள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்