Vijay Varma: ‘வெறித்தனமா காதலிக்கிறேன்’ - தமன்னாவுடனான காதல் பற்றி ஓப்பனாக பேசிய விஜய் வர்மா!
Jul 15, 2023, 09:49 AM IST
விஜய் வர்மா தமன்னா உடனான காதல் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.
கடந்த ஜூன் மாதம் 29ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் லஸ்ட் ஸ்டோரிஸ் சீரிஸின் இரண்டாம் பாகம் வெளியானது. இதில் முதன்முறையாக ஜோடி சேர்ந்த பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவும், தமன்னாவும் மிகவும் நெருக்கமாக நடித்திருந்தனர். இந்த சீரிஸ் வெளியாவதற்கு முன்னதாகவே இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில் அதனை தமன்னா பேட்டி ஒன்றில் வெளிப்படையாக ஒத்துக்கொண்டார்.
இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய தமன்னா, “ லஸ்ட் ஸ்டோரிஸ் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பில்தான் நாங்கள் முதன் முதலில் சந்தித்தோம். அதன் பின்னர் தான் இருவரும் டேட்டிங் செய்ய ஆரம்பித்தோம். ஒருவர் சக நடிகராக இருப்பதாலேயே அவருடன் காதல் வந்துவிடும் என சொல்ல முடியாது.
ஒருவருடன் காதல் வரவேண்டும் என்றால், அவரிடம் ஏதாவது ஒன்றை உணர வேண்டியது அவசியம். அது என்ன என்பது தனிப்பட்ட விஷயம். நான் எதிர்பார்த்து காத்திருந்த நபர் விஜய் வர்மாதான் என என்னால் உணர முடிந்தது. சரியான நபரை தேர்ந்தெடுப்பது முக்கியம். அவருடனான புரிதல் அவசியம். அதை விஜய் வர்மாவிடம் பார்த்தேன்.
அவர் என் மகிழ்ச்சியின் இடமாக மாறி இருக்கிறார் என்று வெளிப்படையாக பேசினார். இந்த நிலையில் தற்போது நடிகர் விஜய் வர்மாவிடம் இருந்தும் இதற்கு பதில் வந்திருக்கிறது.
இது குறித்து பேசிய விஜய் வர்மா, “ நாங்கள் ஒருவரையொருவர் டேட்டிங் செய்கிறோம் என்பது இப்போது நன்றாகவே புரிகிறது. நான் தமன்னாவை காதலிக்கிறேன். ஆம், நான் அவளை மகிழ்ச்சியாகவும், வெறித்தனமாகவும் காதலிக்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் வில்லன் அத்தியாயம் முடிவடைந்து காதல் அத்தியாயம் தொடங்குகிறது.” என்று பேசினார்.
என்னுடைய கேரியரின் ஒட்டுமொத்த காலத்திலும் நான் என்னுடைய காதல் விவகாரங்களை பற்றி பெரிதாக பேசியதில்லை. நான் அதனை அப்படித்தான் கொண்டு செல்ல விரும்புகிறேன். ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரு நேரமும், இடமும் இருக்கிறது. அப்போது நான் தமன்னாவுடனான உறவைப் பற்றி விரிவாக பேசுவேன். தற்போது அதனைப்பற்றி பேச வெட்கமாக இருக்கிறது.” என்று பேசினார்.
டாபிக்ஸ்