தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  The Goat: 10 நாள் முடிவு வந்துடுச்சு.. திணறும் தயாரிப்பாளர்கள்.. கோட் பட வசூல் விவரம் என்ன பாருங்க!

The Goat: 10 நாள் முடிவு வந்துடுச்சு.. திணறும் தயாரிப்பாளர்கள்.. கோட் பட வசூல் விவரம் என்ன பாருங்க!

Aarthi Balaji HT Tamil

Sep 15, 2024, 10:06 AM IST

google News
The Goat: 10 நாட்கள் முன்பாக விஜய் நடித்த தி கோட், படம் வெளியான நிலையில் அதன் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
The Goat: 10 நாட்கள் முன்பாக விஜய் நடித்த தி கோட், படம் வெளியான நிலையில் அதன் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

The Goat: 10 நாட்கள் முன்பாக விஜய் நடித்த தி கோட், படம் வெளியான நிலையில் அதன் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

தளபதி விஜய் - இயக்குநர் வெங்கட் பிரபு முதல் முறையாக கூட்டணி அமைத்து ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் தி கோட் திரைப்படம் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக கடந்த 10 நாட்களுக்கு முன்பாக வெளியானது. படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், விமர்சன ரீதியாக கலவையான முடிவே பெற்றது.

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தயாரித்து உள்ளனர்.

இந்நிலையில் 10 நாட்கள் முன்பாக தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம், படம் வெளியான நிலையில் அதன் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி, தி கோட் திரைப்படம் உலகளவில் ரூ. 360 கோடிக்கும் மேல் வசூல் செய்து உள்ளது.

விறுவிறுப்பான திரைக்கதையில் தி கோட்

தி கோட் படத்தில் அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் விஜய் தோன்றியுள்ளார். இதில் மகனாக வரும் விஜய் டீஏஜிங் தொழில்நுட்பத்தில் 25 வயது இளைஞனாக வருகிறார். அத்துடன் அவர் வில்லனாகவும் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்துஸ்தான் டைம்ஸ் விமர்சனம் தி கோட்

படத்தைப் பற்றிய இந்துஸ்தான் டைம்ஸ் விமர்சனத்தின் ஒரு பகுதி, "உலகம் முழுவதும் பயணிக்கும் மற்றும் குடும்ப உணர்வு, அதிரடி, நகைச்சுவை மற்றும் நாடகம் ஆகியவை திருப்பங்கள் மற்றும் ஏராளமான அஞ்சலிகளுடன் பின்னிப்பிணைந்த ஒரு கதையை எழுதியதற்காக இயக்குனர் வெங்கட் பிரபுவை முதலில் பாராட்ட வேண்டும்.

விஜய் இரண்டு வேடங்களில் காணப்படுகிறார், இரண்டு கதாபாத்திரங்களும் முற்றிலும் மாறுபட்டவை, அதுவே அதை சுவாரஸ்யமாக்குகிறது. கேப்டன் விஜயநாத், எஸ்.பி.பி, அஜித்தின் மங்காத்தா ஹூக் ஸ்டெப் தொடங்கி தனது மறைந்த உறவினர் பவதாரிணி மற்றும் ஏராளமான விஜய் படங்களுக்கு வெங்கட் பிரபு ஏராளமான அஞ்சலிகளை செலுத்தியுள்ளார்.

பாத்திரங்கள்

படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், சினேகா, பிரபுதேவா, வைபவ், அஜ்மல் அமீர், மோகன், அஜய் ராஜ், அரவிந்த் ஆகாஷ், லைலா, மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு, சினேகா, யுகேந்திரன், பிரேம்ஜி அமரன், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிரெய்லரில் தனது அதிரடி அவதாரம் மூலம் விஜய் தனது ரசிகர்களை பிரமிக்க வைத்தார். இது விஜய்யை ஒரு கள முகவர் மற்றும் உளவாளி என்றும், அவர் தனது வாழ்க்கையில் 65 க்கும் மேற்பட்ட வெற்றிகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் என்றும் அறிமுகப்படுத்தியது. இந்த படத்தில் விஜய் அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் நடித்து உள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9  

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி