தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Varisu Ranjithame Song: வெளியானது ‘ரஞ்சிதமே’ வீடியோ பாடல்; குஷியில் ரசிகர்கள்!

Varisu Ranjithame Song: வெளியானது ‘ரஞ்சிதமே’ வீடியோ பாடல்; குஷியில் ரசிகர்கள்!

Feb 06, 2023, 12:28 PM IST

வாரிசு திரைப்படத்தில் இருந்து ரஞ்சிதமே ரஞ்சிதமே வீடியோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
வாரிசு திரைப்படத்தில் இருந்து ரஞ்சிதமே ரஞ்சிதமே வீடியோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

வாரிசு திரைப்படத்தில் இருந்து ரஞ்சிதமே ரஞ்சிதமே வீடியோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Kajal Aggarwal: இயக்குநர் சொன்ன அந்த வார்த்தை.. முதல் ஆடிஷனில் அழுத காஜல் அகர்வால்.. என்ன நடந்தது?

Bayilvan Ranganathan: ‘என் மகளும் இன்னொரு பொண்ணுமா.. ச்சே.. நாக்கு அழுகிடும்..’: பயில்வான் ரங்கநாதன் ஓப்பன் டாக்!

Ajith Kumar : அஜித்தின் அடுத்த படத்தின் முதல் நாளிலேயே ஆவேசமான அடிதடி.. தல.. க்கு என்ன ஆச்சு.. விடாமுயற்சி சாத்தியமா!

GV Prakash and Saindhavi: இவங்களுமா.. காதல் மனைவியை விவாகரத்து செய்யும் ஜி.வி.பிரகாஷ்?

இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் வாரிசு. இந்த திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதியன்று பொங்கல் பரிசாக வெளியானது. இந்தப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.

மேலும் இதில் சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ஷியாம், யோகி பாபு உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்திருந்தனர். விஜய்யுடன் இணைய வேண்டும் என கனவு கண்டு இருந்த இசையமைப்பாளர் தமனுக்கு இந்த படத்தின் மூலம் நனவாகியது. திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பெரும்பான்மையான ரசிகர்களுக்கு ‘வாரிசு’ படம் பிடித்திருந்தது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் வாசு திரைப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த திரைப்படம் வசூல் ரீதியாக 300 கோடியை எட்டி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. வாரிசு திரைப்படத்தில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஏற்கனவே இந்த திரைப்படத்திலிருந்து "ஜிமிக்கி பொண்ணு" என்ற பாடலின் வீடியோ வெளியிடப்பட்டது.

அதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து வாரிசு திரைப்படத்தில் "செலிப்ரேஷன் ஆஃப் வாரிசு" வீடியோ பாடலும் ‘தீ தளபதி’ பாடலும் வெளியிடப்பட்டது.

இந்த இரண்டு பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது வாரிசு திரைப்படத்தில் இருந்து அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே’ வீடியோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது. வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இந்தப்பாடலுக்கு நடனவடிவமைப்பு செய்த ஜானி மாஸ்டர் இந்தப்பாடலின் கடைசி 1.20 நிமிடம், விஜய் ஒரே டேக்கில் ஆடியிருப்பதாக கூறி எதிர்பார்ப்பை எகிற வைத்தார். ஆனால் பாடலின் இசை நன்றாக இருந்த போதிலும், நடனம் நன்றாக இல்லை என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். தொடர்ந்து ஜானி மாஸ்டரை இனி விஜய் படங்களில் கமிட் செய்யக்கூடாது என்றும் அவர் பதிவிட்டனர்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி