Vijay Makkal Iyakkam: பனையூரில் விஜயின் படை; செல்போன், பேனா என எல்லாவற்றிற்கும் தடை; திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன?
Jul 11, 2023, 04:56 PM IST
விஜய் தன்னுடைய இயக்க நிர்வாகிகளை சந்திப்பதற்கான பின்னணி காரணத்தை இங்கு பார்க்கலாம்
2023ம் நடந்து முடிந்த 10 மற்றும் 12 -ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவியரை தேர்வு செய்து நடிகர் விஜய் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகையை வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் கல்வி பயின்று அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
கிட்டத்தட்ட 12 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த விழாவில் அவ்வளவு நேரமும் மேடையிலேயே நின்று மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகையை விஜய் வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்காக தளபதி மக்கள் இயக்கம் சார்பில் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே அதற்கான வேலைகள் பரபரத்தன.
கடந்த ஜூன் 17ம் தேதி நடைபெற்ற இந்த நிகழ்வில் விஜய் முழுக்க முழுக்கவே மாணவர்களுடன் நேரத்தை செலவிட்டதால், ஒவ்வொரு தொகுதியில் இருந்த வந்த தளபதி மக்கள் இயக்க நிர்வாகிகளை அவர் சந்திக்க முடியாமல் போனது. இந்த நிலையில்தான் அவர்களை சந்திக்க முடிவெடுத்த நடிகர் விஜய், இன்றைய தினம் சென்னை பனையூரில் உள்ள தளபதி மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் அவர்களை சந்தித்து போட்டோ எடுத்துக்கொள்வதற்கான வேலைகளைச் செய்ய சொல்லியிருக்கிறார்.
அதன்படி இன்றைய தினம் அதற்கான வேலைகள் நடந்தன. இதனையடுத்து மக்கள் இயக்க நிர்வாகிகள் பலர் அலுவலகத்தின் முன்னர் கூடியிருக்கின்றனர். இதில் அரியலூர், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் என பலர் உள்ளனர். அவர்கள் அனைவரும் தலைமை அலுவகத்தில் அமரவைக்கப்பட்டு இருக்கின்றனர்.
உள்ளே செல்ல கட்டுபாடுகள்
உள்ளே செல்லும் நிர்வாகிகள் செல்போன் உள்ளிட்ட எந்த வித எலக்ரானிக் உபகரணங்கள் கொண்டு செல்லவும் அனுமதி கிடையாதாம். சட்டைப்பையில் இருக்கும் பேனாவை கூட உள்ளே கொண்டு செல்ல அனுமதியில்லை எனக்கூறப்படுகிறது.
மேலும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், தலைவர் அழகு முத்துக்கோன் சிலைக்கு மரியாதை செலுத்த விருப்பதால் விஜயின் வருகை மதியம் 2 மணிக்கு தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தளபதி மக்கள் இயக்க பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்த நிர்வாகிகளிடம் மிகவும் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
டாபிக்ஸ்