தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vijay Antony: 'ஒரு அப்பாவா பிள்ளைகளை பார்த்துக்கனும்’ மகள் பிரிவுக்கு பின் விஜய் ஆண்டனி உருக்கமான பேச்சு!

Vijay Antony: 'ஒரு அப்பாவா பிள்ளைகளை பார்த்துக்கனும்’ மகள் பிரிவுக்கு பின் விஜய் ஆண்டனி உருக்கமான பேச்சு!

Aarthi V HT Tamil

Sep 29, 2023, 05:43 AM IST

google News
நடிகர் விஜய் ஆண்டனி வாழ்க்கை பாடம் பற்றி உருக்கமாக பேசி உள்ளார்.
நடிகர் விஜய் ஆண்டனி வாழ்க்கை பாடம் பற்றி உருக்கமாக பேசி உள்ளார்.

நடிகர் விஜய் ஆண்டனி வாழ்க்கை பாடம் பற்றி உருக்கமாக பேசி உள்ளார்.

 நடிகர் விஜய் ஆண்டனி மகள் கடந்த 19 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவரின் இறப்பு பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதனிடையே மகள் இறந்து 10 நாட்களில் விஜய் ஆண்டனி கடமை தவறாமல் தான் நடித்த படத்தின் விளம்பர பணிக்கு வந்து இருக்கிறது. 

அந்த வகையில் விஜய் ஆண்டனி நடித்த ரத்தம் படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படம் தொடர்பாக  பிரபல ஊடகம் ஒன்றிருக்கு விஜய் ஆண்டனி பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “நான் என் வாழ்க்கையில நிறைய பாத்துட்டேன். சிறுவயதிலிருந்தே நிறைய சந்தித்து விட்டேன். சில பேர் தன் வாழ்க்கையில் அனுபவித்த சிரமங்களை மற்றோருக்கு கொடுக்க நினைப்பார்கள். சிலர் அதை பாசிட்டிவ் நோக்கத்தில் போக வேண்டும் என்றும் நினைப்பார்கள். எல்லாமே நமக்குள் தான் இருக்கிறது.

என்னுடைய நோக்கம் அடுத்தவர்களை மகிழ்வித்து பார்ப்பது தான். உங்களுடைய ரோல் மாடல் யார் என்று நீங்கள் தேடிப் போக வேண்டிய அவசியம் இல்லை எல்லாம் நமக்குள்ளே தான் இருக்கிறது. என்னவோ ஒரு மாதிரி இருக்கிறேன்.

நிறைய காயம் பட்டு பட்டு மரத்துப் போவது போல் மாறிவிட்டது. ஒரு அப்பாவாக தன் பிள்ளைகளை பார்த்துக் கொள்ள வேண்டும் என நினைப்பது இயல்பு. அது அனைத்திற்குமே அனுபவம் தேவை. வாழ்க்கையோடு பல திசைகளை பார்த்திருக்கிறேன்.

வாழ்க்கையில் எந்த ஒரு விஷயத்தையும் மறக்க வேண்டிய அவசியமில்லை. நினைவுகள் மனது வழியாக வந்து யோசிக்க வைக்கிறது என்றால் யோசியுங்கள் தப்பில்லை. மறக்க யோசிக்க வேண்டாம். நம் வாழ்க்கையை ஞாபகம் தான். நான் எதையும் மறக்க முயற்சி செய்ய மாட்டேன். ஏதாவது வலி ஏற்பட்டால் அந்த வலியோடு வாழ நினைப்பேன் “ என்றார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை