Vijay Antony:ஆபத்தை கடந்துட்டேன்…விரைவில் உங்களுடன் பேசுவேன்!விஜய் ஆண்டனி டுவிட்
Jan 24, 2023, 08:57 PM IST
பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பில் நிகழ்ந்த விபத்துக்கு பின்னர் இசையமைப்பாளர், நடிகர் விஜய் ஆண்டனி தனது உடல்நிலை குறித்து டுவிட் செய்து அப்டேட் கொடுத்துள்ளார்.
கடந்த வாரம் மலேசியாவில் நடைபெற்ற பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பில் விஜய் ஆண்டனி விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியானது. லங்காவி தீவில் நடைபெற்று வந்த படப்பிடிப்பின்போது படகு விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து தனது உடல்நிலை குறித்து விஜய் ஆண்டனி புகைப்படத்துடன் டுவிட் செய்துள்ளார். அதில், "மலேசியாவில் நடைபெற்ற பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின்போது நிகழ்ந்த விபத்தில் தாடை மற்றும் மூக்கில் ஏற்பட்ட கடுமையான காயத்திலிருந்து குணமடைந்து ஆபத்தான கட்டத்தை தாண்டியுள்ளேன்
தற்போது முக்கிய ஆபரேஷன் முடிந்துள்ளது. விரைவில் உங்களுடன் பேசுவேன் என நம்புகிறேன். எனது உடல்நிலை குறித்து அக்கறை கொண்டு ஆதரவு அளித்து உங்களுக்கு நன்றிகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, இந்த விபத்தில் சுயநினைவை இழந்த விஜய் ஆண்டனி முகத்தில் கடுமையான காயம் ஏற்பட்டதோடு பற்களும் உடைந்ததாக கூறப்பட்டது. முதலில் மலேசியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜய் ஆண்டனி பின்னர் அங்கிருந்து சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அறுவை சிகிச்சை செய்த பிறகு வீட்டுக்கு அனுப்பப்பட்டார். இதையடுத்து அவரை இரண்டு வாரம் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். அத்துடன் அவர் விரைவில் விடியோ மூலம் ரசிகர்களிடம் பேசுவார் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தனது உடல்நிலை குறித்து அவரே டுவிட் செய்துள்ளார்.
டாபிக்ஸ்