தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Vijay And Sangeetha Got Divorce Says Wikipedia

Vijay And Sangeetha: சங்கீதாவை விவாகரத்து செய்தாரா விஜய்? -

Aarthi V HT Tamil

Jan 04, 2023, 03:20 PM IST

Vijay And Sangeetha Divorce: நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்துவிட்டதாக விக்கிபீடியாவில் வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Vijay And Sangeetha Divorce: நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்துவிட்டதாக விக்கிபீடியாவில் வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Vijay And Sangeetha Divorce: நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்துவிட்டதாக விக்கிபீடியாவில் வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் கடந்த சில வாரங்களாக கருத்து வேறுபாடு காரணமாக மனைவி சங்கீதாவை பிரிந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

Varalakshmi Sarathkumar: ‘ அவ்வளவா பொருத்தம் இல்லையா..?; நீயா வாழப்போற.. பிடிக்கலன்னா போடா’ - வெளுத்த வரலட்சுமி!

Varalaxmi Sarathkumar: ‘14 வருஷமா அவரும் நானும் பாத்துக்கவே இல்ல’; நார்வே நாட்டில் ப்ரபோசல்; வெக்கப்பட்ட வரு - காதல் கதை

Shruti Haasan: ‘என்ன மன்னிச்சிருங்க.. அத பத்தி’ - பிரேக் அப் குறித்து வாய் திறந்த ஸ்ருதி காதலர்!

Karthigai Deepam: ரூமுக்குள் சென்ற ரியா.. தீபாவுடன் ரொமன்ஸ் செய்த கார்த்திக்! - கார்த்திகை தீபம் அப்டேட்!

அத்துடன் இதன் காரணமாக தான் எப்போதும் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் சங்கீதா இந்த முறை வாரிசு ஆடியோ வெளியீட்டு விழாவிலும், பிரியா அட்லீயின் சீமந்தம் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை என தகவல் பரவி வந்தன.

ஆனால் உண்மையில் சங்கீதா இந்த வருட விடுமுறையை தனது மகன் மற்றும் மகளுடன் கொண்டாட லண்டன் சென்றுள்ளதாக கூறப்படுகிறது . மேலும், விஜய் தனது மனைவியை பார்க்க லண்டன் செல்ல இருப்பதாக்வும் தெரிகிறது.

இப்படி ஒரு பரபரப்பான விஷயம் ஏற்கனவே பரவி வரும் நிலையில், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில், விஜய்யின் விக்கிபீடியா பக்கத்தில் ஒரு மாற்றம் நடந்துள்ளது.

விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா சொர்ணலிங்கம், இருவரும் பரஸ்பர விவாகரத்து பெற்று பிரிந்ததாக பதிவிடப்பட்டு உள்ளது.

இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் விஜய்க்கு ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷை அவர் திருமணம் செய்துவிட்டார் என்றும் விஜய்க்கு மூன்று குழந்தைகள் இருப்பதாகவும் பதிவிடப்பட்டு உள்ளது.

இது போன்று சிலர் விக்கிபீடியா பக்கத்தை மாற்றி உள்ளனர் . ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு கூட சில அரசியல் தலைவர்கள் தங்கள் பெயர்களை விக்கிபீடியாவில் தவறாக பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விக்கிபீடியா பக்கம் விஜய் ரசிகர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் விக்கிபீடியா பக்கம்

விஜய்யின் விக்கிபீடியா பக்கத்தில் இப்படி அவதூறு பரப்பிய கருப்பு ஆடு யார்? என அவரு ரசிகர்கள் வலைவீசி தேடி வருகின்றனர்.

வம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜய் நடித்து இருக்கும் படம், வாரிசு. ரஷ்மிகா மந்தனா நடித்து இருக்கும் இந்த படத்தின் ட்ரெய்லர் இன்று ( ஜனவரி 4 ) மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது. இதனை கொண்டாட விஜய் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக கொண்டாட காத்திருக்கின்றனர்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.