தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vignesh Sivan: ‘பல கோடி செலவு பண்ணிதான்.. ..காரி துப்பாத ஆளே கிடையாது’- விக்னேஷ் சிவன்!

Vignesh Sivan: ‘பல கோடி செலவு பண்ணிதான்.. ..காரி துப்பாத ஆளே கிடையாது’- விக்னேஷ் சிவன்!

Jul 31, 2024, 05:22 PM IST

google News
Vignesh Sivan: ஆனால், யார் என்ன சொன்னாலும் அந்த படம் குறித்தான என்னுடைய பார்வை என்பது எப்போதும் அப்படியேதான் இருந்தது. - விக்னேஷ் சிவன்!
Vignesh Sivan: ஆனால், யார் என்ன சொன்னாலும் அந்த படம் குறித்தான என்னுடைய பார்வை என்பது எப்போதும் அப்படியேதான் இருந்தது. - விக்னேஷ் சிவன்!

Vignesh Sivan: ஆனால், யார் என்ன சொன்னாலும் அந்த படம் குறித்தான என்னுடைய பார்வை என்பது எப்போதும் அப்படியேதான் இருந்தது. - விக்னேஷ் சிவன்!

பிரபல இயக்குநரும்,  நயன் தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் தன்னுடைய படங்களில் நடந்த கசப்பான சம்பவம் குறித்து டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார். 

காரி துப்பாத ஆட்களே கிடையாது

இது குறித்து அவர் பேசும் போது, "நானும் ரவுடிதான் திரைப்படம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்னர் கூட, அந்த படத்தை பார்த்த திரை உலகினர், நெகட்டிவான விமர்சனங்களையே தந்தார்கள். இன்னும் ஒரு படி மேலே போய் சொல்ல வேண்டும் என்றால், அந்த படத்தை காரி துப்பாத ஆட்களே கிடையாது என்று சொல்லலாம். இறுதியாக மக்கள்தான் அந்த படத்தை காப்பாற்றினார்கள். ஆனால் யார் என்ன சொன்னாலும் அந்த படம் குறித்தான என்னுடைய பார்வை என்பது எப்போதும் அப்படியேதான் இருந்தது. 

நீங்கள் படம் குறித்து என்ன வேண்டுமென்றாலும் சொல்லலாம். ஆனால், என் மனதிற்கு எதுவும் சரி என்று பட்டதோ, அதை நான் செய்து விட்டேன் என்ற நிலையில்தான் நான் இருப்பேன். இவ்வளவு ஏன் நான் கடைசியாக இயக்கிய காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திற்கு கூட இப்படியான விமர்சனங்கள்தான் என்னை நோக்கி வந்தன. படம் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னர் கூட, இந்த படம் ஒர்க் அவுட் ஆகும் என்று யாரும் என்னிடம் சொல்லவில்லை. இந்த மாதிரியான படங்களை எடை போடுவது என்பது மிக மிக கடினம். 

பல கோடி செலவாச்சி

படம் வெளியாவதற்கு ஐந்து நாள், ஆறு நாள் முன்னர் வரை கூட அதை அ ப்படி செய்திருக்கலாமோ, இதை இப்படி செய்திருக்கலாமோ என்ற எண்ணம் எனக்குள் அலைந்து கொண்டு இருக்கும். 

திரையரங்கில் உட்கார்ந்து படம் பார்க்கும் பொழுதுதான் படத்திற்குஆடியன்ஸ் கொடுக்கும் ரியாக்ஷன் களை பொறுத்து, என்னவெல்லாம் ஒரு வொர்க் அவுட் ஆகியிருக்கிறது என்னவெல்லாம் வொர்க் அவுட் ஆக வில்லை என்பதை நான் தெரிந்து கொள்வேன். அங்கு அவர்கள் கொடுக்கும் ரியாக்ஷன்களை வைத்துதான் நான் சினிமாவே கற்றுக்கொண்டேன்.  அப்படி பார்க்கும் பொழுது நான் சினிமாவை கற்றுக் கொள்ள பல வருடங்களும், பல கோடி ரூபாய்களும் தேவைப்படுகிறது" என்று பேசினார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை