Vignesh Shivan: தூக்கி எறிந்த ஏகே 62; முதன்முறையாக ஆதங்கத்தை கொட்டிய விக்னேஷ்!
Mar 12, 2023, 05:47 PM IST
பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியீட்டு இருக்கிறார்
அந்த பதிவில், “ என் குழந்தைகளுடன் எல்லா தருணங்களையும் சுவாசிக்கவும் உணரவும் எனக்கு சிறிது நேரம் கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி !!! வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் அனைத்து வலிகளிலும் ஒரு நன்மை இருக்கிறது, பாராட்டும் , வெற்றியும் நமக்குக் கற்பிப்பதை விட, அவமானம் மற்றும் தோல்வியின் அனுபவம் நிறைய கற்றுக்கொடுக்கிறது!” என்று பதிவிட்டு இருக்கிறார்.
முன்னதாக நடிகர் அஜித் நடிக்கும் 62 ஆவது படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாகவும், இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா புரோடக்சன்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் திடீரென்று யாரும் எதிர்பார்க்காத வண்ணம் விக்னேஷ் சிவன் அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக வெளியானது.
தொடர்ந்து அதற்கான காரணத்தையும் மூத்த பத்திரிகையாளர்கள் சிலர் பேட்டிகளில் கூறினர். அவர்கள் சொல்லும் போது “ லைகா நிறுவனம் விக்னேஷ் சிவனிடம் 8 மாதங்கள் கொடுத்து அஜித் 62 படத்திற்கான கதையை ரெடி செய்ய சொன்னது; ஆனால் விக்னேஷ் சிவன் அதனை மிகவும் அலட்சியமாக எடுத்துக்கொண்டார்.
8 மாதங்கள் கழித்து அஜித்திடம் கதையை சொல்லி இருக்கிறார் விக்னேஷ் சிவன். அந்தக்கதை அஜித்திற்கு பிடிக்க வில்லை. அதனை விக்னேஷ் சிவனிடம் அஜித் சொல்ல, கதையை சரி செய்யாமல் நேரடியாக லண்டனுக்கு சென்று லைகா நிறுவனத்திடம் அந்த கதையை சொல்லி இருக்கிறார். கதையை கேட்ட லைகா நிறுவனத்திற்கும் கதை பிடிக்கவில்லை அந்த சமயத்தில் வேறு வேலைக்காக லண்டனுக்கு சென்ற அஜித் இந்த விஷயத்தை கேட்டு அதிருப்தி அடைந்தார்;
அதனைத்தொடர்ந்து தானே நேரடியாக அங்கு சென்றிருக்கிறார். சந்திப்பு நடந்திருக்கிறது; அங்கு விக்னேஷ் சிவனை தயாரிப்பு நிறுவனம் கடுமையாக கடிந்து கொண்டது. மேலும் இந்தப்படத்தை கைவிட முடிவெடுத்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.
இதைக்கேட்டு விக்னேஷ் சிவன் அதிர்ச்சியடைய, விஷயம் நயன் தாராவின் காதுகளுக்கு சென்றிருக்கிறது. உடனே நயன்தாரா வீடியோ கால் வழியாக லைகா நிறுவனத்தை தொடர்பு கொண்டு, இந்தப்படத்தை ட்ராப் செய்தால், நாங்கள் கடுமையாக ட்ரோல் செய்யப்படுவோம், ஆகையால் இந்தப்படத்தை எப்படியாவது நடத்துங்கள் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் லைகா நிறுவனம் கேட்ட பாடில்லை.. அஜித்தும் விக்னேஷ் சிவனுக்கு ஆதரவாக நிற்கவில்லை.. இந்த நிலையில், படத்தை கைவிடும் முடிவை நிறுவனம் எடுத்துள்ளது.
ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளிவரவில்லை. ஆகையால், வெளியே உலாவும் செய்திகள் உண்மையா? என்ற கேள்வி ரசிகர்களிடம் நிலவி வருகிறது; இந்த நிலையில், அண்மையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக விக்னேஷ் சிவன் தன்னுடைய ட்விட்டர் கணக்கில் பயோவில் இணைத்துள்ள படங்களின் பட்டியலில் இருந்து ஏகே 62 பெயரை நீக்கியிருந்தார்.
இதுமட்டுமல்லாமல் ட்விட்டர் கணக்கில் கவர் டிபியாக முன்பு அஜித் படத்தை வைத்திருந்த விக்னேஷ் சிவன், அதை நீக்கி விட்டு ‘முயற்சியை கைவிடாதே’ வாசகம் அடங்கிய போஸ்டரை மாற்றினார். இந்த நிலையில்தான் இவ்வாறான பதிவை விக்னேஷ் சிவன் பதிவிட்டு இருக்கிறார். இவர் ஏகே 62 படத்தில் இருந்து தூக்கப்பட்ட நிலையில், அந்த வாய்ப்பானது இயக்குநர் மகிழ் திருமேனியின் கைவசம் சென்றிருக்கிறது. அடுத்ததாக விக்னேஷ் சிவன் நடிகர் விஜய்சேதுபதி மற்றும் பிரதீப் ரங்கநாதனை வைத்து படம் ஒன்றை இயக்க இருப்பதாகவும் சொல்லபப்டுகிறது.
டாபிக்ஸ்