VidaaMuyarchi: அஜித் ரசிகர்களே தயாரா? - விடாமுயற்சி படப்பிடிப்பு எங்கு தொடங்க போகிறது?
Sep 12, 2023, 02:45 PM IST
விடாமுயற்சி படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் வாரத்தில், தொடங்க திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.
நடிகர் அஜித்குமாரின் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘துணிவு’. இந்த திரைப்படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கினார். பொங்கல் பரிசாக வெளியான இந்தத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இந்த படத்திற்கு அடுத்தபடியாக நடிகர் அஜித் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தயாரிப்பு நிறுவனத்திற்கும், விக்னேஷ் சிவனிற்கும் இடையே நடந்த படைப்பு தொடர்பான முரண்பாடுகள் விக்னேஷ் சிவனை அந்தப்படத்தில் இருந்து புறந்தள்ளியது. இந்த நிலையில் தான் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்தின் 62 ஆவது படத்தில் கமிட் செய்யப்பட்டார்.
இது தவிர படம் தொடர்பான எந்த ஒரு தகவலும் வெளிவராமல் இருக்கிறது. இதனிடையே விடாமுயற்சி படம் தொடர்பான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் அடுத்த மாதம் முதல் வாரத்தில், விடாமுயற்ச்சி படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும் பெரும்பகுதி படப்பிடிப்பு துபாயில் உள்ள அபுதாபியில் நடத்த முடிவு செய்து உள்ளனர். படப்பிடிப்பு தொடங்குவது பற்றிய தகவல் மற்றும் இதர அறிவிப்பு விநாயகர் சதுர்த்தியன்று அறிவிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.
முன்னதாக சந்திரமுகி 2 திரைப்படத்தின் பிரஸ் மீட்டில் பேசிய விடாமுயற்சி பட தயாரிப்பாளர் லைகா சுபாஷ்கரன், “ அஜித்குமாரின் விடாமுயற்சி படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இது எங்களின் மதிப்புமிக்க திட்டம்” என்று பேசினார்.
முன்னதாக பைக் டூரில் பிஸியாக இருந்த நடிகர் அஜித் கடந்த ஜூலை 26 ஆம் தேதி சென்னை திரும்பினார். ஆகையால் விரைவில் இந்தப்படத்திற்கான ஷூட்டிங் தொடங்கும் என்று தெரிகிறது. இந்த நிலையில் இந்தப்படத்தில் நடிகர் அஜித்துடன் நடிகை திரிஷா, நடிகை தமன்னா, நடிகர் அர்ஜூன் தாஸ், நடிகர் அர்ஜூன் ஆகியோர் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது!
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்