தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  8ஆவது நாள் வேட்டையனின் வேட்டை எவ்வளவு? இன்றைய தியேட்டர் நிலவரம்!

8ஆவது நாள் வேட்டையனின் வேட்டை எவ்வளவு? இன்றைய தியேட்டர் நிலவரம்!

Suguna Devi P HT Tamil

Oct 18, 2024, 12:20 PM IST

google News
ரஜினி நடிப்பில் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் கடந்த 10 ஆம் தேதி வெளியான வேட்டையன் படத்தின் 8 நாள் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது.
ரஜினி நடிப்பில் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் கடந்த 10 ஆம் தேதி வெளியான வேட்டையன் படத்தின் 8 நாள் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது.

ரஜினி நடிப்பில் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் கடந்த 10 ஆம் தேதி வெளியான வேட்டையன் படத்தின் 8 நாள் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது.

ரஜினி நடிப்பில் இயக்குனர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் கடந்த 10 ஆம் தேதி வெளியான வேட்டையன் படத்தின் 8 நாள் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் ஸ்டார் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ஃபகத் பாசில், துஷாரா விஜயன் என பலர் நடித்து வேட்டையன் படம் வெளியானது. வெளியாவதற்கு முன்னதாகவே அதிக டிக்கெட்கள் முன்பதிவு செய்யபபட்டன. இப்படம் வெளியாகி நேற்றோடு 8 நாட்கள் முடிந்துள்ளது. படம் வெளியான பின்னர் கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும் பல விமர்சகர்கள் படத்தை பாராட்டவும் செய்து இருந்தனர். ரஜினி ரசிகர்கள் சிலருக்கு படம் வேலை செய்யவில்லை. 

திரையரங்குகளை ஆக்கிரமித்த வேட்டையன் 

தமிழ் சினிமாவில் எப்போதும் முன்னணி நடிகர்களாக இருக்கும் டாப் ஹீரோக்களின் படங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். குறிப்பாக இதே நாளில் நடிகர் ஜீவா நடிப்பில் பிளாக் படம் வெளியாகி இருந்தது. முதலில் வேட்டையன் படத்திற்கே பெருவாரியான தியேட்டர்கள் வழங்கப்பத்திருந்தன. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பிளாக் திரைப்படம் மக்களின் ஆதரவை பெற்றதை தொடர்ந்து அப்படத்திற்கு அதிகமான தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டன. 

வசூல் நிலவரம் 

வேட்டையன் வெளியாகி முதல் 7 நாட்கள் சேர்த்து மொத்தமாக ரூ118. 95 கோடி வசூல் செய்துள்ளதாக sacnilk இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இதில் குறிப்பித்துள்ளபடி, 8 ஆவது நாளான நேற்று மட்டும் ரூ3.15 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக அணைத்து மொழிகளிலும் சேர்த்து நேற்று வரை சுமார் ரூ 122 கோடி வரை வசூல் ஆகியுள்ளதாக அந்த இணையதளத்தில் செய்தி வெளியாகி உள்ளது.    

மழை காரணமா 

கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு அதிக கனமழை எச்சரிக்கை விடுவவிக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மழை பெய்தது படத்தின் வசூலை பாதித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இன்று 5 புதிய படங்கள் வெளியாகி உள்ளது. இதில் ஏதேனும் ஒரு படம் மக்களுக்கு பிடிக்க ஆரம்பித்து விட்டால், வரும் வார இறுதி நாட்களான நாளை மற்றும் நாளை மறுநாள் வேட்டையன் படத்தின் வசூல் குறையலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

மாறுபட்ட கதையம்சம் 

வேட்டையன் படம் அனிரூத் இசையில் நீட் தேர்வு பயிற்சி மையங்கள், போலி என்கவுண்டர்கள் ஆகியவற்றின் உண்மைத்தன்மையையும், சமூகத்தில் அடித்தட்டு நிலையில் உள்ள மக்களின் அவல நிலயையும் தெளிவாக காண்பித்தது. மேலும் இப்படம் பல உண்மைக் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.  

படத்தின் இயக்குனர் த.செ. ஞானவேலின் முந்தைய படமான ஜெய்பீம் லாக்கப் மரணங்களின் குரூரத்தை எடுத்துக் காட்டியது. பல தரப்பில் பாராட்டப்பட்ட கதையம்சம் கொண்ட படமாக ஜெய்பீம் இருந்தது. அதே தொனியில்  தனது அணுகுமுறையை மாற்றாமல் ரஜினி போன்ற பெரிய ஹீரோ வை வைத்து இது போன்ற படங்கள் எடுப்பது சற்று சிக்கலான காரியம் ஆகும். ஆனால் இயக்குனர் இதனை சாமர்த்தியமாக கையாண்டு உள்ளார். வேட்டையன் படத்தை தயாரித்த லைகா நிறுவனமும் எதிர்பார்த்த வசூலை பெற்றுள்ளது எனத் தெரிவித்துள்ளது. 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி