Chef Venkatesh Bhat: திருப்பி என்னை கூப்பிட வேண்டாம்.. விஜய் டிவிக்கு வார்னிங் கொடுத்த செப் வெங்கடேஷ் பட்
May 23, 2024, 12:00 PM IST
Chef Venkatesh Bhat: மீடியா மேசனுக்கு, விஜய் தொலைக்காட்சியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக அவர்கள் வெளியேறிவிட்டார்கள். அதனால் சன் தொலைக்காட்சியுடன் இணைந்து செய்கிறார்கள் என்றார் வெங்கடேஷ் பட்.
Chef Venkatesh Bhat: விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு அறிமுகமே தேவையில்லை. அதில் நடுவர்களாக இருந்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் சமையல் கலைஞர்களான தாமுவும், வெங்கடேஷ் பட்டும்.
சமையலில் கண்டிப்பாக இருக்கும் இவர்கள் போட்டியாளர்களுடன் அடிக்கும் லூட்டிகள் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கின்றன.
கிட்டத்தட்ட 4 சீசன்களை நிறைவு செய்த இந்த நிகழ்ச்சி தற்போது தன்னுடைய 5 ஆவது சீசனில் பயணம் செய்கிறது. செப் பட் சமீபத்தில் வெளியேறினார்.
விஜய் டிவிக்கு வார்னிங்
இந்நிலையில் தான் எதனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியே சென்றேன் என செப் பட் கூறி உள்ளார். அவர் பேசுகையில், “ மீடியா மேசனுக்கு, விஜய் தொலைக்காட்சியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக அவர்கள் வெளியேறிவிட்டார்கள். அதனால் சன் தொலைக்காட்சியுடன் இணைந்து செய்கிறார்கள்.
நன்றி கடன்
என்னை விஜய் டிவியின் பாலா சார் பேச வேண்டும் என அழைத்த போது கூட நான் சொன்ன விஷயமும் அது தான். கண்டிப்பாக வாங்க நம்ப அமர்ந்து காபி கூட சாப்பிடலாம். ஆனால் மீண்டும் என்னை விஜய் டிவிக்கு கூப்பிட வேண்டாம். இது மீடியாவுடன் எனக்கு நன்றி கடன்.
என்னை இதுவரை வளர்த்துவிட்டது, மீடியா மேசன். அதனால் எனக்கு நன்றி கடன் தான் முக்கியம். எனக்கு அவர்களுடன் வேலை செய்வது நன்றாக இருப்பதால் அவர்கள் எங்ளே சென்றாலும் நானும் செல்கிறேன். என்னுடைய ஷூட், உடை, சம்பளம் என அனைத்துமே அவர்கள் தான் பார்த்து கொள்கிறார்கள் “ என்றார்.
முன்னதாக, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது குறித்து வெங்கசேஷ் பட் வெளியிட்ட அறிக்கையில் “ கடந்த சில மாதங்களாக குக் வித் கோமாளி சீசன் 5 -ல் நான் நடுவராக தொடர்கிறேன் என்ற தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த வாய்ப்பின் வழியாக அதனை தெளிவுபடுத்தி விடுகிறேன்.
ஜாலியான பக்கத்தை காண்பித்தது
குக் வித் கோமாளி நிகழ்ச்சி என்னுடைய நிஜமான ஜாலியான பக்கத்தை காண்பித்தது.
நான் அந்த நிகழ்ச்சியில் நடுவராக தொடரவில்லை. லட்சக்கணக்கான மக்களையும், என்னையும் மகிழ்ச்சிபடுத்திய அந்த அழகான நிகழ்ச்சியில் இருந்து நான் பிரேக் எடுக்க இருக்கிறேன்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி என்னுடைய நிஜமான ஜாலியான பக்கத்தை காண்பித்தது. அது எனக்கு செளகரியமாகவும், நான் நானாக இருப்பதற்கும் வழிவகுத்தது. கடந்த 24 வருடங்களுக்கு மேலாக நான் இந்த சேனலுடன் தொடர்பில் இருந்திருக்கிறேன். இந்த தருணத்தில் நான் என்னுடைய பிற வாய்ப்புகளில் கவனம் செலுத்தும் வகையில், இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறு கிறேன். இந்த முடிவு மிகவும் கடினமான ஒன்றுதான் “ என்றார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்