தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  61 Years Of Avana Ivan: பாலசந்தரின் அடாவடித்தனமான நடிப்பு! ஹிட்ச்ஹாக் ஸ்டைலில் தமிழில் தரமான த்ரில்லர் படம்

61 Years of Avana Ivan: பாலசந்தரின் அடாவடித்தனமான நடிப்பு! ஹிட்ச்ஹாக் ஸ்டைலில் தமிழில் தரமான த்ரில்லர் படம்

Aug 31, 2023, 05:15 AM IST

google News
சினிமாக்களில் திருப்புமுனை சீன்களில் இயக்கம் என தனது பெயரை போடும் பழக்கம் இயக்குநர் கே. பாக்யராஜுக்கு உண்டு. ஆனால் அவருக்கு முன்னோடியாக இந்த பாணியை கடைப்பிடித்தவர் இயக்குநர் வீணை எஸ். பாலசந்தர். தமிழில் அதிரடி ஆக்‌ஷன் இல்லாத சீட் எட்ஜ் த்ரில்லர் படமாக அவனா இவன் படத்தை இயக்கியிருந்தார்.
சினிமாக்களில் திருப்புமுனை சீன்களில் இயக்கம் என தனது பெயரை போடும் பழக்கம் இயக்குநர் கே. பாக்யராஜுக்கு உண்டு. ஆனால் அவருக்கு முன்னோடியாக இந்த பாணியை கடைப்பிடித்தவர் இயக்குநர் வீணை எஸ். பாலசந்தர். தமிழில் அதிரடி ஆக்‌ஷன் இல்லாத சீட் எட்ஜ் த்ரில்லர் படமாக அவனா இவன் படத்தை இயக்கியிருந்தார்.

சினிமாக்களில் திருப்புமுனை சீன்களில் இயக்கம் என தனது பெயரை போடும் பழக்கம் இயக்குநர் கே. பாக்யராஜுக்கு உண்டு. ஆனால் அவருக்கு முன்னோடியாக இந்த பாணியை கடைப்பிடித்தவர் இயக்குநர் வீணை எஸ். பாலசந்தர். தமிழில் அதிரடி ஆக்‌ஷன் இல்லாத சீட் எட்ஜ் த்ரில்லர் படமாக அவனா இவன் படத்தை இயக்கியிருந்தார்.

தமிழ் சினிமாவின் ஹிட்ச்காக் என்ற சொல்லும் அளவுக்கு, தமிழில் பல்வேறு மிரட்டலான த்ரில்லர் படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் எஸ். பாலசந்தர். அடிப்படையில் வீணை கலைஞரான இவர் பின்னர் இயக்கம் மீது ஆர்வம் கொண்டு பல படங்களை இயக்கியதுடன், நடிகராகவும் தோன்றியுள்ளார்.

தனது படங்களில் ஏதாவது ஒரு புதுமை செய்து வந்த எஸ். பாலசந்தர் இயக்கத்தில் ஆக்‌ஷன் அதிரடி காட்சிகள் இல்லாமல் த்ரில்லர் படமாக உருவாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று, விமர்சக ரீதியாகவும் பெரும் பாராட்டை பெற்ற படம் அவனா இவன் திரைப்படம்.

ஹீரோ என்ற கதாபாத்திரம் இல்லாமல் பாலசந்தரே வில்லனாகவும், இசை, திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு அனைத்தையும் அவரே இந்த படத்தில் செய்திருப்பார். 1951இல் வெளியான அமெரிக்க திரைப்படமான ஏ பிளேஸ் இன் தி சன் என்ற படத்தை அடிப்படையாக கொண்டு அவனா இவன் படத்தை உருவாக்கியிருந்தார்.

அமெரிக்காவில் இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் நிகழ்ந்த உண்மை கொலை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட ஆன் அமெரிக்க டிராஜெடி என்ற நாவலை அடிப்படையாக வைத்துதான் ஏ பிளேஸ் இன் தி சன் படமே உருவாக்கப்பட்டிருந்தது.

பணக்கார பெண்னை திருமணம் செய்வதற்காக லிவிங் டூ கெதரில் இருந்து வரும் காதலியை கொலை செய்வதும், போலீசார் கொலையாளியை கைது செய்வதும் தான் படத்தின் ஒன்லைன். இதில் பெரிய நட்சத்திரங்கள் யாரும் இல்லாமல் குழந்தை கதாபாத்திரங்களாக தோன்றும் மாஸ்டர் ஸ்ரீதர், குட்டி பத்மினி ஆகியோர் கொலையாளியை போலீசிடம் பிடித்து கொடுக்கும் விதமாக விறுவிறுப்பான திரைக்கதையை அமைத்திருப்பார்கள்.

கருப்பு கண்ணாடி, கருப்பு உடை இதுதான் எனது டிரேட்மார்க் என சொல்லிக்கொள்ளும் வில்லன் கதாபாத்திரத்தில் வரும் எஸ். பாலசந்தர், படம் முழுவதும் சிகரெட் புகைத்தவாறே தோன்ற நரி போல் தந்திரதனத்தை வெளிப்படுத்தும் நடிப்பில் மிரட்டியிருப்பார்.

மற்ற நடிகர்களாக விஎஸ் ராகவன், சி.கே. சரஸ்வதி, வசந்தி உள்பட பலரும் தங்களுக்கான பாத்திரத்தை நிறைவாக செய்திருப்பார்கள். இந்த படம் மூலம் தயாரிப்பாளாராகவும் புரொமோஷன் பெற்ற எஸ். பாலசந்தர், அடுத்ததாக பொம்மை, நடுஇரவில் என இரண்டு படங்களை உருவாக்கி ஹிட்டும் கொடுத்தார்.

இந்த படத்துக்கு இசையும் எஸ். பாலசந்தர் தான். சமீபத்தில் வெளியான ராட்சசன் படத்தில் வரும் பியானோ பிட் போல், இந்த அவனா இவன் படம் நெடுகிலும் பியானோ சத்தத்தில் ஒலிக்கும் பின்னணி இசையில் வித்தியாசமான அனுபவத்தை தந்திருப்பார். வள்ளி வள்ளி என்ற ஒரு பாடலில் வெஸ்டர்ன் மியூசிக், லோக்கல் மியூசிக் ஆகியவற்றின் ப்யூஷனை அப்போது முயற்சித்து அ்மர்களப்படுத்தியிருப்பார்.

படத்தின், கதை, மேக்கிங், இசை, இதர தொழில்நுட்ப விஷயங்கள் அன்றைய காலகட்டத்தில் புதுமையாக இருந்ததுடன் எதிர்காலத்தை கண்முன்னே நிறுத்திய உணர்வை பார்வையாளர்களுக்கு தந்தது. விமர்சக ரீதியாகவும் பெரும் பாராட்டை பெற்ற இந்தப் படம் வசூலில் கோட்டை விட்டது என்றாலும், சினிமா மேக்கிங்கில் புதிய வடிவத்தை அமைத்து கொடுத்தது என்ற சொல்லலாம்.

தனது படங்களில் முக்கிய சீன்களில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என தனது பெயரை போடும் பழக்கத்தை கொண்டவர் இயக்குநர் கே. பாக்யராஜ். இப்படியான ஒரு வித்தியாச பழக்கத்தை அ்வர்தான் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது என பலரும் நினைத்திருக்கவும் வாய்ப்பு உள்ளது. ஆனால் பாக்ராஜுக்கு முன்னோடியாக இந்த முயற்சியை அவனா இவன் படத்தில் எஸ். பாலசந்தர் மேற்கொண்டிருப்பது பலரும் அறிந்திடாத விஷயமாகவே உள்ளது.

இந்த படத்தை யூடிப்பில் காண இங்கே கிளிக் செய்யவும் - https://www.youtube.com/watch?v=uvj5nQ6H1TU 

ஹாலிவுட் படத்தால் ஈர்க்கப்பட்டு அதே ஸ்டைலில் மேக்கிங் செய்து தமிழ் சினிமாவுக்கு புதிய பாதை வகுத்து கொடுத்த இயக்குநர் எஸ். பாலசந்தர் இயக்கிய த்ரில்லர் படமான அவனா இவன் வெளியாகி இன்றுடன் 61 ஆண்டுகள் ஆகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை