Urvashi: முதல் கணவரால் வந்த பிரச்னை.. பெரும் பாதிப்பு.. அப்படி ஒரு பழக்கத்திற்கு ஆளான ஊர்வசி
Jun 21, 2024, 06:32 AM IST
Urvashi: முதல் கணவரை பிரிந்தவுடன் தன்னை மறக்க வேண்டும் என நினைத்து ஊர்வசி குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்து உள்ளார்.
தமிழ் சினிமாவின் சிறந்த குணச்சித்திர நடிகைகளில் தனக்கென தனி இடம் பிடித்தவர் ஊர்வசி. தமிழில் இயக்குநர் பாக்கியராஜின் முந்தானை முடிச்சில் தனது 13 வயதில் முருங்கை காயுடன் நாயகியாக அறிமுகமானார்.
ஊர்வசி 25 ஜனவரி 1969ல் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சபரா விபி நாயர் விஜயலட்சுமி தம்பதியின் மகளாக பிறந்தவர். அவரது இயற்பெயர் கவிதா ரஞ்சனி. ஆனால் இவர் திரை உலகில் ஊர்வசி என்ற பெயரிலேயே பிரபலமானார். இவரது சகோதரிகள் கலாரஞ்சனி, கல்பானா. இவரது தாய் தந்தை நாடக நடிகர்களாக இருந்த நிலையில் சகோதரிகள் மூவருமே சிறந்த நடிகைகளாக இருந்தனர். அவரது சகோதரர்கள் பிரின்ஸ், கமல்ராய் ஆகியோரும் நடிகர்களாக இருந்தனர்.
1977ல் விதரொன்ன மொட்டுக்கள் என்ற திரைப்படத்தில் 8 வயதில் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் ஊர்வசி. அதேபடத்தில் அவரது சகோதரி கல்பனாவும் அறிமுகமானார்.
முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஊர்வசி குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்து உள்ளார்.
இது தொடர்பாக செய்யாறு பாலு பேசுகையில், “ மலையாளம், தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்த போது நடிகர் மனோஜ் கே ஜெயனை திருமணம் செய்து கொண்டார் ஊர்வசி.
குடிப்பழக்கம்
விரைவில் அவளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. நட்சத்திர தம்பதிகள் தங்கள் மகளுக்கு எட்டு வயதாக இருந்த போது பிரிந்தனர். மனோஜ் உடனான உறவு முறிந்தபோது, ஊர்வசி படங்களில் இருந்து விலகி, குடிப்பழக்கத்தால் தனது வாழ்க்கையை அழித்தார்.
தலைப்புச் செய்தி
விவாகரத்து நீதிமன்றத்துக்குக் கூட ஊர்வசி குடிபோதையில் வந்தது தான் தலைப்புச் செய்தி. பின்னர் அவர் ஒரு பேட்டியில் இது பற்றி வெளிப்படையாக பேசினார். தான் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதற்கு முதல் கணவர் தான் காரணம் என கூறினார். மேலும் இந்த போதையில் இருந்து விடுபட போராடி வருவதாகவும், அதன் பிறகு, பல முயற்சிகளை எடுத்து குடிப்பழக்கத்திலிருந்து வெளியே வந்தார்.
கை கொடுத்து உதவிய படங்கள்
அந்த நேரத்தில் தன்னை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சூழ்ந்ததாகவும் அவரே குறிப்பிட்டு இருந்தார்.
அதே சமயம் ஊர்வசி தனது சொந்தப் படங்களைப் பார்த்து தான் குடிப்பழக்கத்திலிருந்து வெளியே வந்தார். ஊர்வசி நடித்த படங்களின் காட்சிகளை அவர்களுக்குக் காட்டினர். உங்களைத் தவிர வேறு யாராலும் அத்தகைய நடிப்பை வெளிப்படுத்த முடியாது.
ஊர்வசி மீண்டும் நடிக்க வேண்டும், குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டு வர வேண்டும் என்று நினைத்து ஊக்கமும் மருந்தும் கொடுத்து குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டு வந்தார்.
இரண்டாவது திருமணம்
குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டு ஊர்வசி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். சிவ பிரசாத்துடன் இரண்டாவது திருமணத்தில் ஒரு மகன் பிறந்தார். தற்போது அவர் தனது கணவர், மகன் மற்றும் மூத்த மகள்களுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
ஊர்வசி படங்களில் இருந்து சிறிது இடைவெளி எடுத்தார், ஆனால் விரைவில் நடிக்க திரும்பினார். தற்போது, அவர் வலுவான பெண் கதாபாத்திரங்கள் மூலம் பார்வையாளர்கள் முன் தீவிரமாக நடித்து வருகிறார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்