‘போலி வருத்தத்திற்கு உண்மையை பலி கொடுக்க முடியாது..’ ஞானவேல் ராஜாவுக்கு பதிலடி கொடுத்த சசிகுமார்
Nov 29, 2023, 01:20 PM IST
அமீர் அண்ணா, ஞானவேல் ராஜா மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்ன என சசிகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
பருத்திவீரன் படத்தை இயக்கிய போது படத்தை சொன்ன தேதியில் இயக்குநர் அமீர் முடித்து கொடுக்கவில்லை எனவும், தவறான கணக்கு காட்டினார் எனவும் கூறி படத்தின் தயாரிப்பாளர் கே.இ. ஞானவேல் ராஜா குற்றச்சாட்டை முன் வைத்தார்.
அப்போது அதற்குப் பதில் கூறும்வகையில், அப்படத்தில் பணியாற்றிய சமுத்திரக்கனி, சசிகுமார் ஆகியோர் ஞானவேல் ராஜாவுக்குப் பதிலடி கொடுத்தனர். தவிர, இயக்குநர் அமீரும் விளக்கம் கொடுத்து உள்ளார்.
இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கி உள்ளது. நடிகர்கள் சசிகுமார், சமுத்திரக்கனி, பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் அறிக்கை வெளியிட்டனர்.
இது குறித்து கே.இ. ஞானவேல் ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், “பருத்திவீரன் பிரச்னை கடந்த 17 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
அது பற்றி நான் பேசியது கிடையாது. என்றைக்கும் அமீர் அண்ணன் என்று தான் நான் அவரை குறிப்பிடுவேன்.
ஆரம்பத்திலிருந்து அவர் குடும்பத்துடன் நெருங்கி பழகியவன். அவரின் சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது.
அதற்கு பதில் அளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமாவையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மதிப்பவன் நான் “ என குறிப்பிட்டு உள்ளார்.
இது தொடர்பாக சசிகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், “ அமீர் அண்ணா, ஞானவேல் ராஜா மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்ன?
நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் புண்படுத்தி இருந்தால் என்று குறிப்பிட்டு சொல்கிறார் ஞானவேல் ராஜா அப்படி எனில் அந்த சில வார்த்தைகள் என்ன?
திட்டமிட்டு ஒருவரை அவமானப்படுத்திவிட்டு அவருக்கு அவரை வருத்தம் வருந்துவது என்ன மாதிரியான வருத்தம்? இதன் மூலம் அமீர் அண்ணாக்கும் ஞானவேல் ராஜா சொல்ல வருவது என்ன? பெயரிடாத அந்த கடிதம் யாருக்கு?” எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்