தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  D. S. Mani Iyer Memorial Day : பத்ம பூஷண் விருது பெற்ற முதல் மிருதங்க இசைக் கலைஞர் டி. எஸ். மணி ஐயர்!

D. S. Mani Iyer Memorial Day : பத்ம பூஷண் விருது பெற்ற முதல் மிருதங்க இசைக் கலைஞர் டி. எஸ். மணி ஐயர்!

Divya Sekar HT Tamil

May 30, 2023, 05:45 AM IST

google News
சங்கீத கலாநிதி மற்றும் பத்ம பூஷண் விருதுகளைப் பெற்ற முதல் மிருதங்க இசைக் கலைஞர் எனும் பெருமை ர் பாலக்காடு டி. எஸ். மணி ஐயருக்கு உண்டு.
சங்கீத கலாநிதி மற்றும் பத்ம பூஷண் விருதுகளைப் பெற்ற முதல் மிருதங்க இசைக் கலைஞர் எனும் பெருமை ர் பாலக்காடு டி. எஸ். மணி ஐயருக்கு உண்டு.

சங்கீத கலாநிதி மற்றும் பத்ம பூஷண் விருதுகளைப் பெற்ற முதல் மிருதங்க இசைக் கலைஞர் எனும் பெருமை ர் பாலக்காடு டி. எஸ். மணி ஐயருக்கு உண்டு.

கச்சேரி மேடைகளில் சாதாரண அங்கமாக இருந்து வந்த மிருதங்கத்துக்கு கதாநாயக அந்தஸ்து பெற்றுத் தந்தவர் பாலக்காடு டி.எஸ்.மணி ஐயர். தனக்கென்று தனியொரு பாணியை அமைத்துக் ரசிகர்களை தன்வசப்படுத்தியவர். மணி ஐயரின் வாசிப்பைக் கேட்பதற்கென்றே அரங்கில் கூட்டம் அலைமோதிய காலம் உண்டு. சமகாலத்து முன்னணி வித்வான்கள் அத்தனை பேருக்கும் பக்க வாத்தியமாக மிருதங்கம் வாசித்திருக்கிறார் மணி ஐயர்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் பழையனூர் கிராமத்தில் இவர் டி.ஆர்.சேஷம் பாகவதர்-அனந்தம்மா தம்பதியருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார் பாலக்காடு டி.எஸ். மணி ஐயர். பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் இராமசுவாமி. ஆயினும் மணி என்ற தனது செல்லப்பெயரிலேயே அவர் பிரபலமானார்.

தனது 7 ஆவது வயதில், சாத்தபுரம் சுப்பையரிடம் மிருதங்கம் பயில ஆரம்பித்தார். தனது தந்தையின் நண்பர் விஸ்வநாத ஐயரிடமும் மிருதங்கம் பயின்றார். 10 வயது நிரம்பியபோது தன் தந்தைக்கும், மற்ற கதாகாலக்ஷேபக் கலைஞர்களுக்கும் பக்கவாத்தியம் வாசிக்க ஆரம்பித்துவிட்டார். தனது 15 ஆவது வயதில் தஞ்சாவூர் வைத்தியநாத ஐயரின் மாணவர் ஆனார்.

செம்பை வைத்தியநாத பாகவதரின் இசை நிகழ்ச்சிகளில் பக்கவாத்தியம் வாசிக்க ஆரம்பித்த பின்னர் இவர் புகழடையத் தொடங்கினார். 1940 ஆம் ஆண்டில் திருவாங்கூர் சமஸ்தான ஆஸ்தான வித்வானாக நியமனம் செய்யப்பட்டார்.செம்மங்குடி சீனிவாச ஐயர் பாலக்காடு மணி ஐயர் பற்றிக் குறிப்பிடுகையில், மணி ஐயர் தனக்கு முதன்முதலாக 1929 ஆம் ஆண்டு மிருதங்கம் வாசித்ததாகவும் அதிலிருந்து சுமார் 35 வருடங்கள் நூற்றுக்கணக்கான கச்சேரிகளில் இருவரும் இணைந்திருந்ததாகவும் மணி ஐயரின் தனித்திறமை அவற்றை நினைவில் நிற்க வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், பல வித்துவான்கள் மணி ஐயர் தங்களுக்கு மிருதங்கம் வாசிக்க வேண்டும் என விரும்பியதாகவும் அதற்காகச் சிலர் தமது நிகழ்ச்சிகளின் தேதிகளை மணி ஐயர் வரக்கூடியதாக மாற்றி அமைத்தார்கள் என்றும் செம்மங்குடி குறிப்பிட்டுள்ளார். கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை சித்தூரில் நடத்திய 'ரிஷிவாலி' பள்ளியில் 1979 ஆம் ஆண்டு இசை ஆசிரியராகச் சேர்ந்தார்.

தனிப்பட்ட முறையிலும் பல மாணவர்கள் இவரிடம் மிருதங்கம் பயின்றனர்.சங்கீத கலாநிதி மற்றும் பத்ம பூஷண் விருதுகளைப் பெற்ற முதல் மிருதங்க இசைக் கலைஞர் எனும் பெருமை இவருக்கு உண்டு.

இவர் பெற்ற விருதுகள்

ஜனாதிபதி விருது, 1956

சங்கீத கலாநிதி விருது, 1966

இசைப்பேரறிஞர் விருது, 1968

பத்ம பூஷன் விருது, 1971

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி