தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  K.balaji Death Anniversary: 'காதலுக்கு மரியாதை.. மனைவிக்கு மரியாதை..' உண்மையான காதல் மன்னன் பாலாஜி!

K.Balaji Death Anniversary: 'காதலுக்கு மரியாதை.. மனைவிக்கு மரியாதை..' உண்மையான காதல் மன்னன் பாலாஜி!

May 02, 2023, 06:14 PM IST

google News
K.Balaji Death Anniversary: ஜனவரி 26ம் தேதி கே.பாலாஜியின் திருமண நாள். அதனால் தனது மனைவியை கரம் பிடித்த நாளில் தன் படங்கள் வெளி வர வேண்டும் என்பதை ஒரு சென்டி மெண்டாகவே வைத்திருந்தார்.
K.Balaji Death Anniversary: ஜனவரி 26ம் தேதி கே.பாலாஜியின் திருமண நாள். அதனால் தனது மனைவியை கரம் பிடித்த நாளில் தன் படங்கள் வெளி வர வேண்டும் என்பதை ஒரு சென்டி மெண்டாகவே வைத்திருந்தார்.

K.Balaji Death Anniversary: ஜனவரி 26ம் தேதி கே.பாலாஜியின் திருமண நாள். அதனால் தனது மனைவியை கரம் பிடித்த நாளில் தன் படங்கள் வெளி வர வேண்டும் என்பதை ஒரு சென்டி மெண்டாகவே வைத்திருந்தார்.

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் தயாரிப்பு, கதாநாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர் என கால் நூற்றாண்டுக்கும் மேலாக வலம் வந்த கே.பாலாஜி நினைவு தினம் இன்று.

பாலாஜி 1953 ஆம் ஆண்டில் வெளிவந்த ஔவையார் என்ற படத்தில் முதன் முதலாக நடித்தார். கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் பாலாஜி. தொடக்க காலத்தில் அவர் சென்னை கிண்டியில் இருந்த நரசுஸ் ஸ்டூடியோவில், தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றினார்.

இதையடுத்து தன் மூத்த மகள் சுஜாதா பெயரில் சுஜாதா சினி ஆர்ட்ஸ் என்ற கம்பெனியை துவக்கினார். இதன் முதல் படம் அண்ணாவின் ஆசை 1966ல் வெளியானது. ஜெமினி சாவித்திரிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அந்த படத்தில் அவர்களை நடிக்க வைத்திருந்தார். அந்த படம் வியாபாரம் ஆகவில்லை. 

ஒரு கட்டத்தில் ஜெமினி எஸ்.எஸ் வாசன் அந்த படத்தை வினியோகம் செய்ய முன் வந்தார். இதனால் பெரும் நஷ்டம் இல்லாமல் பாலாஜி தப்பினார். இதையடுத்துதான் அவர் ஒரு முடிவுக்கு வந்தார். என்னவென்றால் புதிய கதையை நேரடியாக எடுப்பதற்கு பதில் வேறு மொழியில் ஓடி வெற்றி பெற்ற படங்களை மொழி மாற்றம் செய்து ரீமேக் செய்ய முடிவு செய்தார்.

அதில் அவர் அந்த படங்களை தேர்ந்தெடுக்க புது முயற்சியில் ஈடுபட்டார் . வெற்றி பெரும் பிற மொழி படங்கள் ஓடும் ஊருக்கே சென்று ஆட்டோ டிரைவர், டீக்கடைகாரர்கள் என பலரிடம் படத்தை பற்றி கேட்டு அதன் பின் அந்த படம் எடுப்பது குறித்து முடிவு செய்தார். இப்படி இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் வெற்றி வாகை சூடிய படங்களை தமிழுக்கு ஏற்றார் போல மொழி மாற்றம் செய்து வெற்றி குவித்தார்.

இதையடுத்து தங்கை, என் தம்பி ராஜா, எங்கிருந்தோ வந்தாள், நீதி, ராஜா, தியாகம் உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்தார். இதையடுத்து கமலை வைத்து சட்டம், வாழ்வே மாயம் படங்களையும் எடுத்தார். ரஜினியை வைத்து பில்லா படத்தை தயாரித்தார். அதில் தான் முதல் முதலில் ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று கூப்பிடும் வசனம் வரும்.

பாலாஜி எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுக்கவில்லை. ஆனால் ஒவ்வொரு விழா அன்றும் எம்.ஜி.ஆரிடம் சென்று அவரிடம் ராசியான கையால் 100 ரூபாய் வாங்குவது பாலாஜியின் வழக்கம். ஒரு கட்டத்தில் சிவாஜி வச்சு படம் எடுக்குற என்னை வைத்து எடுக்க மாட்டேங்குற என்று கேட்டதற்கு ஏதேதோ சொல்லி கடைசி வரை நழுவி விட்டார்.

தன் மனைவி மீது மிகுந்த காதல் கொண்டிருந்தார் பாலாஜி. ஜனவரி 26ம் தேதி கே.பாலாஜியின் திருமண நாள். அதனால் தனது மனைவியை கரம் பிடித்த நாளில் தன் படங்கள் வெளி வர வேண்டும் என்பதை ஒரு சென்டி மெண்டாகவே வைத்திருந்தார். எனவே அந்தநாளில், படம் ரிலீஸ் செய்யவேண்டும் என விரும்பினார். இதனால் பாலாஜியின் முக்கால்வாசி படங்கள், ஜனவரி 26ம் தேதியன்று வெளியானவை. அதே சமயம் நடிகர் நடிகைகள் தொடங்கி டெக்னீஷியன், லைட்பாய் உட்பட எவருக்கும் சம்பள பாக்கியே வைக்காதவர், யாருக்கு என்ன சம்பளம் எவ்வளவு சம்பளம் என்பதையெல்லாம் கனக்கச்சிதமாக முடிவு செய்து, யார் மனமும் நோகாமல் உடனுக்குடன் தருபவர் என்றெல்லாம் கே.பாலாஜியை இன்றைக்கும் கொண்டாடுகின்றனர் திரையுலகினர்.

உடல் நலக்குறைவால் கே.பாலாஜி, 2009 மே 2-ம் தேதி காலமானார். அவரது நினைவு நாளான இன்று அவர் குறித்த நினைவுகளை பகிர்ந்து கொள்வதில் ஹெச்டி தமிழ் பெருமிதம் கொள்கிறது.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி