தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  டிக்டாக் பிரபலம் டான்சர் ரமேஷ் தற்கொலை! பிறந்தநாள் அன்றே பலியான சோகம்!

டிக்டாக் பிரபலம் டான்சர் ரமேஷ் தற்கொலை! பிறந்தநாள் அன்றே பலியான சோகம்!

Kathiravan V HT Tamil

Jan 27, 2023, 07:26 PM IST

Dancer Ramesh Suicide: டிக்டாக் பிரபலம் டான்சர் ரமேஷ் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Dancer Ramesh Suicide: டிக்டாக் பிரபலம் டான்சர் ரமேஷ் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Dancer Ramesh Suicide: டிக்டாக் பிரபலம் டான்சர் ரமேஷ் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிக்டாக், இன்ஸ்க்டாகிரம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மைக்கேல் ஜாக்சன் ஸ்டைல் நடனம் மூலம் பல லைக்குகளை அள்ளிய டான்சர் ரமேஷ் சென்னையில் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மூர் மார்க்கெட் பகுதியை சேர்ந்த டான்சர் ரமேஷ்க்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள கே.பி. பார்க் அரசு குடியிருப்பு பகுதியில் இவரது முதல் மனைவியும், மூர் மார்க்கெட் பகுதியில் இவரது இரண்டாவது மனைவியும் வசித்து வருகின்றனர். இரண்டு வீடுகளிலும் மாறி மாறி டான்சர் ரமேஷ் வசித்து வந்தார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Suriya 44 Shoot: ‘இப்ப வந்து மோதுடா’; லைட்ஸ், கேமரா, ஆக்‌ஷன்.. முரட்டு லுக்கில் சூர்யா!- சூர்யா44 அறிமுக வீடியோ!

Vani Bhojan: நீட் தேர்வு பிரச்சினை; ‘ரொம்ப ரொம்ப கஷ்டமா போச்சு..’ - மேடையில் கண்கலங்கிய வாணி போஜன்!

Kamal Haasan:எனக்கு அம்புட்டு சந்தோஷம்; அண்ணனுக்கும், தம்பிக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள்! - கமல்ஹாசன்

Silambarasan: ரெட் கார்டு விவகாரம்..‘உண்மையை பேசினாலே கஷ்டப்பட வேண்டியதுதான்’ - சிலம்பரசன் பேட்டி

இந்த நிலையில் பிறந்தநாளான இன்று அவரது முதல் மனைவியை சந்திக்க புளியந்தோப்பு கேபி பார்க் குடியிருப்புக்கு டான்சர் ரமேஷ் சென்ற நிலையில், அக்குடியிருப்பின் 10ஆவது மாடியில் இருந்து குதித்து டான்சர் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டார். ரமேஷ் சமூக வலத்தளம் மட்டுமின்றி, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் சமீபத்தில் வெளியான துணிவு படத்திலும் நடித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்திலும் அவர் நடித்துள்ளார்

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி