Samantha On Divorce: அந்த மூன்று வருடங்கள் நடந்து இருக்க கூடாது.. விவாகரத்திற்கு பிறகு புலம்பும் சமந்தா!
Jul 18, 2024, 12:45 PM IST
Samantha On Divorce: நடிகை சமந்தா தன் வாழ்க்கையில் அந்த மூன்று வருடங்கள் மட்டும் நடந்து இருக்கவே கூடாது என கூறி உள்ளார்.
பிரபலங்களின் வாழ்க்கை எப்போதும் தலைப்பு செய்திகளில் இருக்கும். நடிகர்களின் வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகளைக் காணலாம்.
மூன்று வருடம் சந்தித்த பிரச்னை
அவர்களில் ஒருவர் நடிகை சமந்தா ரூத் பிரபு கடந்த சில வருடங்களாக பல ஏற்ற தாழ்வுகளை சந்தித்து வருகிறார். கடந்த மூன்று வருடங்களாக சமந்தா சற்று நன்றாக இல்லை. முதலில் அவள் விவாகரத்துக்காக போராடினார். பின்னர் மயோசிடிஸ் போன்ற கடுமையான நோயால் போராடினார்.
இந்த மூன்று வருடங்களின் பிரச்னைகள் மற்றும் சூழ்நிலைகள் குறித்து அவர் இப்போது மௌனத்தை கலைத்து பேசி உள்ளார். தீயில் இருந்து வெளியே வந்துவிட்டேன் என்று சமந்தா கூறினார்.
சமந்தா பேட்டி
இதெல்லாம் அவருக்கு எளிதாக இருக்கவில்லை. இது தனது வாழ்க்கையில் மிகவும் கடினமான காலம் என்று சமந்தா கூறினார்.
அதில், “ பின்னோக்கிப் பார்த்தால், இந்த நிலைமை விரும்பத்தகாததாக தெரிகிறது. சில காலத்திற்கு முன்பு, நான் எனது நண்பருடன் இது பற்றி விவாதித்தேன். இந்த நேரத்தில், கடந்த மூன்று வருடங்கள் இப்படி இருந்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை.
வலிமையாக இருக்க வேண்டும்
ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்ள வேண்டும். அதிலிருந்து வெளியே வரும் போது, நாம் முன்பை விட வலிமையாக இருக்க வேண்டும் என்பதை உணர வேண்டும். ஏனென்றால் நான் இங்கு வருவதற்கு நெருப்பு வழியே சென்று இருக்கிறேன். எனவே இந்த உலகத்திக் ஆன்மிகம் இருப்பது மிகவும் முக்கியம் என நினைக்கிறேன். என்னையும் ஆன்மிகம் தான் வெளியே கொண்டு வந்து சேர்த்தது “ என்றார்.
சமந்தாவின் படங்கள்
திரைப்படங்களைப் பொறுத்த வரை, சமந்தா கடைசியாக குஷி படத்தில் நடித்தார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரும் வெற்றி பெற்றது. தற்போது பாலிவுட்டில் பல வெப் சீரிஸ்களில் நடித்து வரும் சமந்தா, தெலுங்கில் சொந்தமாக தயாரிக்கும் மா இந்தி பங்காரம் படத்திலும் நடித்து வருகிறார்.
சமந்தா அக்கினேனி, நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு, நான்கு வருடங்களுக்கு பிறந்து சென்றார்கள். இருவரும் தங்கள் வாழ்க்கையில் கவனம் செலுத்துகிறார்கள். மயோசிடிஸ் என்ற நோயால் சில காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார் சமந்தா.
சிகிச்சைக்காக வெளிநாட்டிற்குச் சென்ற சமந்தா
சமீபகாலமாக தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் ஹாட் அண்ட் போல்டான படங்களை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார் சமந்தா. இருப்பினும் அவர் சமீபத்தில் தனது கடந்த கால தவறுகள் குறித்து சில அதிர்ச்சியான கருத்துக்களை தெரிவித்தார்.
மயோசிடிஸ் சிகிச்சைக்காக வெளிநாட்டிற்குச் சென்ற சமந்தா, தற்போது ஆரோக்கிய போட் காஸ்ட் வீடியோக்களை உருவாக்குகிறார். ஆரோக்கியத்தை அலட்சியம் செய்ய கூடாது என்று பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்