Today Tamil Movies : கண்ணெதிரே தோன்றினாள்.. தெய்வ வாக்கு.. தீர்த்த கரையினிலே என இன்றைய நாளில் வெளியான படங்கள் லிஸ்ட்!
Sep 11, 2024, 11:40 AM IST
Today Tamil Movies : பிரசாந்த், சிம்ரன், கரண் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான கண்ணெதிரே தோன்றினாள்,பிரகாஷ் ராஜ், தேவயானி, ராதிகா நடிப்பில் வெளியான செந்தூரம் என இன்றைய நாளில் வெளியான படங்கள் குறித்துப் பார்க்கலாம்.
ஸ்ட்ராபெரி
ஸ்ட்ராபெரி என்பது 2015 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இப்படம் திகில் மற்றும் நகைச்சுவைத் திரைப்படமாகும். இதில் பா விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், சமுத்திரக்கனி, யூவினா பார்த்தவி, தேவயானி ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளார்கள். இப்படம் 11 செப்டம்பர் 2015 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
ஈரம்
ஈரம் என்பது 2009 ஆம் ஆண்டு வெளியான திகில் திரைப்படம் ஆகும். அறிவழகன்தனது இயக்குனராக அறிமுகமாகி எஸ். ஷங்கரால் தயாரித்து இயக்கினார் . இப்படத்தில் ஆதி , நந்தா , சிந்து மேனன் மற்றும் சரண்யா மோகன் ஆகியோர் நடித்துள்ளனர் , ஸ்ரீநாத் , லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர். எஸ். தமன் இசையமைத்துள்ளார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார் மற்றும் கிஷோர் தே எடிட்டிங் செய்துள்ளார். இந்த திரைப்படம் வணிகரீதியாக வெற்றியடைந்து கதை சொல்லும் வகையில் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.
கண்ணெதிரே தோன்றினாள்
ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரசாந்த், சிம்ரன், கரண் உள்ளிட்டோர் நடிப்பில் 1998இல் வெளியான படம் கண்ணெதிரே தோன்றினாள் இந்த படத்தின் கதை பிரசாந்த், கரண் கதாபாத்திரத்தின் நட்பை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும். இப்படத்தில் தேவா இசையில் இடம்பெற்ற ஈஸ்வரா பாடல் பட்டி தொட்டிஎங்கும் ஒலித்தது.
செந்தூரம்
செந்தூரம் 1998 ஆம் ஆண்டு பிரகாஷ் ராஜ், தேவயானி, ராதிகா மற்றும் மூர்த்தி நடிப்பில், இளையராஜா இசையில், சங்கமன் இயக்கத்தில், ஆர். பி. சுந்தரலிங்கம் தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படம் ஆகும்.
இத்திரைப்படத்தில் பிரகாஷ் ராஜின் பாத்திரம் முதலில் நடிகர் மணிவண்ணனுக்கு வழங்கப்பட்டது , அவர் தேதி பிரச்சனையை காரணம் காட்டி படத்தை நிராகரித்தார். நிதிச் சிக்கல்கள் காரணமாக இந்தப் படம் ஆரம்பத்தில் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டது, ஆனால் பின்னர் பைனான்சியர் தரம்சந்த் லுங்கட்டின் உதவியுடன் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டது.
தெய்வ வாக்கு
1992 இல் வெளிவந்த திரைப்படம் தெய்வ வாக்கு ஆகும். இப்படத்தை எம். எஸ். மாது இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் கார்த்திக் மற்றும் ரேவதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தை டி. சிவா தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்த இத்திரைப்படம் 1992 செப்டம்பர் மாதம் 11 அன்று வெளியானது. இப்படம் சராசரி லாபத்தையே ஈட்டியது.தெலுங்கு மொழியில் "சங்கீர்த்தனா" என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டு 1997 ல் வெளிவந்தது.
எல்லைச்சாமி
எல்லைச்சாமி என்பது 1992 இல் வெளிவந்த திரைப்படமாகும். இதனை கே. ரங்கராஜ் தயாரித்து , இயக்கியிருந்தார்.. இத்திரைப்படத்தில் சரத்குமார். ரூபினி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இவர்களுடன் நாசர், வெற்றி விக்னேஷ்வர், கௌரி ஆகியோரும் நடித்திருந்தனர். எஸ். ஏ. ராஜ்குமார் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
தீர்த்த கரையினிலே
தீர்த்தக் கரையினிலே திரைப்படம் 1987ல் வெளிவந்த திரைப்படமாகும். இதனை மணிவண்ணன் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் மோகன், ரூபினி, சனகராஜ் மற்றும் செந்தில் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் வணிக ரீதியில் வெற்றப்பட்ட படமாகும்.
கன்னி பெண்
கன்னிப் பெண் 1969 ஆம் ஆண்டு செப்டமபர் மாதம் 11 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், லட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தன.
தேவதாஸ்
தேவதாஸ் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும். இது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் எடுக்கப்பட்ட படமாகும். தமிழில் தேவதாஸ் எனவும் தெலுங்கில் தேவதாசு எனும் பெயரிலும் வெளிவந்தது. இப்படம் சரத்சந்திர சட்டோபாத்யாயா 1917இல் எழுதிய தேவதாஸ் என்ற புதினத்தின் அடிப்படையில் இது படமாக்கப்பட்டது. சாரங்கபாணி திரைக்கதை எழுத, வேதாந்தம் ராமைய்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வர ராவ், எம். என். நம்பியார், சாவித்திரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படம் தெலுங்கு தமிழ் என இரு மொழிகளிலும் தயாரிக்கபட்டது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.