Actor Vijay: ‘தமிழக முன்னேற்றக் கழகம்’ தளபதி விஜய்.. தலைவராகும் கட்சிக்கு இது தான் பெயரா?
Jan 29, 2024, 08:58 PM IST
தமிழக முன்னேற்றக் கழகம் என்னும் கட்சியின் தலைவராக உருவெடுக்கிறார், நடிகர் விஜய்.
நடிகர் விஜய் ஆரம்பிக்கவிருக்கும் கட்சிக்கு தமிழக முன்னேற்றக் கழகம் என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி முதல் வாரத்தில் கட்சி பெயர், கொடி உள்ளிட்ட முழு விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது.
விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாகப் பதிவுசெய்ய, வரும் பிப்ரவரி 4ஆம் தேதி டெல்லி செல்ல உள்ளார், விஜய் மக்கள் இயக்கப்பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் எனத் தெரிகிறது. இதற்காக புஸ்ஸி ஆனந்த் தலைமையிலான 25க்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாகிகள் டெல்லி செல்லவுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. இதற்காக நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. இந்த முடிவினை முக்கிய நிர்வாகிகளிடம் தெரிவித்தநிலையில், அத்தகவல் வெளியில் கசிந்துள்ளது. நடிகர் விஜய் ஆரம்பிக்கவிருக்கும் கட்சிக்கு தமிழக முன்னேற்றக் கழகம் என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி முதல் வாரத்தில் கட்சி பெயர், கொடி உள்ளிட்ட முழு விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது.
வரும் தேர்தலில் நடிகர் விஜய்யின் கட்சி போட்டியிட வேண்டும் என்று ஆதரவாளர்கள் விரும்புகின்றனர்.
மேலும் வரும் நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிடக்கூட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக நிர்வாகிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் அதில் நல்ல பெயரைச் சம்பாதித்துள்ள இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளது எனக்கூறப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பாக, "அங்கீகரிக்கப்பட்ட சட்டவிதிகளுடன் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய முழுமூச்சாக’’ பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
விஜய் தனது ரசிகர் மன்றத்தை ஒரு பொது நல அமைப்பாக மாற்றி, பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தனது அரசியல் கனவை வளர்த்து வருகிறார். அவரது அரசியல் பிரவேசத்திற்காக விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், இலவச உணவு விநியோகம், கண் தானம், இரவு நேர ஆய்வு மையங்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
10, 12ஆம் வகுப்புகளில் முதலிடம் பெற்றவர்களை விஜய் விழாவாக ஏற்பாடு செய்து கெளரவித்தார். மேலும் பி.ஆர்.அம்பேத்கர், பெரியார் ஈ.வே.ராமசாமி மற்றும் காமராஜ் போன்ற தலைவர்கள் மற்றும் அவர்களின் லட்சியங்களைப் பற்றி படிக்குமாறு மாணவர்களை வலியுறுத்தினார். கன மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களுக்கு அவர் சமீபத்தில் சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தார்.
தான் அரசியலுக்கு வரப்போகிறேன் என மறைமுகமாக சமீப காலமாக சொல்லி கொண்டே இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர், அரசியலுக்குள் நுழைந்து தமிழக முதலமைச்சராகப் பதவி வகித்தனர். அதேபோல், திரைக்கதை எழுத்தாளரும் வசனகர்த்தாவுமான கலைஞர் கருணாநிதி தமிழகத்தின் ஐந்துமுறை முதலமைச்சராக இருந்துள்ளார். அந்த வழியில் தேமுதிக என்னும் கட்சியைத் தொடங்கி, மறைந்த நடிகர் விஜயகாந்த், எதிர்க்கட்சி அந்தஸ்துவரைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்