தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  “சமூக நீதி இட ஒதுக்கீடு அல்ல..இரு மொழி கொள்கையே..அரசியல் தலையிடற்ற லஞ்ச லாவண்யம்..” - த.வெ.க கொள்கை பட்டியல்!

“சமூக நீதி இட ஒதுக்கீடு அல்ல..இரு மொழி கொள்கையே..அரசியல் தலையிடற்ற லஞ்ச லாவண்யம்..” - த.வெ.க கொள்கை பட்டியல்!

Oct 27, 2024, 06:42 PM IST

google News
த.வெ.க கொள்கை பட்டியல்!தமிழக வெற்றிக்கழத்தினுடைய கொள்கைகளை விக்கிரவாண்டியில் நடைபெற்று வரும் தன் கட்சியின் முதல் மாநாட்டில் அறிவித்து இருக்கிறார். அதில் சமூக நீதி இட ஒதுக்கீடு.. இரு மொழி கொள்கை.. லஞ்ச லாவண்யம் இல்லா அரசு உள்ளிட்டவை இடம் பெற்று இருக்கின்றன.
த.வெ.க கொள்கை பட்டியல்!தமிழக வெற்றிக்கழத்தினுடைய கொள்கைகளை விக்கிரவாண்டியில் நடைபெற்று வரும் தன் கட்சியின் முதல் மாநாட்டில் அறிவித்து இருக்கிறார். அதில் சமூக நீதி இட ஒதுக்கீடு.. இரு மொழி கொள்கை.. லஞ்ச லாவண்யம் இல்லா அரசு உள்ளிட்டவை இடம் பெற்று இருக்கின்றன.

த.வெ.க கொள்கை பட்டியல்!தமிழக வெற்றிக்கழத்தினுடைய கொள்கைகளை விக்கிரவாண்டியில் நடைபெற்று வரும் தன் கட்சியின் முதல் மாநாட்டில் அறிவித்து இருக்கிறார். அதில் சமூக நீதி இட ஒதுக்கீடு.. இரு மொழி கொள்கை.. லஞ்ச லாவண்யம் இல்லா அரசு உள்ளிட்டவை இடம் பெற்று இருக்கின்றன.

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக மேடைக்கு வந்த தமிழக கட்சியின் தலைவர் விஜய் 100 அடி கம்பத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை ஏற்றினார். 

இதனையடுத்து அவர் சார்பாக தமிழக வெற்றிக்கழகத்தின் கொள்கைகளை பேராசிரியர் முனைவர் சம்பத்குமார் அறிவித்தார்

அவர் பேசியதாவது, “

1.கோட்பாடு

எங்களுடைய கோட்பாடு  “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்..” மக்கள் யாவரும் பிறப்பால் சமமே…பாரபட்சமற்ற சமநிலை சமூகம் படைத்தல் என்பதே எங்களுடைய கோட்பாடு ஆகும்.

2. தமிழக வெற்றி கழகத்தினுடைய குறிக்கோள் 

மதம், சாதி, நிறம் இனம், மொழி, பாலின அடையாளம், பொருளாதாரம் என்கிற தனி அடையாளங்களுக்குள் மனித சமூகத்தை சுருக்காது, தமிழ்நாட்டில் வாழும் அனைத்து மக்களின் தனிமனித சமூக பொருளாதார அரசியல் உரிமைகளை நிலை நிறுத்தி, எல்லோருக்கும் எல்லாமுமான சமநிலை சமூகம் உருவாக்குவது ஆகும். 

3.சமூக நீதிக் கொள்கைகள்.

நம்முடைய கொள்கை மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகள். ஒரு நாட்டின் மக்களை அவர்கள் சார்ந்த இனம், மதம், மொழி, சாதி பாலினம் என்று பிரித்து பாகுபடுத்தாமல், சம உரிமைகளை அவர்களுக்கு உத்திரவாதப்படுத்தி, சாத்தியப்படுத்துவது. 

ஆட்சி அதிகாரம், சட்டம், நீதி, அரசு இயந்திரங்களை தவறாக பயன்படுத்தி வெகுஜன மக்களின் அடிப்படை சுதந்திர உரிமைகளை பறிக்கும் மாநில, ஒன்றிய ஆட்சியாளர்களின் மக்கள் விரோத செயல்பாடுகளை எதிர்த்து, மக்கள் வாழ ஜனநாயக உரிமைகளை நிலை நாட்டுவது. 

4. சமூக நீதி இட ஒதுக்கீடு அல்ல..

சமதர்ம, சமூக நீதி இட ஒதுக்கியது அல்ல.. விகிதாச்சார. இடப்பங்கீடே உண்மையான சமூக நீதிக்கு வழிவகுக்கும். ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, சாதி முழுவதுமாக ஒழிக்கப்படும் வரை அனைத்து பிரிவினருக்கும், அனைத்து துறைகளிலும் விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்குவதே தமிழக வெற்றி கழகத்தின் சமதர்ம சமூக நீதியாகும்.

5.பாலின சமத்துவத்திற்குரிய உரிமை 

எல்லா நிலைகளிலும் ஆண்களுக்கு நிகரானவர்கள் பெண்கள். மூன்றாம் பாலினத்தோர் மாற்றுத்திறனாளிகள் எல்லா வகைகளிலும் மற்றவர்களுக்கு சமமானவர்களே என்பது நம்முடைய சமத்துவம் ஆகும். 

6.மதச்சார்பின்மை

தனிப்பட்ட மத நம்பிக்கைகளிலும், அனைத்து மதங்களையும், மத நம்பிக்கை அற்றவரையும் சமமாக பாவிக்கும் அரசு ஆட்சி நிர்வாகம்தான் நம்முடைய மதச்சார்பின்மை கொள்கை

7.மாநில தன்னாட்சி உரிமை

மாநில தன்னாட்சி உரிமையே அந்தந்த மக்களின் தலையாய உரிமை. தன்னாட்சிக்கான உரிமைகளை மீட்பது என்பது தமிழக வெற்றி கழகத்தினுடைய தன்னாட்சி உரிமையாகும்.

8.இரு மொழி கொள்கை

இரு மொழி கொள்கை, தாய்மொழியான தமிழ், உலக இணைப்பு மொழியான ஆங்கிலம் என இரு மொழி கொள்கையை தமிழக வெற்றிக்கழகம் பின்பற்றுகிறது; தமிழே ஆட்சி மொழி தமிழே வழக்காடும் மொழி தமிழே வழிபாட்டு மொழி; தமிழ் வழியில் கல்வி கற்றவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். 

9.அரசியல் தலையீடல்

அரசு துறை மற்றும் தனியார் துறை என எந்த துறையிலும் அரசியல் தலையிடற்ற லஞ்ச லாவண்யம், ஊழல் லட்சம் நிர்வாகத்தை நாம் கொண்டு வருவோம். மத, இட, மொழி வர்க்க பேதமற்ற வகையில், கல்வி சுகாதாரம், தூய காற்று, தூய குடிநீர் என்பது எல்லோருக்குமான அடிப்படை உரிமை ஆகும். சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்பது அரசின் தலையாயக் கடமையாகும்.

10.பகுத்தறிவு சிந்தனை

பகுத்தறிவு சிந்தனை மனப்பான்மை, மனித குலத்தின் உடல், மன  நலனுக்கு கேடாக அமையும் வகையில் உள்ள பிற்போக்கு சிந்தனைகளை நிராகரிப்பது நம் கட்சியின் கொள்கையாகும். 

11.தீண்டாமை ஒழிப்பு

தீண்டாமை ஒழிப்பு பழமை வாத பழக்க வழக்கங்களை நிராகரிப்பது தீண்டாமை ஒழிப்பின் முதல் படியாகும்

12.இயற்கை வள பாதுகாப்பு

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நெருக்கடியை எதிர்கொள்ளக்கூடிய இயற்கைக்கு கூறு விளைவிக்காத பகுதி சார் மாநில வளர்ச்சி பரவலாக்கம் உருவாக்கம் கொண்டுவரப்படும். 

13. போதை இல்லா தமிழகம்

உற்பத்தி திறன், உடல் மற்றும் உள நலத்திற்கு கேடு விளைவித்து சமூக சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் போதை அறவே இல்லாத தமிழகம் படைக்கப்படும். இதுவே வெற்றி கழகத்தினுடைய அடிப்படைக் கொள்கைகள் ஆகும்” இவ்வாறு அவர் பேசினார். 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி