தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rip Captain Vijayakanth: ‘கை போன என்ன..’ விஜயகாந்தை மலை போல் நம்பிய தலைவாசல் விஜய்!

RIP Captain Vijayakanth: ‘கை போன என்ன..’ விஜயகாந்தை மலை போல் நம்பிய தலைவாசல் விஜய்!

Aarthi V HT Tamil

Dec 28, 2023, 09:54 AM IST

google News
RIP Captain: தலைவாசல் படத்தின் படப்பிடிப்பில் விஜயகாந்துடன் நடந்த ஒரு நடந்த ஒரு நிகழ்வு குறித்து தலைவாசல் விஜய் முன்பு பேட்டி அளித்தார்.
RIP Captain: தலைவாசல் படத்தின் படப்பிடிப்பில் விஜயகாந்துடன் நடந்த ஒரு நடந்த ஒரு நிகழ்வு குறித்து தலைவாசல் விஜய் முன்பு பேட்டி அளித்தார்.

RIP Captain: தலைவாசல் படத்தின் படப்பிடிப்பில் விஜயகாந்துடன் நடந்த ஒரு நடந்த ஒரு நிகழ்வு குறித்து தலைவாசல் விஜய் முன்பு பேட்டி அளித்தார்.

Captain Vijayakanth Passed Away: தே.மு.தி.க. தலைவரும், நடிகருமான விஜயகாந்த் இன்று (டிச.28) காலை காலமானார். கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மியாட் மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்தது.

இந்நிலையில் பலரை வாழ வைத்து பார்க்க வேண்டும் என நினைக்கும் விஜயகாந்த் இறந்தது பலருக்கு சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக தலைவாசல் படத்தின் படப்பிடிப்பில் ஒரு காட்சியில் தலைவாசல் விஜய் தன் கையை விஜயகாந்த் வெட்டுவது போல் காட்சி இருந்து உள்ளது.

இந்த படப்பிடிப்பிற்கு டம்மியாக செய்யப்பட்ட வீச்சருவால் கொண்டு வர மறந்துவிட்டார்கள் படக்குழுவினர். அப்போது என்ன செய்வது என தெரியாமல் எல்லாரும் முழித்து கொண்டு இருந்தார்கள்.

ஆனால் அந்த ஷாட்டை எடுத்தே ஆக வேண்டும் என்ற சூழல் இருந்தது. என்ன நடந்தது என விஜயகாந்த் கேட்டு இருந்தார். உடனே நடந்ததை எல்லாம் சொல்லி இருக்கிறார்கள்.

உண்மையான வீச்சருவாளை வைத்து எடுக்க யோசித்தார் விஜயகாந்த். தலைவாசல் விஜய்யிடம் ,"என் மேல் நம்பிக்கை இருக்கிறதா? நான் இந்த அறிவாளை வைத்து வெட்டவா ?" என கேட்டு இருக்கிறார்.

காட்சிக்காக தனது கைகளை பின்னால் கட்டிவிட்டு, கை இருக்க வேண்டிய இடத்தில் வாழை மரத்தில் டம்மியாக ஒரு கை செய்து வைத்திருப்பார்கள்.

அந்த காட்சியில் நடிக்கலாமா? வேண்டாமா என தலைவாசல் ரவி கடுமையாக யோசித்து இருக்கிறார். சரியாக வெட்டாவிட்டால் நிஜத்தில் காயங்கள் ஏற்படும் என பயந்து இருக்கிறார்.

அதனால் 2 நிமிடங்கள் அவகாசம் கொடுங்கள் என்று தலைவாசல் விஜய் கேட்டு உள்ளார்.

உடனே அவருக்கு ஒரு யோசனை வந்ததாம். ஒரு வேலை கையை சரியாக வெட்டிவிட்டாலும் பிரச்னை இல்லை. நம் கைக்கு ஏதாவது நடந்தாலும் விஜயகாந்த் கண்டிப்பாக கைவிடமாட்டார் என்ற நம்பிக்கையில் நடிக்க சம்மதம் சொல்லி இருக்கிறார். பின் ஒரே ஷாட்டில் தத்ரூபமாக அந்த காட்சியை விஜயகாந்த் நடித்தாராம்.

1990 காலகட்டத்தில் கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையில் நிகழும் அரசியல் தலையீடு, போதை பழக்கம், வன்முறை திணிப்பு எப்படி நிகழ்கிறது என்பதன் பின்னணியும், அதிலிருந்து மாணவர்களை திசை திருப்பி நல்வழிப்படுத்தும் கல்லூரி முதல்வர் என்ற ஒன்லைனில் கொண்ட கதைதான் தலைவாசல்.

இந்த படம் தான் தற்போது குணச்சித்திர வேடங்களில் கலக்கி வரும் நடிகர் தலைவாசல் விஜய்யின் முதல் படம். இந்த படத்தில் இருந்து தான் அவரது பெயரில் தலைவாசல் ஒட்டிக் கொண்டது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி