தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Dhoni Speech: நல்ல உணவில் கறார்; Csk ல் யோகிபாபுவுக்கு வாய்ப்பு.. தீபக் சாஹர் ஒரு போதைப்பொருள்! - தோனியின் முழு பேச்சு!

Dhoni Speech: நல்ல உணவில் கறார்; CSK ல் யோகிபாபுவுக்கு வாய்ப்பு.. தீபக் சாஹர் ஒரு போதைப்பொருள்! - தோனியின் முழு பேச்சு!

Jul 11, 2023, 02:11 PM IST

google News
என்னுடைய முதல் திரைப்பட தயாரிப்பாக எல்.ஜி.எம் அமைந்திருக்கிறது. படக்குழுவின் ஒத்துழைப்பு காரணமாகவே இந்தப்படத்தை குறுகிய காலக்கட்டத்தில் எடுக்க முடிந்தது. இந்தப்படத்தில் பல மூத்த நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். சில நடிகர்கள் அறிமுகமும் ஆகியிருக்கிறார்கள்.
என்னுடைய முதல் திரைப்பட தயாரிப்பாக எல்.ஜி.எம் அமைந்திருக்கிறது. படக்குழுவின் ஒத்துழைப்பு காரணமாகவே இந்தப்படத்தை குறுகிய காலக்கட்டத்தில் எடுக்க முடிந்தது. இந்தப்படத்தில் பல மூத்த நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். சில நடிகர்கள் அறிமுகமும் ஆகியிருக்கிறார்கள்.

என்னுடைய முதல் திரைப்பட தயாரிப்பாக எல்.ஜி.எம் அமைந்திருக்கிறது. படக்குழுவின் ஒத்துழைப்பு காரணமாகவே இந்தப்படத்தை குறுகிய காலக்கட்டத்தில் எடுக்க முடிந்தது. இந்தப்படத்தில் பல மூத்த நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். சில நடிகர்கள் அறிமுகமும் ஆகியிருக்கிறார்கள்.

இந்தியாவின் மிக முக்கியமான கிரிக்கெட் வீரராக வலம் வருபவர் மகேந்திர சிங் தோனி. கிரிக்கெட் மட்டுமல்லாமல் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை செய்து வரும் இவர் தற்போது திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டு இருக்கிறார். ஒரு அவரது அறிமுக திரைப்படமே தமிழகத்தில் ஆரம்பித்து இருக்கிறது. ஆம் எ.ஜி.எம் என்ற திரைப்படத்தை அவர் தயாரித்து இருக்கிறார். ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப்படத்தில் லவ் டுடே புகழ் இவானா கதாநாயகியாக நடித்திருக்கிறார். 

இவர்களுடன் நதியா, யோகிபாபு உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர். இந்தப்படத்தை இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கி இருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தோனியும் அவரது மனைவியும் வந்தனர்.

நிகழ்ச்சியில் தோனி பேசும் போது, “ என்னுடைய டெஸ்ட் அறிமுகம் சென்னையில்தான் நடந்தது. அதே போல என்னுடைய அதிகபட்ச ஸ்கோரை நான் சென்னையில் தான் அடித்தேன். இப்படி என் வாழ்க்கையின் பல்வேறு நல்ல விஷயங்கள் சென்னையில்தான் நடந்திருக்கின்றன. 2008-ல் ஐ.பி.எல் தொடங்கியது. அந்த ஆண்டே தமிழக மக்கள் என்னைத் தத்தெடுத்துக் கொண்டனர். 

என்னுடைய முதல் திரைப்பட தயாரிப்பாக எல்.ஜி.எம் அமைந்திருக்கிறது. படக்குழுவின் ஒத்துழைப்பு காரணமாகவே இந்தப்படத்தை குறுகிய காலக்கட்டத்தில் எடுக்க முடிந்தது. இந்தப்படத்தில் பல மூத்த நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். சில நடிகர்கள் அறிமுகமும் ஆகியிருக்கிறார்கள். கிரிக்கெட்டில் நல்ல உணவை நாங்கள் எதிர்பார்ப்பது போல நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நல்ல உணவை கொடுக்க சொன்னேன்

நதியா தன்னுடைய கண்களாலேயே நடித்திருக்கிறார். இந்தப்படம் மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையேயான கதை” என்று பேசினார். 

தீபக் சாஹர் எப்படி? 

மேலும் தீபக் சாஹர் பற்றி கேட்ட கேள்விக்கு, “ தீபக் சாஹார் போதைப்பொருளைப் போன்றவர். அவர் அருகில் இல்லை என்றால் ஏன் இல்லை என்று தோன்றும்.. இருந்தால் ஏன் இருக்கிறார் என்று தோன்றும்.” என்றார்.

யோகிபாபுவிற்கு பதில்!

மேலும் சிஎஸ்கே அணியில் விளையாட வாய்ப்புக்கேட்ட யோகிபாபுவிற்கு பதிலளித்த அவர், “ எனக்கு யோகிபாபுவிற்கு கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் இருப்பது நன்றாகவே தெரியும். சென்னை அணி அதிகாரிகளிடம் பேசி அவரை அணிக்குள் கொண்டு வர பரிந்துரை செய்கிறேன். ஆனால் அதற்கு ஒரு கண்டிஷன் இருக்கிறது. ஆனால் அவர் போட்டிக்கு தேவையான நாட்களை மிகச்சரியாக கொடுக்க வேண்டும். அதே போல பயிற்சிக்கும் மிகச்சரியாக வரவேண்டும். அவர் இதற்கு ஒத்துக்கொண்டால் நான் அதிகாரிகளிடம் பேசுகிறேன். அதே போல பந்து வீச்சாளர்கள் ஸ்டெம்பை நோக்கி பந்தை வீசமாட்டார்கள். பேட்ஸ்மேனை நோக்கித்தான் பந்தை வீசுவார்கள். அதனை கையாளும் திறன் யோகிபாபுவிற்கு இருக்கிறதா என்பதை அவர் முடிவு செய்யட்டும்.” என்று பேசினார். 

முன்னதாக தோனி தன்னுடைய கையெழுத்திட்ட பேட்டை நடிகர் யோகிபாபுவிற்கு பரிசளித்தார். அதனை பெற்றுக்கொண்ட அவர் மிகவும் எமோஷனலாக நன்றி தெரிவித்து இருந்தார்.

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி