HBD Nandamuri Balakrishna : தெலுங்கு சினிமாவின் மாஸ் ஹீரோ.. நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா பிறந்தநாள் இன்று!
Jun 10, 2023, 05:15 AM IST
தெலுங்கு சினிமாவில் கொடி கட்டி பறந்து வருபவர் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா. இவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
நந்தமூரி பாலகிருஷ்ணா ஆந்திர சட்டமன்ற உறுப்பினரும், இந்தியத் திரைப்பட நடிகருமாவார். இவர் ஜூனியர் பாலய்யா என அழைக்கப்படுகிறார்.இவர் ஆந்திராவில் முதல்வராக இருந்த என். டி. ராமராவ் அவர்களின் ஆறாவது மகனாவார். குழந்தை நட்சத்திரமாக தாத்தம்மா கலா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ வாகவும் இருந்தார்.
சென்னையில் பிறந்ததால் பாலகிருஷ்ணாவின் குழந்தைப்பருவம் சென்னையிலேயே கழிந்தது. அதன் பின் ஆந்திரா,தமிழ்நாடு,கேரளா பிரிவினையின் போது பாலகிருஷ்ணாவின் குடும்பம் ஆந்திராவுக்கு குடிபெயர்ந்தது. இளங்கலை வணிகவியல் படிப்பை ஐதராபாத்தில் உள்ள நிசாம் கல்லூரியில் பாலகிருஷ்ணா முடித்தார். 1982ல் வசுந்திரா தேவியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தைகளும் உள்ளனர்.
தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நந்தமுரி பாலகிருஷ்ணா. நடிகைராக மட்டுமின்றி இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் உள்ளார் பாலகிருஷ்ணா. ஆக்ஷன் காட்சிகளில் பட்டையை கிளப்பும் பாலகிருஷ்ணாவுக்கு என பெரும் ரசிகர்க பட்டாளமே உள்ளது.
தாத்தம்மா கலா திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதன்பின் தன வீர சூர கர்ணா (1977), ஸ்ரீ மத்விரத பர்வம் (1979), அக்பர் சலீம் அனார்கலி (1979) மற்றும் ஸ்ரீ திருப்பதி வெங்கடேஸ்வர கல்யாணம் (1979) உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். மேலும் அவர் தனது தந்தையால் இயக்கப்பட்ட பல படங்களில் நடித்தார்.16 வயதில், தர்மேந்திராவின் இந்தி திரைப்படமான யாதோன் கி பாராத்தின் ரீமேக்கான அன்னதம்முலா அனுபவம் (1975) என்ற திரைப்படத்தில் நடித்தார். மேலும் அவரது நிஜ வாழ்க்கை தந்தை ராமராவுக்கு சகோதரனாக நடித்தார்.
1984 இல், அவர் சஹசமே ஜீவிதம் மூலம் வயது வந்தோருக்கான பாத்திரத்தில் அறிமுகமானார் . பின்னர் அதே ஆண்டு கொடி ராமகிருஷ்ணா இயக்கிய பானுமதி மற்றும் சுஹாசினியுடன் மங்கம்மாகரி மனவாடு என்ற நாடகத் திரைப்படத்தில் நடித்தார் . அதே ஆண்டில், அவர் கதைநாயகுடு மற்றும் ஸ்ரீமத் விராட் வீரபிரம்மேந்திர ஸ்வாமி சரித்ரா என்ற வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் நடித்தார்.
1984 இல் கே. விஸ்வநாத் இயக்கிய ஜனனி ஜென்மபூமியிலும் தோன்றினார் . 1985 இல், அவர் அக்கினேனி நாகேஸ்வர ராவுடன் பர்யபார்த்தல பந்தம் படத்தில் ரஜனியுடன் இணைந்து நடித்தார் . முத்துல கிருஷ்ணய்யா , சீதாராம கல்யாணம் , அனசூயம்மா கேரி அல்லுடு மற்றும் தேசோத்தராகுடு ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் அவரது திறனை படிப்படியாக அதிகரித்தன.
1987 இல், கே. ராகவேந்திர ராவ் இயக்கிய அபூர்வ சஹோதருலு திரைப்படத்தில் பாலகிருஷ்ணா இரட்டை வேடத்தில் நடித்தார் . அதே ஆண்டில், டி. ராமராவ் இயக்கிய பிரசிடெண்ட் கேரி அப்பா மற்றும் கோடி ராமகிருஷ்ணாவின் முவ்வா கோபாலுடு ஆகிய படங்களில் நடித்தார். 2010 இல், பாலகிருஷ்ணா நயன்தாரா மற்றும் சினேகா உல்லாலுடன் இணைந்து போயபதி ஸ்ரீனுவின் சிம்ஹா படத்தில் நடித்தார் . அப்பா, மகன் என இரு வேடங்களில் நடித்தார். இந்தத் திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த தெலுங்குத் திரைப்படம் என பெயர் பெற்றது.
தற்போது இவருடைய 108 வது படத்தை அனில் ரவிபுடி இயக்குகிறார். இதில் 4 ஹீரோயின்கள் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இளம் நடிகை ஸ்ரீலீலா இந்தப் படத்தில் இணைந்துள்ளார். அவர் பாலகிருஷ்ணாவின் சகோதரியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அடுத்து காஜல் அகர்வால் பாலகிருஷ்ணா ஜோடியாக நடிக்கிறார். மேலும் 2 ஹீரோயின்கள் இணைந்துள்ளனர். ‘வீர சிம்ஹா ரெட்டி’யில் அவருடன் நடித்த ஹனி ரோஸ் இதிலும் நடிக்கிறார். நடிகை பிரியங்கா ஜவால்கரும் இணைந்துள்ளார். தமன் இசையில் உருவாகும் இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.
இவர் பெற்ற விருதுகள் ஏராளமானவை. அவற்றில் சில,
நந்தி விருதுகள்
சினிமா விருதுகள்
TSR – TV9 தேசிய திரைப்பட விருதுகள்
SIIMA விருதுகள்
சம்மான் விருது
பரத முனி விருது
பிலிம்பேர் விருதுகள் என பல விருதுகளை பெற்றுள்ளார்.
இவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்