தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  வேட்டையன் இனி 4 இல்ல 5.. கிரீன் சிக்னல் கொடுத்த கவர்ன்மென்ட்.. குஷியான ரசிகர்கள்

வேட்டையன் இனி 4 இல்ல 5.. கிரீன் சிக்னல் கொடுத்த கவர்ன்மென்ட்.. குஷியான ரசிகர்கள்

Oct 09, 2024, 02:34 PM IST

google News
நடிகர் ரஜினிகாந்த்தின் வேட்டையன் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கியுள்ளது தமிழ்நாடு அரசு. இதனால், வேட்டையன் திரைப்படம் ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிடப்பட உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த்தின் வேட்டையன் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கியுள்ளது தமிழ்நாடு அரசு. இதனால், வேட்டையன் திரைப்படம் ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிடப்பட உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்தின் வேட்டையன் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கியுள்ளது தமிழ்நாடு அரசு. இதனால், வேட்டையன் திரைப்படம் ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிடப்பட உள்ளது.

நடிகர் ரஜினி காந்த் நடிப்பில் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான முன்பதிவு அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தது.

சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி

இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் வேட்டையன் திரைப்படத்திற்கான சிறப்பு காட்சியை திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால், இதுவரை 4 காட்சிகளாக வெளியிட திட்டமிட்டிருந்த படம் 5 காட்சிகளாக மாற்றப்பட உள்ளது. அதுமட்டுமின்றி, வேட்டையன் படத்தின் சிறப்புக் காட்சி நாளை காலை 9 மணிக்கு திரையிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்டையன் படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு இதுவரை தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காமல் இருந்த நிலையில், இப்போது அனுமதி வழங்கியுள்ளதால் ரஜினிகாந்த்தின் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

நாளை ரிலீஸாகும் வேட்டையன்

ஜெய்பீம் பட இயக்குநர் த. செ. ஞானவேல் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான திரைப்படம் வேட்டையன். இது நாளை அக்டோபர் 10ம் தேதியன்று வெளியாக உள்ளது.

இந்தப் படத்தில் ரஜினிகாந்த்துடன் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியார், பகத் பாசில் உள்ளிட்ட பல நடிகர்கள் இணைந்துள்ளனர். தர்பார் படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் இந்தப் படத்திலும் போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

ரசிகர்கள் கருத்து

இப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது. போலீஸ் அதிகாரியாக வரும் ரஜினி, குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது போன்றும், அதற்காக காவலர்களுடன் ஆலோசனை நடத்துவது போன்றும், நீதிபதியிடம் உரையாடுவது போன்றும் விறுவிறப்பான காட்சிகளுடன் வந்துள்ளது வேட்டையன் ட்ரெயிலர். பெண்கள் பாதுகாப்பு, திருடன், என்கவுன்டர், அநீதி என பல ஏரியாக்களில் வேட்டையன் படம் பயணிக்கிறது என ட்ரெயிலர் மூலம் ரசிகர்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

ஹிட்டடித்த பாடல்கள்

அனிருத் இசையில் வெளியான பாடல்கள் துள்ளலான இசையினால் இளைஞர்களையும் குழந்தைகளையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. 2 மணி நேரம் 47 நிமிடம் உள்ள இந்தப் படத்திற்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

நடிகர் ரஜினி காந்த்தின் 170வது படமான வேட்டையனை எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் நிலையில், அந்தப் படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளித்து ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தியுள்ளது தமிழ்நாடு அரசு.

யூகங்களில் உள்ள ரசிகர்கள்

முன்னதாக படத்தில் ட்ரெயிலரில், இங்க பொன்னுங்களுக்கு பாதுகாப்பே இல்ல. பொறுக்கிங்களுக்கு தான் பாதுகாப்பு.. இந்த மாதிரி பொறுக்கிங்கள என்கவுன்டர் தான் பண்ணனும்.. குற்றவாளியை கண்டுபிடிக்க என்ன வேணும்னாலும் பண்ணுங்க.. இன்னும் ஒரு வாரத்துல என்கவுன்டர் பண்ணியே ஆகனும்.. ஒருவாரம் ரொம்ப அதிகம் 3 நாளுல டிபார்ட்மெண்டக்கு நல்ல பேர் வரும்.. போதும்..

திருடன்னா முகமுடி போட வேண்டாம். கொஞ்சம் மூளை இருந்தா போதும். பேசிப் புரியோஜனம் இல்ல.. தூக்குவோம்.. ஒரு அநீதியை இன்னொரு அநீதியால வெல்ல முடியாது.. நீங்க என் எங்க தூக்கி அடிச்சாலும் நான் அதே போலீஸ்காரன் தான்.. என்கிட்ட இருந்து யாராலையும் காப்பாத்த முடியாது போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் படத்தின் கதையை ரசிகர்கள் யூகித்து வைத்துள்ளனர்

இந்த யூகங்கள் அனைத்தும் சரிதானா, படம் என்ன சொல்கிறது என்பதை நாளை காலை 9 மணிக்கு திரையரங்குகளில் விடை கிடைக்க உள்ளது.

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை