நடிகர் சிவக்குமார் 83ஆவது பிறந்தநாள்! தமிழ் சினிமாவின் சீரஞ்சீவி! சிவாஜியால் கண்டெடுக்கப்பட்ட ஓவியர்!
Oct 27, 2024, 06:00 AM IST
தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன் நான்கு தலைமுறை நடிகர்களுடன் நடித்த ஒரே நடிகர் என பல பெருமைகளை கொண்டவர் தான் நடிகர் சிவகுமார். இவருக்கு என தனி அறிமுகம் எதுவும் தேவைபடுவதில்லை.
தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன் நான்கு தலைமுறை நடிகர்களுடன் நடித்த ஒரே நடிகர் என பல பெருமைகளை கொண்டவர் தான் நடிகர் சிவகுமார். இவருக்கு என தனி அறிமுகம் எதுவும் தேவைபடுவதில்லை. தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திர நடிகர் வரிசையில் இருப்பவர்களான நடிகர் கார்த்தி மற்றும் நடிகர் சூர்யாவின் தந்தையும் இவரே. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு சிறந்த நடிகராக சிவக்குமார் இன்று தனது 83ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இருந்து வருகிறார் அவரின் வாழ்வில் குடும்பம் மற்றும் தொழில் என இரண்டிலும் வெற்றி பெற்றவராக இருந்து வருகிறார்.
1965 ஆம் ஆண்டு ஏசி திருலோகச்சந்தரின் 'காக்கும் கரங்கள்' திரைப்படத்தில் சிவகுமார் நடிகராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து 'கந்தன் கருணா', 'துணிவே தோழன்' உள்ளிட்ட பிற படங்களில் துணை நடிகராக நடித்தார்.
சிவகுமார் பின்னர் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து தற்போது வரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். எம்ஜிஆர், சிவாஜி கணேசன், தொடங்கி ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ் ஆகியோரை தொடர்ந்து அடுத்த தலைமுறையான சூர்யா, விஜய், அஜீத் வரை 3 தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்த பெருமையையும் கொண்டுள்ளார்.
சிவகுமார் ஆகிய பழனிசாமி
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் அருகில் உள்ள காசிகவுண்டன்புதூர் என்னும் ஊரில் மூன்றாவது குழந்தையாக பிறந்தவர். இளம் வயதிலேயே தந்தையை இழந்து, உடன் பிறந்த சகோதரனை இழந்து வறுமை எனும் பிடியில் வளர்ந்தவர். இத்தனை துன்பங்களுக்கு மத்தியிலும் சிவாக்குமாரின் ஓவியத் திறமையே அவரை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கண்ணில் பட வைத்தது.
சிறந்த நடிகர் என்பதை தாண்டி சிவக்குமார் பல கலைகளில் வல்லவராக திகழ்ந்து வருகிறார். சிறு வயது முதலே ஓவியத்தில் கைத் தேர்ந்தவராக இருந்து வருகிறார். மேலும் எழுத்து துறையிலும் இவர் கால்தடத்தை பதித்துள்ளார். இவர் எழுதிய “நான் ராஜபாட்டை அல்ல” என்ற புத்தகம் போதும் அவரது எழுத்தின் திறமையை அறிய. சிறந்த மேடை பேச்சாளரகாவும், சொற்பொழிவு ஆற்றுபவராகவும் இருந்து வருகிறார். அவர் சில புத்தகங்களை எழுதியுள்ளார். ராமாயணம் மற்றும் மகாபாரதம் பற்றிய நீண்ட கால சொற்பொழிவுகளை நடத்தி பலரை ஈர்த்துள்ளார்.
சின்னத்திரையிலும் கலக்கியவர்
வெள்ளித்திரையில் 14 ஆண்டுகளில் 100 படங்கள், மொத்தமாக 200 படங்கள் என வெள்ளித்திரையில் சிறந்த சாதனைகளை புரிந்துள்ளார். சின்னத்திரையையும் இவர் விட்டுவைக்கவில்லை. நடிகை ராதிகாவுடன் இவர் இணைந்து நடித்த சித்தி நெடுந்தொடர் பல தொண்ணூறுகளின் சிறந்த நாடகமாக இன்று வரை இருந்து வருகிறது. இயல்பான பேச்சு தொனியினாலும், யதார்த்தமான நடிப்பாலும் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்.
துணை நடிகராக நடிப்பது சிரமம்
படங்களில் துணை நடிகராக தனது பயணத்தை தொடங்கிய சிவக்குமார், கதானாயாகனாக பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவரது துணை நடிகராக நடிக்கும் அனுபவம் குறித்து பல வருடங்களுக்கு முன் ஊடகம் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் தெரிவித்து இருந்தார். அதில் ஒரே வயதுடைய விஜயகாந்திற்கு அப்பாவாக நடித்தது தனக்கு உடன் பாடில்லை எனவும், 1999-ல் வெளியான ‘மலபார் போலீஸ்’ படத்தில் சத்யராஜ் ஹீரோவாக நடித்தார். அதில் நான் துணை வேடத்தில் நடித்தேன் எனவும் பகிர்ந்துள்ளார்.
மேலும் ஹீரோவாக நடிக்கும் அளவுக்கு தனக்கு மார்க்கெட் இல்லை என்பதை உணர்ந்ததாகவும், ஆனால் அப்படிப்பட்ட நடிகர்களுக்கு அப்பாவாக நடிப்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாது என்றும் சிவகுமார் கூறியுள்ளார்.
குடும்பத்திலும் அக்கறை
சிவகுமார் 1874 ஆம் ஆண்டு லட்சுமி குமாரி என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு சூர்யா மற்றும் கார்த்திக் என இரண்டு மகன்களும் , பிருந்தா என்ற மகளும் உள்ளனர். பிருந்தா ஒரு பின்னணி பாடகியாவார். தொழில் வெற்றி அடைந்ததை போல குடும்பத்திலும் நிறைவான வெற்றியை அடைந்துள்ளார் என்று தான் கூற வேண்டும். இவரது நேர்த்தியான வளர்ப்பினாலேயே இவரது மகன்களும் அவர்களது வாழ்வில் சிறந்த இடத்தை பிடித்துள்ளதாக பல மேடைகளில் தெரிவித்து உள்ளனர். மேலும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு இவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரின் போனை தட்டி விட்டு வைரல் ஆகினார். இவரது பல சாதனைகளால் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் சிவக்குமார் அவர்களுக்கு ஹிந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள்.
டாபிக்ஸ்