தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Cinema: ’தியேட்டர்களை இழுத்து மூடுவோம்!’ தியேட்டர் உரிமையாளர்கள் எச்சரிக்கை!

Cinema: ’தியேட்டர்களை இழுத்து மூடுவோம்!’ தியேட்டர் உரிமையாளர்கள் எச்சரிக்கை!

Kathiravan V HT Tamil

Feb 20, 2024, 03:25 PM IST

google News
”திரையரங்குகளில் கிரிக்கெட் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப அனுமதி தர வேண்டும்”
”திரையரங்குகளில் கிரிக்கெட் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப அனுமதி தர வேண்டும்”

”திரையரங்குகளில் கிரிக்கெட் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப அனுமதி தர வேண்டும்”

தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. அதில், ‘தியேட்டர்களில் வெளியாகும் திரைப்படங்களை 8 வாரங்களுக்கு பிறகே ஓடிடி தளங்களில் ரிலீஸ் செய்ய வேண்டும். தவறினால், தியேட்டர்களை மூடி ரிலீசை நிறுத்துவோம் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர்  எச்சரிக்கை விடுத்துள்ளனர். ’

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் திருப்பூர் சுப்பிரமணியம் கூறுகையில், சிறிய பட்ஜெட் படங்களுக்கு குறைந்த கட்டணத்தில் டிக்கெட் விலை நிர்ணயம் செய்வது குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது. 

திரையரங்குகளில் கிரிக்கெட் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப அனுமதி தர வேண்டும். சிறிய திரைப்படங்களுக்கு தியேட்டர்கள் தர தயாராக உள்ளோம், ஆனால் மக்கள் வருகை குறைவாக உள்ளது. நடிகர்கள் யார் என்று தெரியாத படங்களை பார்க்க மக்கள் விரும்பவில்லை. 

சிறிய படங்கள் முன் அனுபவம் இன்றி, வீக் கண்டெண்டுடன் வருகிறது. அதனை பார்க்க மக்கள் விரும்புவதில்லை. பிரபல நடிகர்கள் இருந்தால்தான் தியேட்டர்களுக்கு வர வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். சிறுபடங்களுக்கு நியாமான கட்டணத்தை கட்டாயம் நிர்ணயம் செய்வோம். 

திரையரங்குகளில் வெளியாகும் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்தே ஓடிடி திரைப்படங்களை வாங்குகின்றனர். 

99 சதவீத தியேட்டர்களில் ஆன்லைனில்தான் டிக்கெட்களை விற்பனை செய்கிறோம். இனி ஆயிரம் ரூபாய்க்கு டிக்கெட் விற்றால் ரசிகர்கள் வேண்டுமானால் ஒரு ஷோவுக்கு வரலாம், அதற்கு மேல் மக்கள் யாரும் வரமாட்டார்கள். 

தியேட்டர் லைசன்ஸ் ரினிவல் தேதியை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை செய்து கொள்ள தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. எங்கள் கோரிக்கைகளை அரசிடம் தெரிவித்துள்ளோம். 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி