ரீமேக் செய்து ஹிட் ஆன திரைப்படமும் அதன் கதையும்! இரு மொழிகளிலும் ஹிட் !
Oct 15, 2024, 11:36 AM IST
உலக நாயகன் கமல் ஹாசன் மற்றும் பிரபு ஆகியோர் நடித்து கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான வசூல் ராஜா MBBS படம் இந்தியில் 2003 ஆம் ஆண்டு வெளியான முன்னா பாய் MBBS என்ற படத்தின் ரீமேக் ஆகும்.
உலக அளவில் சினிமா என்றாலே அதற்கு தனி மதிப்பு இருந்து வருகிறது. உலக அளவில் அதிக வருமானம் தரக்கூடிய துறைகளில் ஒன்றாகவும் சினிமாத்துறை இருந்து வருகிறது. மேலும் சினிமாவில் நுழைந்து பெரிய நடிகராக வேண்டும் என்பது பலரது கனவாகவும் இருந்து வருகிறது. இத்தகைய திரைத்துறையில் சில சமயங்களில் நல்ல கதையம்சம் இல்லாத படங்கள் வெளியாகி அதன் மதிப்பை குறைக்கின்றன. பணம் செலவு செய்து திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்கள் அவர்களை திருப்திப்படுத்தும் வகையில் ஒரு படத்தை எதிர்பார்ப்பது நியாயமான ஒன்றாகும்.
திரைத்துறையில் கதைகளுக்கு பஞ்சம் நிலவுவது உண்மையான ஒன்றாகும். குறிப்பாக இந்தியாவில் பல மொழி திரைத்துறைகள் உள்ளன. இவை அனைத்திலும் ஆண்டு ஒன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின்றன. ஒரு மொழியில் வெற்றி அடைந்த படங்களின் கதையை எடுத்து வெவ்வேறு மொழிகளில் ரீமேக் செய்யும் கலாச்சாரம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த ரீமேக் அந்தந்த மொழிகளுக்கு ஏற்றவாறும், அதன் ரசிகர்களுக்கு ஏற்றவாரும் சில காட்சிகள் அல்லது கதையின் சில பகுதிகள் என மாற்றம் செய்யப்பறட்டு வெளியிடப்படுகின்றன.
ரீமேக் செய்து ஹிட்டான தமிழ் படங்கள்
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை கதை மற்றும் திரைக்கதை சரியானதாக இருந்தால் அறிமுக ஹீரோவாக இருந்தாலும் படம் வெற்றி பெறும். இந்நிலையில் வேற்று மொழிகளில் இருந்து பல படங்கள் ரீமேக் செய்யப்பட்டுள்ளன. விஜய் நடித்த நண்பன், கண்டேன் காதலை, ஒஸ்தி, தாராள பிரபு, உன்னைப்போல் ஒருவன், காற்றின் மொழி போன்ற படங்கள் இந்தியில் இருந்து ரீமேக் செய்யப்பட்டது ஹிட் ஆகி உள்ள படங்களாகும்.
வசூல் ராஜா MBBS
உலக நாயகன் கமல் ஹாசன் மற்றும் பிரபு ஆகியோர் நடித்து கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான வசூல் ராஜா MBBS படம் இந்தியில் 2003 ஆம் ஆண்டு வெளியான முன்னா பாய் MBBS என்ற படத்தின் ரீமேக் ஆகும். முழுக்க முழுக்க காமெடி, எமோஷனல் என இரண்டின் அடிப்படையில் இப்படத்தின் கதை அமைந்திருக்கும். காமெடி படங்களுக்கு பெயர் போன கமல் ஹாசன் நடித்த திரைப்படம் இது. பஞ்சமில்லாத காமெடி, கலாய்க்கும் வசனங்கள், பரத்வாஜ் இசை என படம் அனைத்திலும் மாஸ் காட்டியது.
சிறுவயதில் வீட்டில் இருந்து ஓடி வரும் மகனான ஹீரோ ராஜா ரவுடிகளுடன் சேர்ந்து கலெக்ஷனில் ஈடுபடுகிறார். இந்த விஷயம் தெரியாத அப்பா வெங்கட்ராமனிடம் தான் MBBS முடித்து டாக்டர் ஆக இருப்பதாகவும், ஒரு இலவச மருத்துவமனை வைத்திருப்பதாகவும் பொய் கூறுகிறார். இதனை அறியாத தந்தை தனது நண்பர் விஷ்வநாதன் மகள் ஜானகி டாக்டர் என்பதை அறிந்து இருவருக்கும் சம்மந்தம் பேச முயல்கிறார். அவரது மகன் டாக்டர் இல்லை என்பதை முன் கூட்டியே தெரிந்த தந்தையின் நண்பர் அந்த குடும்பத்தை அவமானப் படுத்தி விடுகிறார். இந்நிலையில் தந்தையை அவமானப்படுத்திய நண்பரை பழிவாங்க MBBS படிக்க முடிவு எடுக்கிறார் ராஜா.
அவர் MBBS படிக்க சென்றது விஷ்வநாதனின் மருத்துவக் கல்லூரி. மேலும் அவரிடம் தான் MBBS முடித்து அவரது மகளை திருமணம் செய்வதே லட்சியம் என சவால் விடுகிறார். பின் MBBS முடித்து ஜானகியை, ராஜா எப்படி திருமணம் செய்கிறார் என்பதை பல கலாட்டாக்கள், உணர்வுகள் என அனைத்தும் சேர்ந்து இந்தப் படம் உள்ளது.
ஹிந்தியில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதும் தமிழில் எடுக்கபட்ட படம் இங்கும் நல்ல வரவேற்பை பெற்றது. கிரேசி மோகன் வசனத்தில் காமெடி காட்சிகள் திரையரணகையே அதிரவைத்தன. இப்படத்தினை இயக்குனர் சரண் இயக்கி உள்ளார். கமல் ஹாசன், பிரபு, சினேகா, பிரகாஷ் ராஜ், நாகேஷ் மற்றும் பலர் நடித்த நகைச்சுவை காதல் திரைப்படம். இப்படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்துள்ளார்.
டாபிக்ஸ்