Tamil Boxoffice: ‘மாற்றத்தை தருமா வெள்ளி?’ தமிழ் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ!
Sep 22, 2023, 05:15 AM IST
Markantony and Jawan: ‘மார்க் ஆண்டனியின் வசூல், சிறிய பட்ஜெட் படங்களுக்கு நம்பிக்கை அளித்திருக்கிறது’
இன்று வெள்ளிக்கிழமை. சிறியதோ, பெரியதோ, ஏதாவது சில படங்கள் கண்டிப்பாக வெளியாகும். அது, அதற்கு முந்தைய வாரத்தில் வெளியான படங்களுக்கு எப்போதும் கொஞ்சம் கலக்கம் தரும். ஆனால், இந்த கலக்கம், கடந்த வாரம் வெளியான மார்க் ஆண்டனிக்கு இருக்கப் போவதில்லை.
ஏற்கனவே தியேட்டர் வசூலில் ரூ.100 கோடியை உலகளாவிய அளவில் நெருங்கிக் கொண்டிருக்கிறது மார்க் ஆண்டனி. வெறும் 28 கோடி ரூபாய் செலவில் எடுத்த திரைப்படம், அதை விட நான்கு மடங்கு அதிகமாக வசூலை ஈட்டி, தயாரிப்பாளருக்கு லாபத்தை அள்ளித்தந்திருக்கிறது.
லோ பட்ஜெட் படங்கள் தான், இன்று வசூலை வாரிக்குவிக்கின்றன. அந்த வரிசையில், மார்க் ஆண்டனியின் வசூல், சிறிய பட்ஜெட் படங்களுக்கு நம்பிக்கை அளித்திருக்கிறது. ரசிக்கும் கன்டண்ட், நேர்த்தியான திரைக்கதை இருந்தால் இன்று படத்தை ஓட வைத்துவிட முடியும்.
அந்த வரிசையில் 200 கோடி, 300 கோடி படங்களின் வெற்றிகளுக்கு இடையே மார்க்ஆண்டனி போன்ற படங்களும் வசூலில் தன்னை தக்க வைத்து வருகின்றன. அந்த வகையில் தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தி வந்த மார்க் ஆண்டனி, ஜவான் படங்களில் தமிழ் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் எவ்வாறு உள்ளது? செப்டம்பர் 21ம் தேதியான நேற்றைய பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ:
மார்க் ஆண்டனி
மொத்த பட்ஜெட்: ரூ.28 கோடி
இதுவரை வசூல்: ரூ.62 கோடி
ஜவான்
மொத்த பட்ஜெட்: ரூ.300 கோடி
இதுவரை வசூல்: ரூ.902 கோடி
ஜெயிலர்
மொத்த பட்ஜெட்: ரூ.200 கோடி
இதுவரை வசூல்: ரூ.605 கோடி
கிங் ஆப் கோதா
மொத்த பட்ஜெட்: ரூ.60 கோடி
இதுவரை வசூல்: ரூ.35 கோடி
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்