தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  உன் கூடவுமா அரசியல் பண்ணனும்! தவெக விஜயை கலாய்த்த போஸ் வெங்கட்! சூர்யாவ அரசியலுக்கு வர சொன்னவர் தானே!

உன் கூடவுமா அரசியல் பண்ணனும்! தவெக விஜயை கலாய்த்த போஸ் வெங்கட்! சூர்யாவ அரசியலுக்கு வர சொன்னவர் தானே!

Suguna Devi P HT Tamil

Oct 28, 2024, 10:03 AM IST

google News
கங்குவா இசை வெளியீட்டு விழாவில் சூர்யாவை அரசியலுக்கு வர சொன்ன நடிகர் மற்றும் இயக்குனர் போஸ் வெங்கட் நடிகர் விஜயை தாக்கி அவரது டிவிட்டரில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
கங்குவா இசை வெளியீட்டு விழாவில் சூர்யாவை அரசியலுக்கு வர சொன்ன நடிகர் மற்றும் இயக்குனர் போஸ் வெங்கட் நடிகர் விஜயை தாக்கி அவரது டிவிட்டரில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

கங்குவா இசை வெளியீட்டு விழாவில் சூர்யாவை அரசியலுக்கு வர சொன்ன நடிகர் மற்றும் இயக்குனர் போஸ் வெங்கட் நடிகர் விஜயை தாக்கி அவரது டிவிட்டரில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

கங்குவா இசை வெளியீட்டு விழாவில் சூர்யாவை அரசியலுக்கு வர சொன்ன நடிகர் மற்றும் இயக்குனர் போஸ் வெங்கட் நடிகர் விஜயை தாக்கி அவரது டிவிட்டரில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு நேற்று விழுப்புரத்தில் உள்ள விக்கிரவாண்டி சாலையில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. மேலும் இந்த மாநாடு மிகவும் பிரம்மாண்டமான முறையில் அரங்குகள் அமைக்கப்பட்டு கோடிக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பித்தனர். இந்நிலையில் மாநாடு நடந்ததை அடுத்து பல அரசியல் தலைவர்கள் விஜயையும் அவரது கொள்கைகளையும் விமர்சித்து வருகின்றனர். தற்போது இயக்குனர் மற்றும் நடிகரான போஸ் வெங்கட் தவெக தலைவர் விஜயை விமர்சித்து அவரது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதில், 'யப்பா.. உன் கூடவுமா அரசியல் பன்னனும்.. பாவம் அரசியல்.. பள்ளிக்கூட ஒப்பிப்பு.. சினிமா நடிப்பு. மற்றும் அதீத ஞாபக சக்தி.. வியப்பு.. எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்.. முடிவு??? பாப்போம்.." எனப் பதிவித்துள்ளார். இது தற்போது பெரும் பேசுப் போறலாகி உள்ளது.

சூர்யாவை அரசியலுக்கு இழுத்தவர்

முன்னதாக சில தினங்களுக்கு முன் சூர்யாவின் கங்குவா படத்தினன் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய போஸ் வெங்கட், “இயக்குநர் சிறுத்தை சிவா, நான் சீரியலில் நடித்துக் கொண்டிருந்த பொழுது ஒருமுறை நீங்கள் என்னுடைய ஒரு படத்தில் நடித்து விட்டீர்கள் என்றால், அதன் பின்னர் நீங்கள் பொருளாதார ரீதியாக, மரியாதை ரீதியாக, அடுத்த கட்டத்திற்கு செல்வீர்கள் என்று சொன்னார். அதை எனக்கு இந்த படத்தில் அவர் செய்து கொடுத்திருக்கிறார். சிவா சார் செட்டிலும், வெற்றிமாறன் செட்டிலும்தான் அசிஸ்டன்ட்டை டைரக்டரை பேர் சொல்லி கூப்பிடுவதில்லை. காரணம் அவர்கள் முந்தைய நாளிலேயே அனைத்தையும் திட்டமிட்டு விடுவார்கள்.

சூர்யா அரசியலுக்கு வர வேண்டும்

நான் இந்த இடத்தில் அரசியல் பேசலாம் என்று நினைக்கிறேன். ஒரு சூப்பர் ஸ்டார், ஒரு நடிகர் ரசிகர்களை வழிநடத்த வேண்டும். எப்படி வழி நடத்த வேண்டும் என்றால், சூர்யா போன்று வழி நடத்த வேண்டும். தர்மம் செய்ய இப்போதே சொல்லிக் கொடுத்து விட வேண்டும். மக்களுடைய பிரச்சினையை எப்படி கவனிக்க வேண்டும் என்பதை தற்போதே சொல்லிக் கொடுத்து விட வேண்டும். நீங்கள் எப்படி வாழ வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து விட வேண்டும். எல்லாவற்றையும் மீறி உங்களுக்கு அறிவு கொடுத்து விட வேண்டும், படிப்பு கொடுத்து விட வேண்டும். அதன் பின்னர் அரசியலுக்கு வர வேண்டும்.

ஒரு தலைவன் எங்கிருந்து வேண்டுமென்றாலும் அரசியலுக்கு வரலாம்; அவன் நடிகனாக இருக்கலாம்; ஐஏஎஸாக இருக்கலாம் எழுத்தாளராக இருக்கலாம்; பேச்சாளராக இருக்கலாம். ஆனால் தலைவனுடைய அடிப்படை அவனுடைய ரசிகர்களை முட்டாளாக வைத்திருக்கக் கூடாது. அவனை அறிவாளியாக வைக்க வேண்டும். அவனைப் படிக்க வைக்க வேண்டும். அதன் பின்னர் அரசியலுக்கு வர வேண்டும்; ஆகையால் நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும்.” என்று பேசினார். சூர்யாவை அரசியலுக்கு வரச்சொன்ன போஸ் வெங்கட் விஜயை விமர்சித்து இருப்பது பேசு பொருளாகியுள்ளது. +

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை