Tamanna Karthi: சுறா பட பிளாப்பால் விரட்டப்பட்ட நடிகை; கார்த்தி தமன்னா காதலால் கடுப்பான சிவக்குமார் குடும்பம்?
Jun 25, 2023, 09:46 AM IST
கார்த்தி தமன்னாவிற்கு இடையேயான காதல் பற்றி பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேசியவற்றை இங்கு பார்க்கலாம்.
“தமன்னா மும்பையைச் சேர்ந்தவர். அவரது இனம் சிந்தி. அவரது அப்பா மிகப்பெரிய வைர வியாபாரி. அதனால் அவருக்கு நடிக்க வருவது என்பது மிகப்பெரிய கஷ்டமாக இருக்கவில்லை. ஹிந்தியில் இரண்டு மூன்று படங்கள் நடித்தார்.
ஆனால் அந்த படங்கள் எதுவும் பெரிதாக வெற்றி பெறவில்லை. ராசி இல்லாத நடிகை என்ற பெயரை வாங்கினார். இதனையடுத்து அவர் தென்னிந்திய சினிமா பக்கம் வர ஆரம்பித்தார். கேடி படத்தில் தான் தமன்னா அறிமுகமானார். அவருக்கு பாலாஜி சக்திவேல் இயக்கிய கல்லூரி திரைப்படம் தான் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
அதன் பின்னர் வரிசையாக பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்தார். சுறா படத்தில் விஜயுடன் இணைந்தார்.அந்த படம் பிளாப் ஆனது. இதனால் இங்கேயும் ராசி இல்லாத நடிகை என்று பெயர் எடுத்தார்.
இதைப் பார்த்து மிகவும் நொந்து போன தமன்னா ஒரு படம்தான் பிளாப் ஆனது. அதற்காக என்னை ராசி இல்லாத நடிகையா என்று சொல்வீர்கள் என்று ஆதங்கப்பட்டார். இதனால் மீண்டும் அவர் மும்பைக்கே சென்று விட்டார். இதன் பின்னால் தான் லிங்குசாமி இயக்கி நடிகர் கார்த்தி நடித்து வெளியான பையா திரைப்படத்தில் கமிட் ஆனார். அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
அந்தப்படத்தில் தமன்னா கார்த்தி கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆன நிலையில், இருவரும் காதலிக்கிறார்கள் என்று பத்திரிகைகள் எழுத ஆரம்பித்து விட்டன. இதைக் கேட்ட கார்த்திக் தரப்பு மிகவும் கடுப்பாகிவிட்டது. தமன்னாவிடம் இதுகுறித்து பல நிகழ்ச்சிகளில் கேட்டபோது அவர் அமைதியாக சிரித்து விட்டு சென்று விட்டார். இதனால் காதல் கிட்டத்தட்ட உறுதி என்று பத்திரிகைகள் எழுத ஆரம்பித்து விட்டன. உடனே கார்த்திக்கு தங்களது சொந்தத்திலேயே ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்துவிட்டார்கள்.
நன்றி ஆகாயம் தமிழ்!
டாபிக்ஸ்