Swarnamalya Ganesh: சோசியல் மீடியாவில் அந்த மாதிரியான கமெண்டுகள்.. ‘அவ்வளவு வக்கிரம்’ - சொர்ணமால்யா பேட்டி!
Oct 16, 2023, 06:00 AM IST
சோசியல் மீடியாவில் வரும் நெகட்டிவான விஷயங்கள் பற்றி சொர்ணமால்யா பேசி இருக்கிறார்.
இது குறித்து சொர்ணமால்யா பேசும் போது, “சோசியல் மீடியாவில் நாம் தான் இருக்கிறோம். அது என்னவோ வேறு ஒரு ஜந்து கிடையாது. நம்மை சுற்றி இருக்கக்கூடிய சோசியல் மீடியா என்பது மிகவும் வக்கிரமாக இருக்கிறது. அதில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை. அது ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி.
எடுத்துக்காட்டுக்காக, மற்றவர்களுக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை நீங்கள் கமெண்ட் ஆக தட்டிப் பாருங்கள். அதற்கு கீழே, ஒரு 25 பேர் உங்களை கழுவி ஊற்றி இருப்பார்கள். முகவரிப் பின்னால் ஒளிந்து கொண்டு எல்லோராலும் இப்படி கோழைத்தனமாக சண்டையிட முடியும். அப்படி சண்டை இடுவது, திட்டுவது என்பது மிகவும் கோழைத்தனமான ஒரு செயல்.
இந்த காலத்தில் இந்த மாதிரியான சோசியல் மீடியாவில் இருந்து வரக்கூடிய விஷயங்கள் உண்மையிலேயே பாதிக்கிறது. குறிப்பாக இளம் வயதினரை மிகவும் பாதிக்கிறது. பெண்கள் அங்கு சென்று எதையாவது சொல்வதற்கு மிகவும் பயப்படுகிறார்கள். ஒரு மூர்க்கத்தனமான ஒரு கும்பலிடம் சென்று, அவர்களிடம் ஒரு விஷயத்தை எடுத்து சொல்வதால் என்ன நடந்து விடப்போகிறது.
அவர்கள் நம்முடைய விஷயத்தைப் புரிந்து கொண்டு ஆமாம் நீங்கள் சொல்வது சரிதான் என்று சொல்லி, மன்னிப்பு கேட்க போவதில்லை. காரணம், நம் வீட்டில் உள்ளவர்களே நாம் பேசும் பேச்சை பெரிதாக கேட்பதில்லை.. ஆகையால் நாம் எங்கு சண்டையிட வேண்டும் என்பதை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதுபோல எந்த மாதிரியான தளங்களில் நம்மை நாம் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
யாரையுமே முன்னதாகவே இவர்கள் இப்படித்தான் என்று எடை போட்டு கமெண்ட் அடிப்பதை நிறுத்துங்கள். இப்போது உள்ள காலத்தில் யாருக்குமே தனிமனித ஒழுக்கம் என்பது பெரிதாக இல்லை. அதனால் இந்த சமுதாயமே அவ்வளவு வக்கிரமாக மாறி இருக்கிறது. நீ முகவரி பின்னால் ஒளிந்திருந்து அந்த மாதிரியான கமெண்ட்களை அடிக்கும்பொழுதும், அந்த கமெண்டுகள் உன்னையே தான் அப்படியே பிரதிபலிக்கிறது. ஒரு வக்கிரத்தை இந்த சமுதாயத்தில் அந்த தெரியாத நபர் எடுத்து வைக்கும் பொழுது, அவரை பாவம் என்றுதான் சொல்ல முடிகிறது.
ஆகையால் எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது எதில் ஈடுபட வேண்டும், எதில் ஈடுபடக்கூடாது என்பது குறித்த ஒரு முன் யோசனையானது கண்டிப்பாக பெண்களிடம் இருக்க வேண்டும். அப்படி இருந்தாலே இந்த பிரச்சினை பாதியாக குறைந்து விடும்
நன்றி: தமிழ் இந்து திசை!
டாபிக்ஸ்